எனக்கு ஒரு நல்ல வழி கட்டுங்கள் அக்கா

அன்புள்ள அக்காக்களே எனக்கு ஒரு வழி காட்டுங்க நான் ஒரு ஏழை குடும்பத்து பெண் அப்பாவுக்கு அரசு வேலை இருக்கிறது இருந்தும் பிரயோஜனம் இல்லை அவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உண்டு எங்களை அவர் கவனிப்பது இல்லை என்னோட அம்மா இல்லன்னா நாங்க இப்போ உயிரோட இருந்திருக்க முடியாது நான் ரொம்ப பாசத்திற்காக எங்குனவள் மத்த பிள்ளைங்க எல்லாம் அவங்க அப்பாகுட போகும்பொ எனக்கும் அப்பாகூட போகணும் ஆசைபட்டதெல்லாம் வாங்கணும் இப்படி எவளவோ கற்பனை அனா அது எதுவும் நடக்கல உயிர் வாழவே புடிக்கல அப்போ தோணிச்சு எனக்குன்னு ஒரு லைப் இருக்கு அப்போ பாத்துக்கலாம்னு மனச தேத்திகிட்டு இருந்தேன் . மன நிம்மதி இலாததுநல நண்பர்கள் கூட பேசினா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு நெனச்சு நான் பேஸ் புக் யுஸ் பண்ணுவன் அக்கா அதுல எனக்கு நண்பர்களும் கிடைச்சாங்க நானும் நண்பர்களா தான் பேசினன் அப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது அப்போ அதுல ஒரு பய்யன் என்ன லவ் பனுரத சொன்னான் நான் முதல ஏற்க மறுத்தேன் அப்போ அவன் சொன்னான் அழகு முக்கியம் இல்லை நீ எனக்கு லைப் புள்ளும் கூடவே வந்தா போதும் அப்டின்னு சொன்னான் அப்புறம் நானும் லவ் பண்ண ஆரம்பிச்சன் ஒரு மாசம் நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தான் நான் ரொம்ப சந்தோஷ பட்டேன் நான் எதிர் பார்த்த குணம் உள்ளவனா இருந்தான் அவனும் ரொம்ப சந்தோசமா இருபதாகவும் சொன்னான். நான் ஒரு நாளும் உன்ன மிஸ் பண்ண மாட்டான் நியும் என்ன மிஸ் பண்ணாத அப்படி சொன்னான். எனக்கு மனசு கஷ்டமா இருக்கு நான் உன்ன பாகனும் உன்குட பேசனும் நனம் மீட் பனுவோம்னு சொன்னான் நானும் சரின்னு சொன்னன். நாங்க 2 பேரும் மீட் பன்னுனம். ஆன அவன் ரொம்ப டென்ஷன் ல இருந்தான். சரியாய் என்குட பேசல என்னோட முகத்த கூட சரியாய் பாக்கல தனக்கு ரொம்ப பயமாய் இருபதாகவும் வண்டி போலீஸ் கிட்ட மாட்டுனதவும் சொன்னன். நான் கொடுத்த கிப்டும் வாங்கி விட்டு போயிட்டு வர்றதா சொன்னன். எதுவும் நினைக்க வேண்டாம் ன்னும் சொன்னான். அப்புறம் கொஞ்சம் நேரம் தாண்டி கால் பண்ணி சாரி ன்னு சொன்னான் எதுக்குன்னு கேட்ட உங்கிட்ட பேச முடியா தத்துக்கு ன்னு சொன்னான். அப்புறம் மறு நாள் ஒழுங்க பேசல ஏன் என்று