பட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன?

எனது அருமை அறுசுவைத் தங்கங்களே! சிங்கங்களே! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பட்டி ஆரம்பமாயாச்சு ...:-)

தோழி கவிசிவா அளித்த அருமையான விவாதிக்க தற்போது மிகவும் அவசியமான தலைப்பு...நமது நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் விசயங்களைப் பற்றி பேச இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்பில் சிறிய மாற்றங்களோடு .....

**********************************************************************
பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்குள்ளாக காரணம் ..

1.பெண்களின் நடை உடை பாவனையே.,
2.பெண்களை போகப் பொருளாக பார்ப்பதாலே.,
3.பெண்களிடம் தட்டிக்கேட்கும் மனப்பான்மையின்மையே (தையிரியமின்மை)
************************************************************************

பொது இடம் என்பது பார்க், பீச், கோயில், குளம் என்பதோடு இல்லாமல் இன்றைக்கு பெண்களும் அதிகமாக பங்குகொள்ளும் பொது தளமாக இருக்கும் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தபட்டி பயங்கரமா பிச்சு உதற வசதியா நீதிமன்றக்களத்தை தேர்ந்தெடுத்தாச்சு.. தோழிகளே நீங்க கருப்பு கோட்டு போட்டு பிச்சு உதறப்போறீங்களோ இல்லை கிழிச்சு எறியப்போறீங்களோ எனக்கு தெரியாது ....நான் உங்ககிட்ட கேட்டுக்கறது ஒன்னே ஒன்னுதான்.. வேற என்ன ?? அறுசுவை விதிகளையும், பட்டியின் விதிகளையும் மீறாமல் உங்கள் வாதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

பட்டி விதிமுறைகள்:
யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்

// பெண்களின் உடைதான் காரணம் என்று சொல்வது ஆணாதிக்க சமுதாயாத்தின் கூற்று. சிறு குழந்தைகளும் கொடுமைப்படுத்தப்ப்டுவதற்கு எது காரணம்? ஆண்களின் எண்ணம் தன் இதற்கு காரணம் தங்கள் தவறை பெண்கள் மேல் வைப்பது எப்பவுமே ஆண்கள் வேலை.//..சில ஆண்கள் செய்யும் இத்தகைய தவறுக்கு பல ஆண்கள் வக்காலத்து வேற..இப்படி இந்த பெண் இருந்ததினால இப்படி நடந்திருக்கலாம்னு கூற்று வேற ?? ம்ஹும்

//உடையினால் என்றால் ரவிக்கை அணியாத காலத்தில் இவ்வளவு கொடுமை நடக்கவில்லையே அது எப்படி?//...ரொம்ப கரக்ட்டுமா.. ஒருவேளை இன்றய பெண்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இருந்த துணிவு அந்தக்காலத்துல இல்லையோ??ன்னு யோசிக்க வைக்குது .

//கடுமையான சட்டங்கள் இச்செயலை குறைக்கும் என்கிறார்கள் அது முடியாது நடுவரே ஏனென்றால் சட்டம் இயற்றுபவர்களே அவர்கள் தானே. //...அதானே..:-( ஆனால் அப்படி நடக்காமல் இருக்க நாம துணிஞ்சு நிக்க வேண்டிய தருணம் இது இல்லையா...நீங்க சொல்லுங்க லீலாமா.

பெண்களை என்று சக மனுசியாக ஆண்கள் எண்ணுகிறார்களோ அன்றுதான் பெண்களுக்கு விமோசனம் என்று தனக்கு கிடைத்த சிறிய நேரத்தைக்கூட விரயம் ஆக்காமல் கொட்டித்தீர்த்திட்டாங்க நம்ம லீலாதாமஸ்..பாராட்டுக்கள் லீலா :-) இவங்க சொன்னது சரிதானோன்னு என்னை நினைக்க வைக்காமல் ..சட்டு புட்டுன்னு எதிரணி உருவாகி வந்து பதில் தாக்கு தாக்க வாங்கமா..வாங்க..

லீலாமா இந்த மாதிரி அடிச்சு பேசுவீங்கன்னு தெரிஞ்சுதான் பாதுகாப்பா இப்போ நான் கூண்டுக்குள்ள நின்னுறுக்கேன்..அதப்பாத்து நீதியே கூண்டுக்குள்ள பதுங்கிருச்சுன்னு எல்லாம் சொல்லக்கூடாது..சரியான சமயம்ங்கிறது இப்போ நீதிக்கும் பொறுந்தும் கண்டிப்ப பாயவேண்டிய சமயத்துல பாயும் ;-)

Don't Worry Be Happy.

அருமையான தலைப்பை எடுத்து இங்கே நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் நடுவரே வணக்கம்.. தலைப்புக்கு நன்றி கவி..
நடுவரே.. நான் , பெண்ணிடமும் பெண்ணை சார்ந்தவரிடமும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை இல்லாமையே காரணம் என பேச வந்துள்ளேன்
சரி வாதத்திற்கு வருவோம்...

பாலியல் பிரச்சனை ஏன் ...
* பொதுவாகவே எதிர்பாலினரோட ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்பது இயற்கை நியதி..
இதுவே முதன் முதலில் உருவாகும் பிரச்சனைக்கு எல்லாம் காரணம்..

* ஆண்கள் பெண்களிடம் தவறாக நடக்க முற்படுவதை போல.. பெண்களும் ஆண்களிடம் தவறாக நடக்க முற்படும் காலம் இது.. மன்னிக்கவும். இது தான் உண்மை.. 90 % 10% என வைத்துக் கொள்ளலாம்.. பெண்கள் ஆண்களிடம் அநாகரிகமாக நடந்துக் கொள்வது பெரிய அளவில் அரங்கேறுவது இல்லை.அதனால் தெரிவதில்லை..

