பட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன?

எனது அருமை அறுசுவைத் தங்கங்களே! சிங்கங்களே! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பட்டி ஆரம்பமாயாச்சு ...:-)

தோழி கவிசிவா அளித்த அருமையான விவாதிக்க தற்போது மிகவும் அவசியமான தலைப்பு...நமது நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் விசயங்களைப் பற்றி பேச இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்பில் சிறிய மாற்றங்களோடு .....

**********************************************************************
பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்குள்ளாக காரணம் ..

1.பெண்களின் நடை உடை பாவனையே.,
2.பெண்களை போகப் பொருளாக பார்ப்பதாலே.,
3.பெண்களிடம் தட்டிக்கேட்கும் மனப்பான்மையின்மையே (தையிரியமின்மை)
************************************************************************

பொது இடம் என்பது பார்க், பீச், கோயில், குளம் என்பதோடு இல்லாமல் இன்றைக்கு பெண்களும் அதிகமாக பங்குகொள்ளும் பொது தளமாக இருக்கும் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தபட்டி பயங்கரமா பிச்சு உதற வசதியா நீதிமன்றக்களத்தை தேர்ந்தெடுத்தாச்சு.. தோழிகளே நீங்க கருப்பு கோட்டு போட்டு பிச்சு உதறப்போறீங்களோ இல்லை கிழிச்சு எறியப்போறீங்களோ எனக்கு தெரியாது ....நான் உங்ககிட்ட கேட்டுக்கறது ஒன்னே ஒன்னுதான்.. வேற என்ன ?? அறுசுவை விதிகளையும், பட்டியின் விதிகளையும் மீறாமல் உங்கள் வாதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

பட்டி விதிமுறைகள்:
யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்

பட்டி ஆரம்பிச்சாச்சா :). வணக்கம் & வாழ்த்துக்கள் நடுவரே!. என் தலைப்பை தேர்ந்தெடுத்ததற்கு முதலில் என் நன்றிகள். மனதில் இருக்கும் கோபங்கள் ஆதங்கங்கள் எல்லாவற்றையும் கொட்ட களம் அமைத்து கொடுத்த நடுவருக்கும் அறுசுவைக்கும் ஆயிரம் ஆயிரம் நன்றிகள்!

பொது இடங்களில் சில ஆண்கள் பெண்களிடம் சொல்லிலும் செயலிலும் தவறாக நடக்க காரணம்... ஆண்கள் பெண்களை போகப் பொருளாக பார்ப்பதே என்ற அணியில் என் எண்ணங்களை சொல்ல விரும்புகிறேன். ஆண்கள் என்று பொதுவக சொன்னாலும் பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களை மட்டுமே அது குறிக்கிறது என்பதை சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னும் சிறிது நேரத்தில் வாதங்களுடன் வருகிறேன் நடுவரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு நடுவருக்கும் தோழிகளுக்கும் அன்பான வணக்கங்கள்.

இன்றைய சூழலில் விவாதிக்க வேண்டிய தலைப்பு. தினம் தினம் பெண்கள் சில கேடுகெட்ட ஆண்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். கிழடுகள் கூட (மன்னிக்கவும் நடுவரே... இந்த ஜென்மங்களை பெரியவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என மரியாதையாக சொல்ல மனம் வரவில்லை) சின்னஞ்சிறு பெண்களிடம் வம்பு செய்கின்றனர். ஆண்களின் இந்த மனநிலைக்கு பெண்களின் உடையா காரணம்? இல்லவே இல்லை. கண்ணியமாக உடையணிந்து சென்றாலும் இது போன்ற ஆண்களின் வக்கிரப்பார்வையில் இருந்தும் பாலியல் சீண்டல்களில் இருந்தும் தப்ப முடியாது. தங்கள் தவறுக்கு நியாயம் கற்பித்துக் கொள்ள முயல்கிறார்கள் இப்படிப்பட்ட ஆண்கள்.

