udupi sambar

i wanted to know how to make udipi smabar plese tell i waned try this for my daughters birthday oct 18 th

துவரம்பருப்பு-ஒரு கோப்பை
சாம்பார் வெங்காயம்-இரண்டு கோப்பை
தக்காளி-இரண்டு
பச்சை மிளகாய்-இரண்டு
புளி-எலுமிச்சையளவு
தேங்காப் பூ-நான்கு மேசைக் கரண்டி
மிளகாய்த் தூள்-இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள்-இரண்டு தேக்கரண்டி
மஞ்சத்தூள்- ஒரு தேக்கரண்டி
கடலைபருப்பு-ஒரு மேசைக் கரண்டி
உளுத்தம்பருப்பு-இரண்டு தேக்கரண்டி
வெந்தயம்-ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
பெருங்காயம்-அரை தேக்கரண்டி
வெல்லம்- நெல்லிக்காய்யளவு
உப்புத்தூள்-நான்கு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு சீரகம்-ஒரு தேக்கரண்டி
உ.பருப்பு-அரைதேக்கரண்டி
காய்ந்தமிளகாய்-இரண்டு
தேங்காய் எண்ணெய்-நான்கு மேசைக் கரண்டி.

பருப்பில் சிறிது எண்ணெயை ஊற்றி குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
கடலை பருபு,உளுத்தபருப்பு,வெந்தயம் ஆகியவற்றை வெரும்சட்டியில் போட்டு இளஞ்சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.இதனுடன் தேங்காய், பாதி கறிவேப்பிலை, மற்றும் எல்லாத்தூள் வகைகளையும் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.புளியை கரைத்து வடிகட்டிகொள்ளவும்.வெங்காயத்தை எண்ணெய்யில் வதக்கி வைக்கவும்.பிறகு புளி கரைசலில் அரைத்த விழுதை சேர்த்து, தக்காளி, பச்சைமிளகாய், பெருங்காயம், உப்புத்தூளை சேர்த்து நான்கு கோப்பை தண்ணீரை ஊற்றி நன்கு கலக்கி கொதிக்கவிடவும்.தொடர்ந்து வதக்கிய வெங்காயத்தை போடவும்.குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியவுடன்,வேகவைத்த பருப்பு,மற்றும் வெல்லத்தை கரைத்து ஊற்றவும்.சட்டியில் மீதியுள்ள எண்ணெய்யை காயவைத்து தாளிப்பு சாமான்களை போட்டு தாளிக்கவும்.சுவையான உடுப்பி சாம்பார் தயார்.
partyக்கு முதல் நாளே தயாரித்து குளிர் சாதன பெட்டியில் வைத்துவிடவும்.தேவைப்படும் போது வெளியே எடுத்து சிறிது சூடாக்கி பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

அன்பின் மனோஹரி மேடம், சாம்பார் மிகவும் சுவையாக வந்தது. நான் உடுப்பி சாம்பாருக்காகவே அங்கு அடிக்கடி போவேன். அவ்வளவு விருப்பம். நான் பண்ணியது உடுப்பி அளவுக்கு இல்லாவிட்டாலும் மிகவும் அருமையாக இருந்தது. பூசணிக்காய், கத்தரிக்காய் & சுரக்காய் சேர்த்தேன். சாம்பார் வடைக்கும் நன்றாக இருந்தது. எனது கணவர் சொன்னார் இந்த சாம்பார் உடுப்பி சாம்பாரைவிட நன்றாக இருக்கிறது என்று. மிகவும் நன்றி.
-நர்மதா :)

நான் நேற்று கொழுக்கட்டை செய்தேன். அதனுடைய பூரணம் அதிகம் ஆகி விட்டது, அதனை வைத்து வேறு ஏதேனும் செய்ய முடியுமா? யாரேனும் எனக்கு உடனடியாக பதில் கொடுங்க please.