* சரியான வளர்ப்பு இல்லாமல் போவதே காரணமாகிறது. பிறரை எப்படி மதிக்க வேண்டும் என்று உணரபடாமல் தவறுகள் நடக்கிறது..

* வக்கிர எண்ணங்கள் மனதில் அலைபாயிந்துக் கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை செயல்படுத்த நினைப்பதும் காரணம் ஆகிறது..

* பெண் என்பவளை, ஆண் போலவே அவளுக்கு என ஒரு உடலமைப்பு உள்ளது.. என நினைக்காமல் காம வெறியில் , போக பொருளாக பார்ப்பது.

* சில இடங்களில் பெண்களே பெண்களை பார்த்து ச்சி என முகம் சுளிக்க வைக்கும் அளவு, நடை உடை பாவனைகளை மேற்கொள்வது

இவை எல்லாமே இன்னும் பல காரணங்களும் பாலியல் வன்முறை ஏற்பட காரணம் ஆகிறது..

போக பொருளாக பெண்களை பார்ப்பது :
* சிறிய பெண்கள், வயதானவர்கள் என பார்க்காமல் தன சபல புத்தியில் சித்திரவதை செய்வது என்பது தான் பெண்களை போக பொருளாக பார்க்கப்படும் செயலில் ஒன்று..

* பெண்ணின் உடை தான் காரணம் என்றால், கண்ணியமாக உடை அணியும் பெண்களுக்கும் இந்த காலத்தில் பிரச்சனை வந்துக் கொண்டு தானே உள்ளது.

* பெண்ணின் வயது தான் காரணம் என்றால், குழந்தைகளை கூட விட்டு வைக்கிறார்களா?

* இச்சை தலைக்கு ஏறி , எங்கே பார்த்தாலும் ஒரே கசகசப்பு தான் நடுவரே.. ஒன்றும் இல்லை நமது ஊரில் ஒரு ( தூய தமிழ் ஒத்து வராது நடுவரே ) பொண்ணு தெருவுல நடந்து போயிற கூடாது.. என்ன அதில் உள்ளது ? அந்த பொன்னையே கண்ணை எடுக்காமல் வெறிச்சு பார்க்க வேண்டியது... இது தான் ஆண்மையா ?

* தனக்கு பைக் ஓட்ட தெரியும் என, ஒரு பொண்ணு நடந்தா, சும்மா சர்ரு சர்ரு , போயி வருவது, அந்த பொண்ணை சுத்தி வட்டம் போடுவது, அந்த பொண்ணுக்கு நெஞ்சுக்குள்ள ஒரு படபடப்பே வந்திடும். இதுல என்ன ஹீரோ தனம் இருக்கு.. இதை வெச்சு அந்த பொண்ண அட்ராக் பண்ண முடியுமா?

* யாரோ பெத்து விட்ட பொண்ணு போல, சில்மிஷம் செய்வது இடிப்பது, துணியை புடிச்சு இழுப்பது என்ன கேவலமான நிலை..

* வெளிநாட்டு விஷயங்கள் பலவற்றை காப்பி அடிக்கிறோம். இங்கே பொண்ணுங்க வந்து பஸ் ஏறினா , இரண்டு அடி தள்ளி நிப்பாங்க.. லிஃட்ல ஏற வந்தா கதவை திறந்துட்டு வெயிட் பன்னுவாங்க.. நடந்து போகும் போது, எத்தனை நெரிசல் இருந்தாலும், ஒரு அடி கேப்பு விட்டு தான் நடப்பாங்க.. இதை எல்லாம் காப்பி அடிக்கலாம் இல்லையா? நமக்கு வசதியா இருப்பதை மட்டும் எடுத்துக்க வேண்டியது.. எத்தனை கோழைத்தனம்.. ஒரு பஸ்சுல இருந்து இறங்குவதற்குள் இடிச்சு எடுப்பது, ரோட்டுல நடக்கும் போது, முட்டர மாதிரி வர வேண்டியது..அசிங்கமான பார்வை.. இவை எல்லாமே பெண்களை தினம் தினம் பாலியல் வன்முறைபடுத்தும் விதம் தான்.. நினைத்தாலே அருவருப்பா இருக்கு.. இதுல என்ன அல்ப சந்தோசம் கிடைக்குதுன்னு புரியல..

அட பெண்களை மட்டுமா பண்றாங்க நடுவரே.. சிறிய பையனையும் விடறது இல்லை.. இதுக்கு என்ன காரணம்.. பெண்களை போக பொருளா பார்ப்பது உண்மை தான், ஆனா சிறு பசங்களையும் பாலியல் இச்சைக்கு உட்படுத்துவது என்பது எதற்கு... மனஷனோட புத்தி, மிருகத்துக்கும் மேல போயி நிக்குது, கேவலமான ஜந்துவா சதை பிண்டத்தை மட்டுமே பார்க்குற நிலைக்கு தள்ளபடுகிறது.. மேலே கூறிய குறிப்புகள் எல்லாம் போக பொருளா பார்ப்பதை காட்டவே..ஆனா ஆண்களையும், பசங்களையுமே இம்சை செய்யறாங்களே.. அதுக்கு என்ன சொல்வது.. எனவே பெண்களை போக பொருளா பார்ப்பது ஒரு காரணம் தான் என்றாலும், அதுவே முழு காரணம் ஆகாது நடுவரே..