கேட்டதுக்கு சாரி நான் உனக்கு துரோகம் பண்ணிட்டன் என்ன மனிசிரு அப்படினு சொன்னான். அப்புறம் நீ என்ன நண்பனா ஏத்துகணும் ன்னு சொன்னான் நான் ரெண்டு பேர லவ் பண்ணியும் 2 பேரும் நீ நண்பன்ன எப்போவும் பேசலாம் அனா மனைவியா ஏத்துக்க முடியாதுன்னு சொல்லுராங்க ஏன் அக்கா நான் மனைவி ஆக தகுதி இல்லையா என்கிட்ட அன்பு காட்ட யாரும் இருக்க மட்டங்களா நான் லவ் பண்ணுன 2 பேரு கிட்டயும் எதுவும் மறச்சதில நான் உண்மையாதான் அக்கா லவ் பண்ணுனன் ஏன் என்ன புரிஞ்சுக்க மாட்ரங்க இனி லைப் நெனச்ச பயமா இருக்கு அக்கா நான் யாராவது பழக்கம் இலாதவங்க கிட்ட பேசுறதுக்கு ரொம்ப பயபடுவன். இப்படி இருக்கும்போ யாருன்னு தெரியாதவங்களா கலியாணம் பண்ணிக்க பயமா இருக்கு அவங்க எப்படி பட்டவங்க நான் எதிர் பார்த்த குணம் உடையவரா இருபங்களா சொல்லுங்க அக்கா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் லவ் பன்னுனவர மறக்க முடியாம ரொம்ப கஷ்டபடுறன் எனக்கு ஒரு வழி சொல்லுங்க அக்கா ப்ளீஸ்

படங்களை பார்த்து இன்றைய இளம் தலைமுறை கெட்டுபோகுதுன்னு நினைத்ததுண்டு,ஆனால் அது இவ்வளவுதூரம் நடக்கும்னு இப்போ தெரியுது.
உன் நிலை புரிகிறது,வீட்டில் அப்பாவின் பாசம் இல்லை சரி அம்மா என்ன பன்றாங்க?கூட பிறந்தவங்க யாரும் இல்லையா? உன்னைப்போல எத்தனை குழந்தைகள் இருக்காங்க தெரியுமா? அன்னை,தந்தை இருவரும் இல்லாமல் வளரும் குழந்தைகள் பார்த்திருக்கையா?பார்த்தாலும் உனக்குள் பச்சாதாபமும்,சுய இறக்கமும்தான் வரும்.ஆனால் அது தவறு உன்னுள் ஒரு நம்பிக்கை வளரனும்,யாருன்னு தெரியாதவருடன் எப்படி பேசினாய்?பழகினாய்? இதுவரை அவனின் சொல்லுக்கே கட்டுப்பட்டு நீ நடந்திருப்பது உன் பதிவில் தெரிகிறது,உன் விருப்பமென்ன?உனக்கு பிடித்ததை செய்தாயா?இல்லையே,படிப்பும்,வாழ்வியல் முன்னேற்றமும் இருக்கவேண்டிய உன்மனதில் சுய இறக்கம் அதிகமாகவே இருக்கிறது,அதனால் குழப்பங்கள் மண்டிகிடக்கின்றன.
உனக்கு உன் மனதைத்தவிர அனைவரும் மூன்றாமவர்தான்,உன் எண்ணம் நல்லதாக இருக்கட்டும்.செய்த தவறுக்கு நியாயம் சொல்லாதே,ஏன் வறுந்துகிறாய்? நீ இனி ஃபிரண்டாக்கூட வேணாம்னு சொல்லிடு,அந்த ஃபேஸ்புக் ஐடியை குளோஸ் பண்ணு, படி, ஓவியம் வரை,பிடித்ததில் மனதை செலுத்து,உனக்குள் தெளிவை கொண்டுவா.எல்லாம் சரியாகும் வீணாக மனதை குழப்பாதே. உன் மனதை உன் கட்டுப்பாட்டில் வைத்திரு.

