நடை பயிற்சி

நான் தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளேன்.. தற்சமயம் நடை பயிற்சி சிறந்தது என்பார்கள். வெளியில் சென்று நடை பயிற்சி மேற்கொள்ள இயலாத காரணத்தால் வீட்டின் அறையிலும் மொட்டை மாடியிலும் நடக்கிறேன்.. சிறிய பரப்பளவு உள்ள இடத்தில் நடப்பதால் கொடி சுற்றுதல் போன்ற பிரச்சனை ஏதேனும் வருமா?? இல்லை வீட்டிலே நடப்பது நல்லது தானா??? ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடப்பது நல்லது???

தேவையில்லாமல் மனதை போட்டு குழம்ப வேண்டாம்.வீட்டிலே நடை பயிர்ச்சி செய்யலாம்.30 நிமிடம் செய்யிங்க.போதும்.சுலபமான வீட்டு வேலைகள் செய்யிங்க.அவ்வளவு தான்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

மொட்டைமாடியிலேயே நடக்கலாம்.ஒன்னும் பிரச்சனை இல்ல 30 லேயிருந்து 1மணி நேரம் நடக்கலாம்.
ஹெல்தி ஃபுட்டா சபிடுங்க. இதமான பாடல்கள் கேளுங்க.மனதை ஜாலியா வச்சுகோங்க. நோ டென்ஷன்.

veetlaye nadakallam ya.atha vita madipadila mathuva 4 times are erakina kuda pothum.etha 6 monthuku apram thaan pannaum.ungaluku 8 month athan sonnen.ethuvum walking mathiri thaan.take care sister.......

நன்றி தோழிகளே.. தாமதமாக பதில் போட்டமைக்கு மன்னிக்கவும்

மேலும் சில பதிவுகள்