வாழ்த்துங்கள் தோழிகளே,

வணக்கம் தோழிகளே,
திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றது. அறுசுவையில் மலைவேம்பு பற்றி நிறைய கருத்துக்களை பகிர்ந்துள்ளேன் நிறைய வருத்தங்களோடு. ஆனால் இன்று மிகவும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள அறுசுவையை நாடி வந்திருக்கிறேன். கடவுளின் கிருபையினால் நேற்றுதான் மருத்துவரிடம் சென்று நான் கன்சீவ் ஆகி இருப்பதை உறுதி செய்தோம். என்னை வாழ்த்துங்கள் சகோதரிகளே.என்னுடைய சந்தேகங்களையும் பதிவிடுகிறேன். நிவர்த்தி செய்து உதவுங்கள்

ரொம்ப சந்தோஷமான செய்தி சொல்லியிருக்கீங்க.பெஸ்ட் ஆப் லக் பா.எப்போதும் இதே மாதிரி ஹாப்பியா இருங்க.வயிற்றீல் உள்ள பாப்பாக்கு மிக நல்லது.ஆமா டீரீட் எங்கே.அறுசுவையின் சார்பாக முதல் வாழ்த்துக்கள் தோழீ.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். கடவுள் என்றும் துணை இருக்கட்டும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பூர்ணிமா,வாழ்த்துக்கள்.be happy......

கங்கிராட்ஸ் பூரணி அக்கா டேக் கேர் ஆப் யுவர் ஹெல்த் என்றும் ஆரோக்கியமுடன் வாழ எல்லாம் வல்ல பிதாவை இறைஞ்சுகிறேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மனம் கனிந்த வாழ்த்துக்கள் தோழியே...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துக்கள் பூர்ணிமா . உங்கள் பகிர்வு குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கும் மற்ற தோழிகளுக்கு கண்டிப்பாக நம்பிக்கையை தரும்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

வாழ்த்துக்கள் :) நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்து எங்களுடன் பகிர்ந்துகொள்ள வருவீங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மனமார்ந்த வாழ்த்துகள் தோழி.உடம்ப நல்லா பாத்துகோங்க பா.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

நல்லா ஓய்வு எடுங்க, happya இருங்க

vidyaharini,VanithaVilvaar, kalai, kanimozhi, sumibabu, karthikarani, swarnavijayakumaar, priyanka,sankareshwari
வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
எனக்கு ஒரு சந்தேகம், தெரிந்தால் தீர்த்து வையுங்கள்.
Progesterone tablets (Strone 200mg) யை வாய் வழியாக காலை, மாலை இருவேளையும் எடுத்துக்கொள்ள சொல்லி இருக்கிறார்கள். இதைப்பற்றி தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்