///நான் லவ் பண்ணுன 2 பேரு கிட்டயும் எதுவும் மறச்சதில நான் உண்மையாதான் அக்கா லவ் பண்ணுனன் ஏன் என்ன புரிஞ்சுக்க மாட்ரங்க இனி லைப் நெனச்ச பயமா இருக்கு அக்கா நான் யாராவது பழக்கம் இலாதவங்க கிட்ட பேசுறதுக்கு ரொம்ப பயபடுவன். இப்படி இருக்கும்போ யாருன்னு தெரியாதவங்களா கலியாணம் பண்ணிக்க பயமா இருக்கு அவங்க எப்படி பட்டவங்க நான் எதிர் பார்த்த குணம் உடையவரா இருபங்களா சொல்லுங்க////

என்ன நடக்குது? ஆணும் பெண்ணும் நட்பா பழகமுடியாதா? உன் மனது அதை ஏற்கலைன்னா நீ பெண் தோழிகளோடு மட்டும்பழகு. உன் மனதில் என்ன இருக்குன்னு முதலில் நீ தெரிந்துகொள். அம்மா அப்பா பார்த்து உனக்கு செய்வது நீ கெட்டுப்போக இல்லை அரிய? தாய் தந்தை என்றும் தன் குழந்தை சீரழிய எண்ணமாட்டார்கள். அவர்களுடன் மனம்விட்டு பேசு,உனக்கு பிடித்தது ,அவர்களின் செய்கையில் பிடிக்காததை சொல்.காதல் திருமனம்தான் பண்ணிக்குவேன்னு நீ சொன்னால் உன்னுள் நம்பிக்கைவரும்வரை யாரோடும் நெருங்கி பழகாதே. உன்மனதிலும் ஆசைகளை வளர்க்காதே.

உங்கள் பதிவை படித்ததில் இருந்தே நீங்க எவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கீங்கன்னு புரியுது.. உங்களுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.. அப்பா வழியில் அன்பு கிடைக்கவில்லை யென்றால் என்ன? அம்மா இருக்காங்க இல்லையா.. அவர்களுக்காக நீங்க இருக்கலாம்ல.. நீங்க ஏன் வேறொருவர் அன்பிற்கு ஏங்க வேண்டும்.. தாயின் அன்பை விட எதுவும் சக்திவாய்ந்தது இல்லை.. இப்போ இருக்கும் உலகில் நீங்க எங்கே இருக்கீங்க.. நல்லா தெரிஞ்ச நண்பனே எப்படி மாறுவான் என்று எத்தனை பத்திரிக்கைகள் மீடியாக்கள் மூலம் பார்த்திருப்பீங்க.. எப்படிங்க பேஸ்புக் மூலம் இரண்டு பேரை லவ் பண்ணீங்க.. அவர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரிந்திருக்கும்.. எப்படியோ முதலிலேயே சொல்லிட்டாங்களே அதுவே சந்தோஷம்.. இனி இந்த மாதிரி அன்பு கிடைக்கவேண்டும் நமக்குன்னு ஒருதர் இருக்க வேண்டும்ன்னு நினைச்சி யாராவது நெருக்கமா பழக வந்தா ஏமாறாதீங்க.. நீங்க கொஞ்ச கஷ்டபடுற மாதிரி தெரிஞ்சாலே பசங்க அவ்வளவு தான் இறக்க காட்றேன்னு நம்ப வைத்து கழுத்தை அறுப்பாங்க.. நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.. இனி நடக்க போவது.. நீங்க அதிகமா யாரையும் அதுவும் ஆண்களை நம்பாதீங்க.. எல்லோரும் அப்படின்னு சொல்லவரல இப்போதைக்கு வேண்டாம்ன்னு சொல்லவந்தேன்.. அம்மாவோடு மனசை விட்டு பேசுங்க.. இல்லை நல்ல பெண் தோழிகளோடு பேசுங்க