நடை உடை பாவனை..
* புத்தி மக்கி போயி, பெண்களின் உடை தான் காரணம்னு சொல்கிறவனை கம்பத்துல வெச்சு தோலை உரிக்கணும்.. பெண்ணின் உடையை காரணம் சொல்பவன் சாக்கு தேடுபவன்..அப்ப கண்ணியமா உடை அணிபவர்களும், குழந்தைகளும் என்ன பாவம் செய்தார்கள்.. சாதாரணமா கல்லூரிக்கு போயி வரும் பெண்கள் என்ன தவறு செய்தார்கள்..

*உடை, நடை, பாவனையை காரணம் சொல்வது மகா முட்டாள் தனம் தான்.. ஆனால் அது காரணம் இல்லை என்றும் சொல்கிறீர்களா? சமூக பொறுப்பு ஆண் பெண் இருவருக்கும் இருக்கு. பொண்ணுங்களும் அவங்க உடைகளை சரியா பார்த்துக்கணும்.. உடல் வடிவமே தெரிவது போல எல்லாம் உடை அணிவதும் தவறு தான்..அடுத்த தலைமுறை எங்கே போயி நிற்கும் என்பதை யோசிப்பது இல்லை.

*அசிங்கமா ஓர் பெண் உடை போட்டு இருக்கு அதான் நான் தவறா நடந்துக்கிட்டேன் சொல்வது ரொம்ப தப்பு தான்.தண்டனைக்கு உரிய விஷயம் . ஆனாலும் அந்த பெண் உடை அசிங்கமா போடுவதும் தவறு தான்.ஒரு உடை ஒருத்தனை வக்கிரமா மாத்துனா, அதுக்காக நாம உடையை மாத்தனுமானு கேக்கலாம்.. தேவையில்லை தான்.. ஆனா இப்ப தான் மாற்றம் வந்துட்டு இருக்கு. இதை எல்லாம் பழகிக்கும் வரை நம்ம கொஞ்சம் கண்ணாடியை போல தான் ஹேண்டில் பண்ணனும்.அடுத்த தலைமுறையில் வேணா சாதாரணமா ஆகலாம்.. பழக்கம் வரும் வரை கடினமா தான் இருக்கும்..இதெல்லாம் பெண் சுதந்திரம் கிடையாது.. ஸ்லீவ்லெஸ் போட்டுட்டா நமக்கு சுதந்திரம்னு அர்த்தம் இல்லை. என்னை பொறுத்த வரை இரண்டு பக்கங்களும் சரியாக நடந்துக்கணும்.நடுவரே

*பெண்களின் ஆடைகள் மட்டும் தான் பிரச்சனை என்பது இல்லை தான் .. ஆனால் ஆடைகளும் ஒரு வகையான பிரச்சனை என்பதை மறுக்க கூடாது. பெண்ணின் நிழலை கூட விடாதவனுக்கு ஆடை ஒரு விஷயம் இல்லை தான் .ஆனால் சமூக பொறுப்பு இரு பாலருக்கும் இருக்கு.. சபல புத்தி இருப்பவனுக்கு, இது மேலும் தூண்டி விடப்படுகிறது.மிகவும் அசிங்கமகாக உடை உடுத்தும் பெண்ணையோ, சினிமா நடிகையோ பார்த்துவிட்டு, நல்ல உடை உடுத்தும் அடக்க ஒடுக்க பெண்களிடம் தன் சபல புத்தியை தீர்த்து கொள்கிறாங்கள்.ட்ரஸ் தான் காரணம்னா நடிகைக்கோ, அசிங்கமா உடை உடுத்துவருக்கோ ஒன்னும் ஆவதில்லையே என நினைப்பது தவறு... ஆனா நல்லா ட்ரஸ் பண்ணும் பொண்ணுக்கு இப்படி ஆகிறதே.. அதுக்கு என்ன செய்யறது என நாம நினைத்துக் கொண்டிருக்கோம்..ஆனால் ஆழமாக பார்த்தால், எங்கேயோ கண்ணுக்கு உறுத்தலான ஆடை அணிந்த நடிகை மற்றும் பெண்களை பார்த்து புத்தி மேலும் கேட்டு போக, சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும், பாவம் நல்லா ட்ரஸ் பண்ணி இருக்கும் பெண்களிடம் இச்சையை தீர்க்க நினைக்கிறார்கள். அங்கே அவனுக்கு கிடைத்துள்ள சூழல் தான் காரணம்.. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டால் , அது நடிகைனாலும் சரி, நல்லா ட்ரஸ் செய்த வயது பெரியவங்கனாலும் சரி, எங்கேயோ அவன் மனதை மேலும் அழுக்கு செய்த நிழல் உடை, அங்கே நிஜமாக உருவாகிறது.பின்ன என்ன பிரச்சனை தான்.

* ஆடை காரணம் காட்டுவது வெறும் சாக்கு தான்..இருந்தாலும், ஆடை காரணமும் இல்லை என்கிறீர்களா.. ஏதோ பெண் செய்யும் சிறிய சமூக ஆடை சீர்கேடால் , நல்ல உடை உடுத்தும் பெண்களுக்கும் பிரச்சனை.. அதிகமாக பாலியல் பிரச்சனை நடக்கும் இடமாக டெல்லி தேர்வாகி உள்ளது. டெல்லியில் தான் ஆடை உடுத்தும் விதம் ரொம்பவே ஃப்ரி.. எப்படிப்பட்ட பெண்களை பார்க்கும் போது சபலம் தலை தூக்குகிறது என எடுக்கப்பட்ட சர்வேயில் கிடைத்த முடிவு.. கண்களை உறுத்தும் உடை அணியும் பெண்கள் தான் என தெரிய வந்துள்ளது. இந்த சர்வே யில் அசிங்கமான ஆடை உடுத்தும் பெண் என சொல்பவன் எல்லாம் சாக்கு சொல்பவனாகே எடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் அதிலும் அர்த்தம் இருக்கிறதா என யோசித்து பார்க்க வேண்டும் ..இதனால் பாதிப்புக்குள்ளாவது நன்றாக உடை அணியும் பெண்களும் தான். அசிங்கமாக ஆடை அணியும் பெண்களை பார்த்தால், நமக்கே உறுத்துது இல்லையா?