பள்ளி சீருடையில் சென்ற மாணவியையும் பாலியல் தொல்லை செய்து கொலை செய்கிறார்கள் என்றால் உடையா அங்கே காரணம்? தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் மீது ஆசிட் வீசி சில நாட்களுக்கு முன் தன் உயிரை இழந்த வினோதினியின் நிலைக்கு காரணம் அவளது உடையா? டெல்லி சம்பவத்தில் அப்பெண்ணின் உடையா காரணம்? இவ்வளவு ஏன் நடுவரே! பஸ்ஸில் பயணம் செய்யும் போது பெண்களை இடிக்கும் சில ஆண்களின் செயலுக்கு பெண்களின் உடையா காரணம்?

பெண் என்பவள் ஆணுக்கானவள் என்ற காலங்காலமாக நம் மக்கள் எண்ணத்தில் ஊறிப்போய் விட்ட எண்ணம். பெண் என்பவள் ஆணின் இச்சைக்கு இணங்குபவளாகவும் அவன் சந்ததியை வளர்ப்பவளாகவும் மட்டுமே காலங்காலமாக பார்க்கும் சமூக நிலை இவைதான் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் செயல்களுக்கு அடிப்படை காரணம். ஆணின் உள்ளாடை விளம்பரத்துக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. பெண்ணை காட்டித்தான் பொருட்களை விற்க வேண்டும் என்றால் அது பெண்ணை போகப்பொருளாக காட்டும் நிலைதானே! நாத்தமருந்து (பாடி ஸ்பிரே தான் நடுவரே) விளம்பரத்தில் காண்பிப்பதை விட பெண்ணை இழிவு படுத்த முடியுமா?

கோவையில் கடத்தி கொல்லப்பட்ட முஸ்கனின் நிலைக்கு அந்த குழந்தையின் உடையா காரணம்? இவ்வளவு ஏன் நடுவரே.... சில வருடங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவமனைக்கு ரத்தம் சொட்ட சொட்ட ஒருவயது கூட ஆகாத பெண்குழந்தையை தூக்கி வந்தார்கள்... எந்த கயவனோ அக்குழந்தையிடம் போய்... சே என்ன ஜென்மங்கள் இவர்கள்... பெண்குழந்தையாய் பிறந்ததை தவிர அக்குழந்தை செய்த பாவம் என்ன நடுவரே! இப்படி அடுக்கடுக்காய் உதாரணங்களை அடுக்க முடியும் நடுவரே! எழுதும் எனக்கும் படிக்கும் உங்களுக்கும் மனம் நொந்து போகும் :(

ஆண்கள் தன் தவறை மறைக்க பெண்ணின் உடை மீது பழி போடுகிறார்கள் அவ்வளவுதான். அவர்களின் அடிமனதில் ஊறிக்கிடக்கும் பெண்ணை போகப்பொருளாக பார்க்கும் மனநிலைதான் இது போன்ற இழி செயல்களுக்கு காரணம் என சொல்லி முதல் சுற்று வாதத்தை கனத்த மனதுடன் நிறைவு செய்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல தலைப்பு. பெண்களை போகப் பொருளாக நினைப்பதே காரணம். பெண்களின் உடைதான் காரணம் என்று சொல்வது ஆணாதிக்க சமுதாயாத்தின் கூற்று. சிறு குழந்தைகளும் கொடுமைப்படுத்தப்ப்டுவதற்கு எது காரணம்? ஆண்களின் எண்ணம் தன் இதற்கு காரணம் தங்கள் தவறை பெண்கள் மேல் வைப்பது எப்பவுமே ஆண்கள் வேலை. விரிவான வாதங்கள்டன் பின்னர் வருகிறேன்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த மஹா கணம் பொருந்திய நீதிபதியவர்களே!!
பூமிபந்தின் அனைத்து இடங்கலிலும் நம்தமிழக பெருமையை பறைசாற்றிக்கொண்டிருக்கும் பேரன்புமிக்க பெருந்தகைகளே, சக அணி, எதிரணி தோழிகலே அனைவருக்கும் எனது சிரம்நிமிர்ந்த கரம் கூப்பிய வணக்கங்கள்!!
நல்லதொரு தலைப்பை நல்கிய தோழி கவிசிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் இந்த கறையை நீக்க நம்மால் முடிந்த நிவாரணங்களை வழங்குவதாக இருக்கும் இந்த பட்டி என நினைக்கிறேன்!!