உங்களுக்கு எதில் ஆர்வம் அதிகம் உள்ளதோ அதை பண்ணுங்க.. உங்க மனசை ரொம்ப ரிலாக்சா வச்சிக்கோங்க.. எதற்கும் கவலை வேண்டாம்.. இந்த உலகில் பெண்கள் சாதிக்காத விஷயம்ன்னு ஒன்றும் இல்லை.. நீங்க முதலில் உங்களை பெருமையா நினைங்க.. உங்களுக்கு நீங்கதான் சக்தி.. மற்றவர்கள் பற்றி உங்களுக்கு என்ன கவலை.. உங்கள் எதிர்காலத்தை அம்மா பார்த்துக்குவாங்க.. நீங்க அம்மாக்கு ஆறுதலா இருங்க.. இந்த அறுசுவையிலே எத்தனை விதமான கலைகள் உள்ளது.. இதில் ஆர்வம் செலுத்துங்க.. மனசு ரிலாக்ஸ் பண்ண நம்ம தோழிகள் இருக்காங்க.. இங்கே வந்து உங்க சுகம் துக்கத்தை ஷார் பண்ணுங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அக்கா ரொம்ப நன்றி நான் பண்ணினது நியாயம் ன்னு சொல்லல நான் பண்றது தப்புதான் அனா அம்மாவோட அன்பு எனக்கு இருக்கு அனா சில நேரம் டென்ஷன் ல ரொம்ப திட்டுராங்க எனக்கு 2 அக்கா 1 அண்ணா அனா அண்ணாவும் ஒழுங்க என் கூட பேசுறது இல்லை ஆம்பளைங்க அன்பு கீடச்சதில ன்னு சொல்லலாம் அக்கா யாருன்னு தெரியதவங்ககிட நேர பாக்க பயமா இருந்கிறது நலதான் அவங்க யாரு எப்படி பட்டவங்க தெரியாம பேசி பழகினன். இப்போ என்ன தெரியுமா சொல்லுறான் அவன் ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பண்ணுனானாம் அவங்க 2 பேருக்குள்ளும் சின்ன பிரசினயம் அப்போ அவன் மனசு ரொம்ப கஷ்ட பட்டதாம் அப்போ உன்ன நான் லவர் அஹ ஏத்துகிட்டன் இப்போ அவ என்குட பேசுற நான் அவள்தான் லவ் பண்ணுறன் உன்ன மனைவிய ஏத்துக்க முடியாது சாரி ன்னு சொலுறன். என்கிட்ட நண்பனா ஹெல்ப் பண்ணுன்னு கேட்டு இருந்தா நான் ஹெல்ப் பண்ணி இருப்பன் அக்கா அவங்க சந்தோசத்துக்காக என்ன யுஸ் பன்னிகிட்டங்க அத நெனச்சாதான் இன்னும் கவலைய இருக்கு அக்கா இப்போ நடந்தது பரவா இல்லை இனி எனக்கு வர போற வாழ்கையும் இப்படி இருந்தா என்ன பண்ண முடியும் சொல்லுங்க இப்போ எனக்கு அம்மா இருகாங்க அம்மாவோட காலம் கழித்து என்ன யாரு பாத்துபங்க சொல்லுங்க அப்போவும் என்னோட வழக்கை இப்படி இருந்தா நான் அன்புக்கு என்ன செய்ய முடியும். இப்போ உலகத்தில நடக்கிறது பாத்திட்டு இருக்கீங்க இல அக்கா பெரியவங்க பாத்து வைக்கிற திருமணமும் டிவேர்ஸ் வரைக்கும் போகுது கலியாணம் பண்ணாம என்னல இருக்க முடியும் அனா நான் பொறந்த வீட்டுல நிம்மதி இல்லை அக்கா கடைசி வரைக்கும் அன்பு காட்ட யாராவது இருபங்களா அல்லன இத இது மாதிரி வரபோரவங்களும் இருபங்களா அதுதான் அக்கா மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு

மேலும் சில பதிவுகள்