*அதே சமயம் நானும், ஆடையை காரணம் காட்டும் சில ஆண் வக்கிரகாரர்களை கடுமையாகவே கண்டிக்கிறேன்.ஆனால் பெண்களிடம் பொறுப்பு இருக்கு என மறக்க கூடாது.நான் எப்படி வேணா இருப்பேன். நீ பாத்தினா கண்ணை நோண்டிடுவேன் என சொல்லக் கூடாது. இது அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் முறை இல்லை. வெளிநாடுகளில் அது ஒரு பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த நிலைக்கு இந்தியா வர நாட்கள் ஆகும். அது வரை நாம் பெலன்ஸ்ஸா இருக்கணும்.நாம ஒரு ட்ரான்சிஷன் பீரியட்ல இருக்கோம்.. வெளிநாட்டுல அது பிரச்சனை இல்லை என்பதற்கும் வேறு சில காரணங்களும் உள்ளன.. டீன் வயதால், ஒரு ஆணோ பெண்ணோ தனக்கு ஒரு எதிர் பால் துணையை தேடிக் கொள்வதும், வேண்டாம் என்றால் மாற்றிக் கொள்வதும், எப்படி வேண்டுமானாலும் இருந்துக் கொள்வதும் சகஜம். அதையே நம் கலாச்சாரம் செய்ய முடியுமா?
*நம்ம ஜெனறேஷக்கு இந்த மாற்றம் கொஞ்சம் கடுமையா இருக்கும். ஏனா மாற்றம் வர வேண்டிய ஜெனரேஷன்ல நாம வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த தலைமுறையில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வந்துவிட்டா, அடுத்த தலைமுறை வேணா வெளிநாடுகள் போல, உடையால் எந்த பிரச்சனையும் இல்லை என மன நிலைக்கு வரலாம்.அது வரை நாம் கொஞ்சம் பார்த்து தான் இருக்கணும். உடனே புரட்சிகரமா ஆடை காரணம் இல்லை என பேச முடியாது என நினைக்கிறேன்.எந்த புரட்சிக்கும் பல ஆண்டுகள் எடுக்கும். அது முடியும் வரை பார்த்து ஹேண்டில் பண்ணும் பொறுப்பு இருக்கு.( ஒரு இழையில் எனது பதிவுகள்)
எனவே பெண்களின் உடையும், நடையும், பாவனையுமே ஒரு காரணமாக இருந்தாலும், முழு காரணம் ஆகாது நடுவரே..

நடை பாவனைன்னு பார்த்தா பிறர் மனது நோகும்படி கமன்ட் அடிப்பதும் தவறு தான்.. அடிப்பவர்களுக்கு அது சாதாரண வார்த்தையாக இருக்கலாம். கேட்பவர்களுக்கு அப்படியே இருக்கும் என சொல்ல முடியாது.. கணவரிடம் பேசினால் கூட யோசித்து தான் பேசணும்.. அப்ப யாருன்னே தெரியாத இன்னொரு எதிர் பாலினரிடம் பேசுவது எப்படி இருக்க வேண்டும் ?. ஆனா சில பொண்ணுங்க.. கொஞ்சம் நல்ல விதமா பசங்க பேசினா, பழம், தயிர்னு சொல்ல வேண்டியது.. சைட் அடிக்காத பையன் எனில் கிண்டல் பண்ண வேண்டியது.. நாங்க ட்ரஸ் பண்றதே உங்களுக்காக தான் என்பது போல பெண்கள் நடந்துக் கொள்வதை நான் பார்த்து இருக்கிறேன்.. அது என்ன.. நம்மாலே வலை விரிச்சு, அதில் விழும் பொது மட்டும் ஆண்களை குறை சொல்வது.. எப்படிப்பட்ட பையனை பிடிக்கும் என்றால், ரகடான, பாக்கு போட்டு, ஸ்டைலா சிகரெட் குடிச்சு, தலைக்கு கலர்ஸ் போட்டு, காதுல ஹெட் ஃபோன் மாட்டிக்கிட்டு யோ யோ நு இருக்குற பையனை தான் பிடிக்குமாம்.. இடத்தையும் கொடுத்து விட்டு அவன் அத்து மீறினா ஐயோ அம்மான்னு சொல்ல வேண்டியது.. இது தான் மேற்கத்திய கலாச்சாரமா? நம்ம பொண்ணுங்களையும் சும்மா சொல்ல முடியாது நடுவரே.. தீ என தெரிஞ்சும் போயி அறிவில்லாம தொட்டு பார்க்கும் பெண்களை பார்த்து இருக்கிறேன்.. இதெல்லாம் நடை பாவனை குறித்த தவறான புரிதல்கள்..