நிச்சயமாக, ஆணித்தரமாக நான் கூறுவது யாதெனில், பெண்களை போகப்பொருளாக கருதுவதாலேயே, பெண்களிடம் மிகவும் மோசமான நடவடிக்கைகலிள் ஆண்கள் என்னும் பெயரில் சுற்றித்திரியும் சில மிருங்கங்கள் நடந்து கொள்கின்றன.
(அனைத்து ஆண்களுமே கெட்டவர்கள் இல்லை, கெட்ட மிருகங்களை பற்றியே பேசவந்துள்ளேன்).
விரிவான வாதங்கலுடன் விரைவில் வருகிறேன் யுவர் ஆனர்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நேரம் கிடைத்தது ஓடி வந்து விட்டேன். கடுமையான சட்டங்கள் இச்செயலை குறைக்கும் என்கிறார்கள் அது முடியாது நடுவரே ஏனென்றால் சட்டம் இயற்றுபவர்களே அவர்கள் தானே. பெண்ணை இந்த ஆண்கள் என்று சக மனுஷியாக மதித்திருக்கிறார்கள் அடிமையாக, போகப்பொருளாக தான் பார்ப்பார்கள். அப்புறம் எப்படி நமக்கு விமோசனம் கிடைக்கும்? உடையினால் என்றால் ரவிக்கை அணியாத காலத்தில் இவ்வளவு கொடுமை நடக்கவில்லையே அது எப்படி? ஆண்களின் எத்ற்கு காரண்ம் என்று அநேரம் கிடைத்தது ஓடி வந்து விட்டேன். கடுமையான சட்டங்கள் இச்செயலை குறைக்கும் என்கிறார்கள் அது முடியாது நடுவரே ஏனென்றால் சட்டம் இயற்றுபவர்களே அவர்கள் தானே. பெண்ணை இந்த ஆண்கள் என்று சக மனுஷியாக மதித்திருக்கிறார்கள் அடிமையாக, போகப்பொருளாக தான் பார்ப்பார்கள். அப்புறம் எப்படி நமக்கு விமோசனம் கிடைக்கும்? உடையினால் என்றால் ரவிக்கை அணியாத காலத்தில் இவ்வளவு கொடுமை நடக்கவில்லையே அது எப்படி? ஆண்களின் எத்ற்கு காரண்ம் என்று அடிது சொல்லுவேன் உங்களையல்ல நடுவரே

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

என் அன்பிற்கும்,பாசத்திற்கும் உரிய மகா கணம் (???) பொருந்திய நடுவர் அவர்களே.. உங்களுக்கு என் முதற்கண் வணக்கங்கள். இன்றைய நாளில், இந்த தேதியில் அவசியம் வாதாட வேண்டிய தலைப்பை தான் எடுத்துள்ளீர்கள். அதற்கே உங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.. தலைப்பை தந்த தலைவி அருமை தோழி கவிக்கு என் நன்றிகள். தோழிகள் தலைப்பை தேர்ந்தெடுப்பதை பொறுத்து நான் அணியை முடிவு செய்யலாமென்றிருக்கிறேன். அனைவரும் ஒரே அணியில் வருவது போல ஒரு பிரமை தோன்றுகிறது. அதனால் நான் டைம் எடுத்துக் கொண்டு வருகிறேன். பட்டியில் வாதிட தயாராக இருக்கும் புள்ளி மான்களுக்கும், காளைகளுக்கும் என் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆகா ஆகா... நல்ல தலைப்பை தந்த தோழி கவிசிவாவுக்கும், அதை தேர்வு செய்து அழகாக நடுவராக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நடுவருக்கும் வாழ்த்துக்கள் :)

நம்ம கட்சி தெரிஞ்சது தானே... ;) “ஆண்கள் பெண்களை போக பொருளாக நினைப்பதே காரணம்”

கவிசிவா... கூட்டணி எப்படி போகுது பார்ப்போம் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே!! ஒரு விளம்பரம் மக்கள் மத்தியில் பிரபலமாகணும்னா ஒரு பெண்தேவை, அப்பதானே ஜொள்விட்டு பார்க்கும் ஜென்மங்கள் அதை கண்கொட்டாமல் பார்க்கும். ஆம்பள போடுற காலணி விளம்பரத்தில பெண்ணுக்கு என்ன வேலை, ஒரு நாத்தமருந்து விளம்பரமா கூப்பிடுங்க பொண்ணுங்கள், ஒரு ஆள நிக்க வெச்சு நாலஞ்சு பொண்ணுங்கள சுத்தி நிக்கவெச்சு போட்டா புடிக்கிறாங்களே, இதெல்லாம் நியாயமா?? அவ்ங்க வீட்டு பெண்களை இப்படி வெச்சு போட்டோ எடுப்பாங்களா??
அட ஒண்ணும் வேண்டாம், கோயிலுக்கு தழைய தழைய புடவைகட்டிச்செல்லும் பாட்டியவே கமெண்ட் அடிக்கிற ஆளுங்கள என்ன சொல்ல, நடுவரே!

