குறைந்த முதலில் நிறைந்த லாபத்துடனான தொழில்

தற்ச்சமயம் அரசால் பிளாஸ்டிக் பைகள் தடை செய்ய பட்டு வருகின்றது. இந்நேரத்தில், பிளாஸ்டிக் பைகளுக்கு
மாற்றக மெலிதான துணியிலான பைகளுக்கு (கேரி பைகள்) தற்சமையம் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. கடைகாரர்கள் விரும்பினால் அவர்களின் விலாசம் மற்றும் பெயர் பிரிண்ட் போட்டும் தரலாம். இதற்க்கு என தனியான மூலதனம் என அதுவும் அதிகம் தேவையில்லை. ஆர்டர்களை பெறுவதுதான் வேலை. கணிசமான லாபம் உடையது. பெண்கள், ஆண்கள், மாணவர்கள் என அனைவரும் செய்யலாம். மேலதிக விவரங்கள் தேவை எனில் தொடர்பு கொள்ளவும். உதவி செய்ய காத்திருக்கிறேன். தொடர்பு கொள்ள : fxbasheer@gmail.com

வணக்கம் திரு. பஷீர் அவர்களே. தங்கள் பதிவு பார்த்தேன். மேலும் விவரம் தர முடியுமா? நான் கோவையில் இருக்கிறேன். நன்றி.

மின்னஞ்சல் முகவரி வெளியிட தடை இல்லை. இணையதள முகவரி கொடுப்பதுதான் கூடாது. மின்னஞ்சல் முகவரி கொடுக்கலாம்.

இது போல ஒரு நல்ல ஐடியா கொடுத்த உங்களுக்கு நன்றி.முகவரி கொடுங்கள்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

அன்பு சகோதரிக்கு,
தற்ச்சமயம் அரசால் பிளாஸ்டிக் பைகள் தடை செய்ய பட்டு வருகின்றது என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனவே பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றக மெலிதான துணியிலான பைகளை (கேரி பைகள்) நாம் சந்தை படுதுவதன் மூலம் சமூக விழிப்புணர்வு மற்றும் நாம் வாழும் பூமிக்கு நம்மாலான மிகப்பெரிய உதவியினை செய்ய முடிவதுடன், நமக்கும் கணிசமான லாபத்துடனான குறைந்த பட்சம் 5 முதல் 20 % வரையிலான லாபத்துடன் சிறிய‌ முதலீடு / முதலீடே இல்லாமல் கூட எவ்வித டெபாசிட்டும் இல்லாமல் நாம் சம்பாதிக்க முடியும். தேவை வேலையில் ஆர்வம், தன்னம்பிக்கை, விடாமுயற்ச்சி மட்டுமே. நமது இதொழிலின் மூலம்,
1. பிளாஸ்டிக் எனும் மிக கொடிய அரக்கனை ஒழித்து, இப்பூமியை பாது காக்கும் மிக புனித பணி.
(பிளாஸ்டிக் கேர் பேக் குகள் எவ்வளவு பெரிய அரக்கன் என்பதை சொல்ல மிகப்பெரிய பதிவை போட வேண்டி வரும்.)
2.பிளாஸ்டிக் பைகளுக்கு அரசின் தடை இருப்பதால், சந்தை படுத்துவது மிக இலகுவாக இருக்கும்
3. எவ்வித டெபாசிட்டும் இல்லை.
4.சிறிய‌ முதலீடு / முதலீடே இல்லாமல் இத்தொழிலை செய்யலாம்.
5.பகுதி நேரமாகவோ / முழு நேரமாகவோ படித்து கொண்டிருப்பவர்கள், இல்லதரசிகள், ஆண். பெண், வேலையில் இருப்போர் என அனைவரும் இத்தொழில் செய்யலாம்.
6.இதொழிலுக்கென தனியாக அலுவலகமோ/ கடையோ அவசியம் இல்லை. வீட்டிலிருந்து கொண்டே செய்யலாம்.
7.மிக அதிகமான லாபம்.

இத்தொழில் செய்ய ஆர்வம் இருந்தாலோ / இன்னும் அதிகமான விவரங்கள் தேவை என்றாலோ தொடர்பு கொள்க: fxbasheer@gmail.com

நன்றி admin

உங்கள் பதிலுக்கு நன்றி.வீட்டில் இருந்தபடியே சம்பாரிக்க இந்த ஐடியா சுப்பர்.முதலில் எப்படி துவங்குவது?என்ன செய்யனும்?

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

அன்பு சகோதரி வித்யா வுக்கு
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றக மெலிதான துணியிலான பைகளின் (கேரி பைகள்) மொத்த கொள்முதல் விலை பட்டியல் மற்றும் மாதிரி புகை படங்களை அனுப்புகிறேன். பாருங்கள், சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள். எவ்வளவு லாப சதவிகிதம் வைப்பது போன்றவற்றை நான் கூறுகிறேன். அல்லது 1 கிலோ பைகளுக்கு ரூ.10 முதல் 20 என்று வரையிலான ஒப்பந்த அடிப்படையிலும் செய்யலாம். அதன் பின் கடைகளில் ஆர்டர்கள் எடுக்க வேண்டியதுதான் வேலை. பெயர், முகவரி பிரிண்ட் போட்டு அல்லது சாதா பைகளுக்கு ஆர்டர்கள் எடுக்க வேண்டியது. இது போன்ற அனைத்து விவரங்களையும் உங்களுக்கு அனுப்புகிறேன், தயவு செய்து எனது மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். காரணம், நான் அறுசுவை.காம் யில் முழு நேரம் இருப்பது சாத்தியமில்லாதது. எனவே உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் பதில் அளிக்க இயலாத வண்ணம் ஆகிவிடும். எனவே, fxbasheer@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் முகவரியில் தொடர்பு கொள்கிறேன்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி. உங்கள் மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்கிறேன்.

நல்லது. தங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறேன்

மேலும் சில பதிவுகள்