தட்டிக் கேட்கும் தன்மை :
* ஒருத்த வந்து மேல மோதறான், தட்டிக் கேட்டால், கேவலமா நம்மையே பேசுறான், தினமும் வம்பு செய்கிறான், அடித்தால், அடுத்த நாள் நிறையா பேர்களை அழைத்துக் கொண்டு வந்து பிரச்சனை செய்கிறான், தவறாக நடந்துக் கொள்ள முயல்கிறான், வீட்டில் சொல்லி, பொலிஸ் கேசு என சென்றால், அடுத்த நாள் ஆசிட் ஊத்தறான் எங்கே போயிக்கிட்டு இருக்கு நாடு நடுவரே.. தட்டி கேட்டால், பிரச்சனை வர தான் செய்யும்.. அதற்காக ஒதுங்காதே, அது பிரச்சனையை பெரிதாக்கும்.

*தைரியமின்மை என்பது.. பொதுவாவே வாலாட்ட நினைக்கும் ஆசாமிகள்.. பெண்கள் பயந்து ஒதுங்கி போயிடுவாங்க.. கண்ட வீடியோ எடுத்து வெச்சிருக்கேன் என மிரட்டும் போது வீட்டில் சொல்ல பயப்படுவார்கள், உரசினால் ஒதுங்கி தள்ளி போவார்கள் என்று தான் நினைத்து இருப்பான்.. இது தான் பொதுவான சைக்காலஜியா இருக்கும்.. ஆனா அவனே எதிர்பார்க்காத படி, சத்தம் போடுவது, வீட்டில் சொல்வது, ஏதாவது கலையை கற்று வைத்து அடிப்பது இதை போல தைரியமாக ஒரு முறை செயல்பட்டால், அவ்வளவு தான்.. அதை எதிர்பார்க்காத அவன் கண்டிப்பாக தடுமாறி போவான்..

ஆனால் இது எல்லா சுழலிலும் ஒத்து வராது.. அட்லீஸ்ட் , தைரியமாக வீட்டில் சொல்லி அந்த பிரச்சனை கையாளவாவது புத்தி வேண்டும்..

* தட்டி கேட்டால், பிரச்சனை பெரிதாகிறதே.. போட்ட புள்ளையாச்சே நாளைக்கு நல்லது கெட்டதுனா மானம் போகுமே, காத்து காதும் வெச்ச மாதிரி முடிச்சிடலாம்.. முள்ளுள சேலை பட்டாலும், சேலை முள்ளுள பட்டாலும் , பாதிப்பு என்னவோ சேலைக்கு தான்( சிவாஜி வாயிஸ் ல படிக்கவும். ) ..இப்படி எல்லாம் வெட்டி டயலாக் பேசி பேசி, பூதாகாரமாய் பிரச்சனையை, பெரிசாக்கி, இப்ப அதுக்கும் ஒரு பட்டி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளி விட்டதற்கு காரணமே , தவறை தட்டிக் கேட்காத இந்த சமூகம் தான் என்பது முற்றிலும் உண்மை நடுவரே..

இங்கே தட்டி கேட்பது என்பது, சம்மந்த பட்ட பெண் தான் செய்யணும் என்றில்லை நடுவரே.. பெண்ணை சார்ந்தவர்கள், பெண்ணை சார்ந்த சமுகம்... இன்னும் என்னவெல்லாம் இருக்கோ அத்தனையும்.. போலிஸ், அரசு என எல்லாமே சொல்லலாம்..

போக பொருளா பார்க்கிறானா? அவன் சாக்கடை.. அப்படி தான் பார்ப்பான்.. அவனை கட்டி வெச்சு உதைக்க வேணாம்..?

நீ இப்படி ட்ரஸ் போட்ட அதான் சீண்டினேன் என்கிறானா? சபல புத்தி உள்ளவன் அப்படி தான் சொல்வான்.. தோலுரிச்சு உப்பு கண்டம் போட வேண்டாமா?

ஆசிட் ஊத்துவியா? அதே ஆசிட்டை அவனுக்கும் ஊத்தி மருத்தவம் பார்க்காம தனி அறையில அடைக்க வேண்டாம் ?

பலாத்தகாரம் செய்வானாம்.... யாரும் நினைத்து பார்க்க முடியாத தண்டனை கொடுக்க வேண்டாம்.. ?

குழந்தையின் வாழ்க்கையை கேடுப்பானா ? நிக்க வெச்சு சுட வேண்டாம்... ?

வடநாட்டுல, 10 வது படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை ஒருத்தன் கெடுத்தான் சமீபத்தில், அவன் அரசியல்வாதிக்கு சொந்தகாரனாமாம் . அதனால் போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணியும் போலிஸ் கண்டுக்கல.. ரிப்போர்ட் செய்த பெண்ணை உயிரோட கொளுத்திட்டாங்க நடுவரே.. தைரியமா தட்டி கேட்ட அந்த குடும்பத்தினர் என்ன பாவம் செய்தார்கள்? தட்டி கேட்க வேண்டிய போலிஸின் குற்றமா? போலிசை இயக்கும்ம் அரசியல்வாதிகளின் குற்றமா.. அதிகாரத்தில் இருப்பவர்களே தவறை சாதாரணமா செய்கிறார்கள்..