நடுவரே!! அந்தகாலத்திலருந்தே பொண்ணுங்கள் போகப்பொருளாதான் பார்க்கிறாங்க எனப்தற்கு ஒரு உதாரணம் அந்தபுர ராணிகளின் கதை!! அவங்களோட நிலைய நினைத்து பார்க்கவே முடில.. நல்ல சாப்பாடுதுணி மணி இதெல்லாம் கொடுத்து மன்னரின் போகத்துக்காகவே வளர்க்கப்பட்ட "பிராய்லர் கோழிகள்" அந்த பாவப்பட்ட பெண்கள்..
சரித்திர காலத்திலிருந்து சமீபத்திய காலம் வரை, இது போன்ற கேடுகெட்ட எண்ணங்கள் நிரம்பிவழியும் நிலையில் இருக்கும் ஆண்களுக்கு, கோணிப்பையை எடுத்து உடையாக தைத்து போட்டுக்கொண்டு சென்றாலும், போகுது பாருடா செமகட்டை என நாக்குகூசும் வசனங்களை வீசுவதில் வல்லவன்கள்தான் இப்பேர்பட்ட ஆண்கள்..
அட மடையா, உன் தாயின் உதிரத்தை தாய்பாலாக உண்டுவளர்ந்தவந்தானே நீ!! ஆனால் பிற பெண்டிரின் அங்க அவயங்களை கேடுகெட்ட வர்ணைகளால் வர்ணிக்கிறாயே, உன் உடம்பில் ஓடுவது ரத்தமா, சாக்கடையா??
பூவாக வர்ணித்து புழுதியில் கசக்கி வீசீவிட்டு, ஓடுவதில் என்ன பெருமை,
பௌர்ணமி நிலா என்கிறாய், அந்த நிலாவை ஆசிட் ஊத்தி அமாவாசையாய் ஆக்கிவிடுகிறாய்!!
எள்ளுபாட்டி, கொள்ளுபாட்டி, பாட்டி, மகள், பேத்தி ,கொள்ளுபேத்தி, எள்ளு பேத்தி யார வேணாலும், நம்ம ஊர்ல ஓடுற பஸ்ல ஏத்திவிட்டு பாருங்க, இடிமன்னர்களின் அட்டூழியத்தையும், ஜொள்ளர்களின் பேச்சுக்களையும் புட்டு புட்டு வைப்பார்கள்.
மரத்துக்கு ஒரு சேலைய சுத்திவிட்டாக்கூட பொண்ணுனு நினச்சு சுத்தி வரஆளுங்கள என்ன சொல்ல நடுவரே!!
இருங்க நடுவரே மதிய உணவு முடிச்சிட்டு வந்துடறேன்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி கவி.....வணக்கம் தங்களுக்கும் வாழ்த்துக்கள் .

// ஆண்கள் என்று பொதுவக சொன்னாலும் பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களை மட்டுமே அது குறிக்கிறது என்பதை சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.//

நிச்சயமா..கவி , சில ஆண்கள் என்பதை தலைப்பிலேயே உறுது படுத்திவிட்டோமே..கண்டிப்பா புரிஞ்சுக்குவாங்க :-)

Don't Worry Be Happy.