என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

கொழுக்கட்டை பூரணத்தை வைத்து போளி, சுளியன் போன்றவை செய்யலாம். மைதா மாவை( கோதுமை,இட்லி மாவையும் கூட உபயோகப்படுத்தலாம்) சிறுது உப்பு சேர்த்து திக்காக கரைத்து அந்த மாவில் பூரணத்தை நனைத்து காய வைத்த எண்ணெயில் போட்டு 2 நிமிடங்கள் கழித்து எடுங்கள். எண்ணெய் சுளியன் மூழ்கும் அளவு இருக்கும் வேண்டும். போளி செய்ய மைதா மாவை நன்கு பரோட்டாவிற்கு பிசைவது போல பிசைந்து 3-4 மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அதனை சப்பாத்தி செய்யும் அளவு உருண்டைகளாக்கவும். ஒரு உருண்டையை எடுத்து அதனுள் பூரணத்தை வைத்து உருட்டி, சப்பாத்திகளாக இடவும்( கையால் தட்டினால் மெலிதாக பூரணம் வெளியில் வராமல் இருக்கும்).தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய வைத்து இந்த போளிகளை சப்பாத்தி சுடுவது போல் சுட்டு எடுக்கவும்.

தேவா ஆள் அட்ரஸ்ஸையே காணோம்....
இங்கே தான் இருக்கீங்களா??
இங்கே வாங்க..

சுபா, நான் அறுசுவை அட்டெண்டண்ட்ஸ் பக்கம் போய் ப்ரசண்ட் மிஸ்னு சொல்லலாம்னு பார்த்தா அந்த பதிவில் நுழைய முடியல. நான் டார்வினுக்கு பிராஜக்ட் விஷயமா போயிட்டதால இந்தப் பக்கமே வர முடியல. சைட்டில் இருந்துக்கிட்டு எங்க இண்டெர்நெட் பக்கம் பாக்கறது. திவாகர் எப்படி இருக்கான்? வால்தனமெல்லாம் ஊர் போயிட்டு வந்தப் பிறகு அதிகமா ஆயிருக்கா குறைஞ்சிருக்கா? ஊருக்கு போயிட்டு வந்ததைப் பத்தி நீங்க எழுதியிருந்தத படிச்சேன். பதில் கொடுக்கக்கூட முடியல நேத்து. ஜானகி எனக்கு என்னாச்சுன்னு போன் பண்ணியே கேட்டுட்டாங்க. கிறிஸ்துமஸ்க்கு அப்புறம் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். ஆமாம் கேக்கணும்னு நினைச்சேன். தேவாதானேன்னு அட்மின்கிட்ட எப்படி சரியா கேட்டீங்க. ஆஸ்திரேலியாவுக்கு வரணும்னு அவரும் 1 வருஷமா சொல்லிக்கிட்டே இருக்கார். நானும் ஒவ்வொரு முறையில் வீட்டில் கணவர், இன்னும் ஊரிலிருக்கும் என் அப்பா,அம்மா, இங்கே என் தம்பின்னு எல்லார்கிட்டயும் வர்றார்னு சொன்னப்பிறகு பிறகு இப்ப இல்லைன்னு சொல்லிடுவார். இந்த முறையும் இதே கதைதான். ஆனால் என் தலைதான் உருளுது.

ஹலோ தேவா madam,
மிகவும் நன்றி உடனடியாக பதில் கொடுத்தற்கு, இன்று உடனே போளி செய்து பார்த்து விடுகிறேன்.

என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

சுபா நலமாக இருக்கிறீர்களா திவாகர் நலமா ஊருக்கு போய்விட்டு வந்ததும் ரெம்பவும் உற்சாகமாக இருக்கிறீர்கள் போல எப்பவும் இப்படியே சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள். நான் வெஜ் சமைச்சிட்டா போச்சு இதுக்கு போய் சமையல் எல்லாம் சுமார்தான்னு சொன்னா எப்படி இவ்வளவு அழகான ரெசிபிகள் கொடுக்குறீங்களே சூப்பரா சமைப்பீங்க என்று தெரிகிறதே. எங்கங்க அறுசுவைக்கு முன்னை போல வரவே நேரம் இல்லை அப்படியே வந்தாலும் சும்மா பார்வை மட்டுமே இடமுடிகிறது இதுல எங்க குறிப்புகள் கொடுக்க பார்க்கலாம் நேரம் கிடைக்கும் போது குறிப்புகள் கொடுக்கிறேன்.எனக்கு அந்த த்ரெட்ல உள் நுழைய முடியலை அதனால தான் இங்கே பதில் போட்டு இருக்கேன்

அன்புடன் கதீஜா

ஹய் தேவாவா,
ஆஹா சுபா சொன்னது சரிதானா..
என்னென்னவோ பேசனும்னு நெனச்சேன் இப்ப மனசில் ஒன்னும் வர்ல அப்ரமா யோசிச்சு பேசரேன் தேவா

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்