மசாலா ப்ரட் டோஸ்ட்

தேதி: September 27, 2006

பரிமாறும் அளவு: 3 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் துண்டுகள் - 6
முட்டை - ஒன்று
நன்கு காய்ச்சிய பால் - 150 மில்லி லிட்டர்.
இஞ்சி பூண்டு - 1/4 ஸ்பூன்.
மிளகாய்த் தூள் - 1/2 டீ ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்.
ஏலக்காய் தூள் - 1/4 டீ ஸ்பூன்.
சுக்குத் தூள் - ஒரு சிட்டிகை.
ஓமம் - 1/4 டீ ஸ்பூன்.
கரம் மசாலா - ஒரு சிட்டிகை.
சர்க்கரை - 1/4 டீ ஸ்பூன்.
உப்பு - ஒரு சிட்டிகை.
கொத்தமல்லித் தழை - 2 டீ ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெண்ணெய் அல்லது நெய் - டோஸ்ட் செய்ய.


 

ஒரு அகண்ட கோப்பையில் எல்லா மசாலாவையும் போட்டு லேசாக நீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.
அதில் முட்டையை ஊற்றி நன்கு கலக்கும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது பால், கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
நாண் ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து சூடாக்கி நெய்யோ அல்லது வெண்ணெயோ போட்டு, ப்ரெட்டை முட்டை-பால் கலவையில் முக்கி எடுத்து, கல்லில் மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்து பரிமாறலாம்.


காலை நேரத்தில் பசியாற சிற்றுண்டியாகவும், மாலை நேரத்தில் ஸ்நாகாக செய்து கொடுக்கலாம்.
கறிவேப்பிலை, சிட்டிகை தனியாத் தூள் இவைகளும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல இருந்தது.ஓமம் இல்லாததால் மற்றவை சேர்த்து செய்தேன்.அருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.