தைராய்டினால் முடி கொட்டுது,உடல் எடை கூடுது எதாவது சொல்லுங்களே ப்ரண்ட்ஸ்..

எனக்கு தைராய்டு பிரச்சினை இருக்கு,மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைஎடுத்துக் கொண்டுதான் இருக்கேன் 1 வருடமா...கடந்த 7 மாதமா முடி அதிகமா கொட்டுது ,முடி கொட்டாமல் நிற்க எதாவது மருந்து அல்லது வீட்டு வைத்தியம் இருந்தா சொல்லுங்க தோழிகளே .முடி கொட்டுவது நிற்கவே நிற்காதா???? உடல் எடை வேற கூடிக்கொண்டே போய்க்கிட்டே இருக்கு...எதாவது வழி சொல்லுங்க ப்ரண்ட்ஸ்...

எனக்கும் இந்த பிரச்சனை ஒரு வருடமா இருக்கு தயவுசெய்து பதில் கூறுங்கள் தோழிஸ்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

யாராவது வந்து பதில் சொல்லிட்டு போங்க ப்ரண்ட்ஸ்...ப்ளீஸ்..

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவிதா, தைராய்டுக்கு மாத்திரை எடுத்தால் உடல் எடை கூடித்தான் போகும். தலை முடி கொட்டுவது அந்த மாத்திரைகளின் வீரியத்தால் கூட இருக்கலாம். நீங்கள் சம்பந்தப்பட்ட அந்த மருத்துவரிடமே முடி கொட்டுவதற்கான தீர்வையும் கேட்டு மாத்திரைகளை மாற்றி தர சொல்லி கேட்கலாம். சாதாரணமாக முடி கொட்டுவதற்கு வீட்டு வைத்தியங்களையும், இயற்கை வைத்தியங்களையும் சொல்லலாம். உங்களுக்கு முடி கொட்டுவது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் தானே. அதனால் நீங்க மருத்துவரிடம் கேட்டால் சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கு ஒரு டவுட் க்ளியர் பண்ணுங்க அக்கா.............

சங்கரிலதா,

என்ன டவுட் சொல்லுங்க. தெரிஞ்சா க்ளியர் பண்றேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அக்கா நான் 30 வீக் கர்பமா இருக்கேன் இப்போ குவைத் ல இருக்கேன் ,டெலிவரி இந்தியா ல வர 10 தேதி ஊருக்கு போரேன் டாக்டர் ட்ராவல் சர்டிபிகேட்கொடுத்துட்டாங்க ,ஆனா எனக்கு பார்த்த பைல் இங்கு தான் உள்ளது அந்த பைல் உள்ள விவரம் ஏதாவது தேவைபடுமா அதோட ஜெராக்ஸ் எதாவது தேவைபடுமா[அதில் தான் மந்திலி செக்கப் விவரம் ஊசி போட்டது எல்லாம் இருக்கு ]என்னிடம் ஸ்கேன் ரிப்போர்ட் &பிளட் ரிப்போர்ட் எல்லாம் இருக்கு இது போதுமா இல்ல டாக்டர் கிட்ட உள்ள பைல் உள்ள விவரம் ஏதாவது தேவைபடுமா சொல்லுங்க அக்கா.............

எப்பவுமே இந்தியாவில் நாம கொடுக்கும் ரிப்போர்ட்ஸ் ஏற்பதில்லை. அவங்க ஒரு முறை மீண்டும் டெஸ்ட் எடுக்கனும், ஸ்கான் பண்ணனும்னு சொல்வாங்க. நான் என் 2 பிள்ளைகளுக்கும் அப்படி தான் போனேன். ஆனாலும் ஒரு ரெஃபெரன்ஸூக்கு நம்மோட பழைய ரிபோர்ட்ஸ் நம்ம கையில் இருப்பது நல்லது. எது சந்தேகம் என்றாலும் பழசை அவன்க பார்க்க உதவும். அதனால் அவசியம் எல்லா ரிபோர்டும் கொண்டு போங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா ரொம்ப நன்றி அக்கா, நான் டாக்டர் கிட்ட கேட்டு வாங்கி கொள்கிரேன் அக்கா என் சந்தேகத்தை தீர்த்ததர்க்கு மிக்க நன்றி அக்கா....................

-

-

மேலும் சில பதிவுகள்