(இன்னிக்கு நடுவரா வந்திருக்கறவரு நடிகர் சிவகுமார் ..அதனால அவர் ஸ்டைல்ல படிங்க மக்காஸ்)

அமைதிமா... அமைதி..இப்பவே இந்த போடு போட்டா ஃபைனலுக்கு நான் என்ன பண்ணுவேன்..?நானே குருவித் தலைல பனம்பழத்த வைச்சமாதிரி இந்த தலைப்பு துணிஞ்சு எடுத்து ...திணறிப்போயிருக்கேன்..காலைல வெளிய போறதுனால பட்டி துவங்க லேட் ஆயிருமோன்னு நினைச்சு அவசர அவசரம ஆரம்பிச்சு வைச்சேன்.. திரும்பி இங்க வந்தும் இங்க உக்காந்து பட்டிய பாக்க பயம் ஓடிப்போயி குட்டி தூக்கம் போட்டுட்டு தூக்கக்க்லக்கமா இல்லை பயக்கலக்கமான்னு தெரில இதோ சூடா காபி கலக்கறதுக்கு பதிலா ஜில்லுனு ஐஸ்க்ரீம் எடுத்துட்டு வந்திருக்கேன்...இது இப்போ உங்களுக்குதான்மா வேணும் எடுத்துக்குங்கமா...பொறுமைமா பொறுமை..

//கிழடுகள் கூட (மன்னிக்கவும் நடுவரே... இந்த ஜென்மங்களை பெரியவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என மரியாதையாக சொல்ல மனம் வரவில்லை) சின்னஞ்சிறு பெண்களிடம் வம்பு செய்கின்றனர். ஆண்களின் இந்த மனநிலைக்கு பெண்களின் உடையா காரணம்? இல்லவே இல்லை.//...ஜென்மங்கள்னு சொல்லவே எனக்கு மனசு வரலைமா காரணம் அடுத்த ஜென்மத்துக்கும் இவங்க தொடர்ந்து வரப்போறாங்களா என்ன? இத்தோடா இதுகளுக்கு ஜென்மம் அத்து போகனும் :-(

//பெண் என்பவள் ஆணுக்கானவள் என்ற காலங்காலமாக நம் மக்கள் எண்ணத்தில் ஊறிப்போய் விட்ட எண்ணம். பெண் என்பவள் ஆணின் இச்சைக்கு இணங்குபவளாகவும் அவன் சந்ததியை வளர்ப்பவளாகவும் மட்டுமே காலங்காலமாக பார்க்கும் சமூக நிலை இவைதான் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் செயல்களுக்கு அடிப்படை காரணம்.//.....இந்த எண்ணம் தவறானதுன்னு புரிஞ்சு எப்பவோ பெண்கள் முன்னுக்கு வந்துட்டாங்க ...ஆனால் சிலபாவிப்பயல்கள் மட்டும் இன்னும் சாக்கடைதான் பஞ்சு மெத்தைன்னு பழய எண்ணத்திலேயே புரண்டு படுத்துட்டு கெடக்கறான் ...ம்ம் கவிமா மேல சொல்லுங்கமா..

//பெண்குழந்தையாய் பிறந்ததை தவிர அக்குழந்தை செய்த பாவம் என்ன நடுவரே! இப்படி அடுக்கடுக்காய் உதாரணங்களை அடுக்க முடியும் நடுவரே! எழுதும் எனக்கும் படிக்கும் உங்களுக்கும் மனம் நொந்து போகும் :(//.....இவர்கள் மனிதத்தின் உன்னதத்தை அறியாத அரக்கர்கள் கவிமா .. இப்படிபட்ட விசயங்களை இன்றய காலகட்டத்தில் பேசினாலொழிய இதை தடுக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்..அதனால மனம் நொந்து போயி கலக்கமுறுவதைவிட் கொஞ்சம் துணிவை வரவழைத்து இவர்களை எதிர்கொண்டு பீறுநடைபயில வகைசெய்வோம்.

மிக்க நன்றி கவிசிவா.. பெண்கள் சந்திக்கும் இத்தகைய அவலநிலைக்கு அவளை சில ஆண்கள் போகப்பொருளாக பார்க்கும் கண்ணோட்டேமே மேலோங்கி இருப்பதால்தான் மிகவும் கொந்தளிச்சு போய் சொல்லியிருக்காங்க கவி.. கண்டிப்பா இந்த வாதத்தை கேட்ட என்னால மறுத்து பேச முடியலை.. ஆனாலும் எதிர் அணியினர் இவங்களுக்கு சோடை போனவங்க இல்லைன்னு தெரியும்.. வாங்க உங்க பக்கத்தரப்பு வாதத்தை சொல்ல வாங்க ...

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்