பெண்களை மட்டுமில்லை குழந்தையையும் விடுவதில்லை.. மனசு வலிக்கிறது..எத்தனை எத்தனை நிகழ்வுகள்.. இன்னும் நடந்துக்கிட்டே தான் இருக்கு.. டெல்லி சம்பவம் தான் ஒரே சம்பவமா? நம்ம தமிழ் மக்கள் எத்தனை பேரை இதே மாதிரி செஞ்சுட்டு இருக்கான் இன்னொரு நாட்டுக்காரன் என்ன பண்ணினோம் நாம ? எல்லா கிராமங்களிலும் சின்ன சின்ன இடங்களிலும் இது நடந்துட்டே தான் இருக்கு.. என்ன செய்தோம்..? டெல்லி விஷயம் ஒன்னு நடந்த உடனே, எல்லா பக்கம் ஊர்வலம், கொந்தளிப்பு, ஏன் அதுக்கு முன்னாடி இப்படி நடக்குலையா? ஆட்டு மந்தைகள் போல, ஒரு இடத்தில் ஒன்னு நடந்தா உடனே நாமும் அதை செய்ய வேண்டியது.. அதுக்கு முன்னாடி என்னாச்சு.. எல்லாரயும் தான் சொல்றேன்.. என்னையும் சேர்த்து.. நமக்கென்ன என்ற அலட்சியம்..

கண்டிப்பா அடிச்சு சொல்வேன் நடுவரே.. நீங்க சொன்ன மூனு தலைப்புல, பெண்ணை போக பொருளா பார்ப்பதும் காரணம் தான், உடையால் சில இடத்தில் வக்கிரங்கள் அரங்கேறுவதும் உண்மைதான்..

ஆனால் எது காரணமாக இருந்தாலும், தட்டி கேட்கும் மனநிலை பெருகினால் ஒழிய இதை போல, புற்று நோயாய் வேர் ஊன்றி ஆழமாக பரவிக் கிடக்கும் பிரச்சனையை ஒழிக்க முடியாது.. கொஞ்சம் கொஞ்சம் தான் இதை சரி செய்ய முடியும்... டெல்லியில் தட்டி கேட்ட மனப்பான்மையால் தான், இன்று இதை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.. பல இடங்களில் கொந்தளிக்க தொடங்கி உள்ளார்கள்.. இனி தொடர்ந்து இது நடந்து, தண்டனை அரங்கேறட்டும்.. பின் தான் ஒரு பயம் வரும்..

இத்தனை நாள், காலம் காலமாக இது நடந்துட்டே தான் இருந்தது.. சிலர் தட்டி கேட்டோம்.ஆனால் அதுவும் மண்டையில் ஏறும்படி இல்லை.. எதிராளி எழவே முடியாதபடி ஒரு முறை அடித்து தட்டி கேட்டு பார்.. ஒன்றொன்றாக குறைய தொடங்கும்.. தட்டிக் கேட்கும் மனப்பான்மை இருந்தால், கேடு கெட்ட எந்த காரணத்தை ஆண்கள் கூறினாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது..

எனவே நடுவரே.. பெண், பெண்ணை சார்ந்தவர்கள், சமுகம், அரசு என அனைத்தாலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை இல்லாதததாலே பெண் பாலியல் வன்முறை பரவிக் கிடக்கிறது... ஒரு முறை எதிர்பார்க்க முடியாத அடியை கொடுத்தால், அடுத்த முறை இதை போன்ற தவறு நடக்காது மெல்ல குறைய தொடங்கும்... தட்டிக் கேட்காமல் விட்டால், போக பொருளா , உடையானு நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.. காட்டாறு என பொங்கி அநீதிகளை தட்டி கேட்காத நிலையே இது போன்ற பிரச்சனைக்கு முற்றிலும் காரணம் என அடித்து சொல்லுவேன்.. சாரி.. கொஞ்சம் இல்லை ரொம்பவே உணர்ச்சிவசபட்டுட்டேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவரே! ஆண்கள் பெண்களை போகப்பொருளாக பார்க்கும் நிலை இருக்கும் வரையிலும், அவளை சகமனுஷியாகவும் உணர்வுள்ள மனுஷியாகவும் எண்ணாத நிலை இருக்கும் வரையிலும் பெண்கள் குட்ட குட்ட குனியாமல் நிமிர்ந்து நின்று தட்டிக் கேட்டாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. அதற்கு உதாரணம்... சமீபத்தில் நடந்த டெல்லி சம்பவத்தில் நாடே கொந்தளித்து எழுந்து போராட்டம் நடத்திய காலங்களில் கூட எத்தனை எத்தனை விரும்பத்தகாத சம்பவங்கள்? நடந்த சம்பவத்திற்கு அந்த பெண்ணையே குற்றவாளியாக்கிய சமூகத்தில் தட்டிக்கேட்பதில் என்ன பயன்? அவள் வீட்டிற்குள் முடங்கியிருந்தால் இந்த கொடுமையே நிகழ்ந்திருக்காதாம்... சமூகத்தில் உயர்ந்த பதவிகள் வகிக்கும் கேடுகெட்ட அரசியல்வியாதிகளின் கூற்று இது. இது தனிப்பட்ட ஒருவரின் கருத்து இல்லை. பலரும் வார்த்தைகளை மாற்றிப்போட்டு இதே கருத்தைதான் வலியுறுத்தினார்கள். இப்படிப்பட்ட சமூகத்தில் இருந்து கொண்டு தட்டிக் கேட்டாலும் பயனில்லை மண்டியிட்டு கதறினாலும் பயனில்லை :(

குற்றவாளிக்கு தூக்குதண்டனை கொடு என்று குரலை உயர்த்தினால் மனித உரிமை ஆர்வலர்கள் கொடி பிடித்துக் கொண்டு வருகிறார்கள். மனித உரிமை ஆர்வலர்களே உங்களிடம் ஒரு கேள்வி. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி எறியப்பட்டு உயிரை இழந்தாளே அந்த பெண் அவள் மனித இனம் இல்லையா? அவளுக்கு வெளியில் சுதந்திரமக சென்று வர உரிமை இல்லையா? அப்போது எங்கே போனது உங்கள் மனித உரிமை கூக்குரல்கள்? குற்றவாளிகளில் ஒருவன் 18 வயது நிரம்பாத சிறுவனாம். அதனால் அவனுக்கு சிறுவர் சட்டங்கள்தான் பொருந்துமாம். என்ன கொடுமை இது. சிறுவன் செய்யும் செயலையா அவன் செய்திருக்கிறான். அந்த கேடு கெட்டவனுக்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம். இப்படி இருக்கும் போது தட்டிக்கேட்டு என்ன பயன்?

இன்னொரு சம்பவம் சொல்கிறேன். வேலை முடிந்து பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ஒரு கேடு கெட்ட ஜென்மம் விரும்பத்தகாத செயலை செய்திருக்கிறான். நடந்த சம்பவத்தை விளக்கமாக எழுத கை கூசுகிறது நடுவரே! இடித்தல் சுரண்டல்களையும் தாண்டி மகா கேவலமான செயல். அதிர்ச்சியடைந்த அந்த பெண் சுதாரித்துக் கொண்டு நேரே போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் செய்திருக்கிறாள். அதன் பின் நடந்த கொடுமைகள்... விசாரணை என்ற பெயரில் வழக்கறிஞர்களும் போலீசும் கேட்ட கேள்விகள், ஏன் புகார் செய்தாய் குடும்ப மானம் போய் விட்டது என்ற சமூகத்தின் குற்றச்சாட்டுகள்... இதை எல்லாம் அந்த பெண் எதிர் கொண்டு போராடி இறுதியில் கோர்ட்டில் அந்த கயவனுக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? வெறும் அபராதம். ஆனால் பாதிக்கப்பட்ட இந்த பெண் அடைந்த தண்டனை... மன உளைச்சல், சமூகத்தின் குற்றச்சாட்டுகள்... இப்படிப்பட்ட நிலையில் தட்டிக் கேட்பதால் மட்டும் என்ன பயன் இருந்து விடப்போகிறது. இல்லை எந்த பெண்ணுக்குத்தான் துணிச்சல் வரும்?

பெண்கள் தாங்கள் அணியும் உடையில் கவனமாக இருக்க வேண்டும் என்பது சரி. ஆனால் கண்ணியமாக உடை உடுத்தும் பெண்ணையும் காமக்கண்ணால் பார்க்கும் கயவனை என்ன செய்வது?
போதையில்தான் அவன் தவறு செய்கிறான் அதனால் டாஸ்மாக்கை மூடு என்கிறார்கள். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பது சரி. ஆனால் தன் தவறுக்கெல்லாம் போதையின் மீதும் பெண்ணின் உடையின் மீதும் குற்றம் சுமத்தும் ஆண்களுக்கு என்று எந்த சுயக்கட்டுப்பாடும் தேவை இல்லையா அல்லது சுயக்கட்டுப்பாடின்றி இருப்பது அவர்களின் பிறப்புரிமையா?

தவறு செய்யும் ஆண்களே உங்கள் தவறை நீங்களும் உணருங்கள். திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நாளை உங்கள் வீட்டுப் பெண்ணுக்கும் இந்த நிலை வரலாம். அப்போது அதை பற்றி கேள்வி எழுப்ப தார்மீக ரீதியில் உங்களுக்கு எந்த உரிமையும் இருக்காது. உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னின்னு நினைக்காதீங்க. அடுத்தவங்களுக்கு வருவதும் ரத்தம்தான் என்பதை உணருங்கள்.

அடிப்படை எண்ணங்கள் மாற வேண்டும். பெண்ணை போகப்பொருளாக பார்க்கும் நிலை மாற வேண்டும். அதற்கு சமூகம் முயற்சிக்க வேண்டும். மாற்றங்கள் வீட்டிலிருந்து துவங்க வேண்டும். ஆண் பெண் பேதமின்றி குழந்தைகளை வளர்க்க வேண்டும். ஆண் குழந்தையின் மனதில் பெண் என்பவள் உனக்கு கீழானவள் என்ற எண்ணத்தை விதைக்காமல் அவளும் உனக்கு இணையானவள் என்பதை வலியுறுத்தி வளர்க்க வேண்டும். சமூகத்திலும் ஆண்களின் மனதிலும் இந்த ஆரோக்கிய எண்ணம் வரும் வரை பெண் முழுக்க முழுக்க தன்னை மறைத்து உடையணிந்தாலும் கண்ணியமான நடை உடை பாவனைகளில் இருந்தாலும், தட்டிக்கேட்டாலும் இந்த நிலையில் நிலையான மாற்றம் வரப்போவதில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே!!
நீங்க ஓவியக்கல்லூரிய பத்தி தெரிஞ்சிருப்பீங்க, படிச்சிருப்பீங்க , சொல்ல கேட்டு இருப்பீங்க, ஆடை உடுத்தும் விதத்தினால்தான் சொன்னா, இன்னேரம் ஓவியக்கல்லூரியையே இழுத்து மூடீருப்பாங்களே நடுவரே, மாடலா வ்ந்த அத்துனை பேருமே சீரழிக்கப்பட்டு இருப்பாங்கலே!!
எத்தனை கண்ணியமான ஓவியர்களை நாம இப்பவும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவங்கலாம், பொண்ணை போக பொருளா நினச்சிருந்தா இப்ப இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியுமா??
நடிகர் சிவகுமார் அவர்களும் ஓவியக்கல்லூரியி பயின்றவர்தான், சினிமாவில் இருப்பவர்தான், ஆனால் எவ்வளவு கண்ணியமான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்.
நடுவரே மனசில சபலத்தையும், ஆண் என்கிற திமிரையும் உள்லுக்குள் வெச்சிட்டு திரியுற ஜென்மங்கலுக்கு உடை ஒரு பொருட்டே அல்ல, தண்டனையும் கடுமையா இருக்கணும், ஆனா என்ன 6,மாசம் 1வருஷம்னு ஜெயில்ல போட்டு வெளிய விட்டுற்றாங்க, அங்க நல்லா ஜெயில் களிய தின்னு துன்னு வெளஞ்ச கட்டையா வெளிய வ்ந்து இன்னும் பலப்பல குற்றங்கள்ல கொஞ்சம் கூட பயமே இல்லாம பண்ணுதுங்க, அந்த மிருகங்கலுக்கு தண்ணி தெளிச்சி உட்ட மாதிரி ஆகிருது.
அதான் ஒருமுறை ஜெயிலுக்கு போய்ட்டு வந்தாச்சு, இனி நமக்கென்ன ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலுனு திரியுதுங்க. அதுனால தண்டனைய கடுமையாக்கணும்.
முதல்ல பெண்ணை பற்றிய நல்ல அபிப்ப்ராயங்களை சிறுவயது முதலே உருவாக்கனும். மன்சில ஈரத்த ஊட்டிவளர்க்கணும், உனக்கென்னடா ஆண்பிள்ளை , நீ பெரிசான பொண்ணுங்க கியூவில நிப்பாங்க, அந்த பொண்ணு உன்னையே வாட்ச் பண்ணுது இப்படியெல்லாம் சொல்லி சொல்லி வளர்க்கும் போது, அந்த ஆண்குழந்தைகளுக்கு, ஓ நாம உயர்ந்தவன், பெண்கள்னா நம்மைவிட தாழ்ந்தவங்க அப்பீடீங்கிற எண்ணம் உருவாயிடுது. முதல்ல அதை மாற்றணும்.
இப்பகூட குழந்தை பிற்ந்தவுடனே என்ன குழந்தைனு கேட்டா பொண்ணுதான் அப்பீடினு சொல்றாங்க, அதே ஆண்குழந்தையா இருந்தா பையன் பொறந்திருக்கானு, வாய்நிறைய சிரிப்போட சொல்றாங்க, எத்தனை நூற்றாண்டுக்கு இப்படியே சொல்லிச் சொல்லி பெண்களை மட்டம் தட்ட்டிட்டு இருப்பாங்கலோ தெரில??
கூலிவேலைக்கு போற ஆணுக்கு அதிக சம்பளம் , பெண்ணுக்கு குறைந்த சம்பளம்.. மேலும் அங்க சும்மா சுத்தி திரியுற மேற்பார்வையாளர், கரண்டிய கையில பிடிச்சிருக்கிற கொத்தனார் வரைக்கும் வீசும் ஏளனப்பேச்சுக்கும், பார்வைக்கும் செவிமடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கு இன்றைய காலகட்டத்திலும் பெண்களின் நிலை..:((
நடுவரே இச்சிற்றுரையை இப்பத்திக்கு முடிக்கிறேன், மீண்டும் அடுத்த கட்ட வாத்தில் சந்திப்போம்..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பட்டியய் சிறப்பாக நடத்த பட்டிமன்ற பொறுப்பு சீட்டில் அமர்ந்து இருக்கும் ஜெய் அவர்களுக்கு வணக்கம் அருமையான தலைப்பை கொடுத்த கவி அக்காவுக்கும் நன்றி

சந்தேகமே வேனாம் நடுவரே
பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்குள்ளாக காரணம் ..
.பெண்களை போகப் பொருளாக பார்ப்பதாலே.,

கடந்த முப்பது ஆண்டுகளில் வலுவான பெண்ணிய இயக்கம் இந்தியாவில் எழுச்சி பெற்றுள்ளது.நகரங்களில் பெண்கள் அதிகளவில் பொருளாதாரப் பணியில் ஈடுபடுகிறார்கள் உலக கணக்கெடுப்புகளின் படி ஆண்களைவிட பெண்களின் சராசரி ஆயுள் அதிகரித்துள்ளது. ஆனால் இவையெல்லாம் நினச்சு பெருமை படுரத விட இதெல்லாம் மீறுன ஆணக்லின் வக்குர புத்திய நினச்சு ஆத்திரபடுரது தான் அதிகம்
கடந்த ஆண்டு 700க்கும் அதிகமான பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இதுதான் மிகவும் அதிகம் என்று போலீஸ் ஆய்வு தெரிவிக்கிறது காரணம் ஆண்கள் பெண்களை போதை பொருளாக பார்ப்பதால் தானே.
ஒரு பெண் நிம்மதியா வேலைக்கு சென்று வர முடிவதில்லை இன்னும்பெண்கம் பல கேவலமான பிரவிகளிடம் தினம் அடி இடி வாங்கிகொண்டு தான் பேருந்துகளில் செல்ல முடிகிரது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் என்ன பயன் அந்த சட்டங்கள் அனைத்தும் வெரும் பேருக்கு மட்டும் தானே உள்ளது பேருந்துகளில் இடம் காலிய இருந்தா கூட நா பொன்னுங்கல உரசிட்டு போக வர தானெ பஸ்லயே ஏறுரேனு சொல்லுர சில அசிங்கமான ஜெண்மங்கலும் இருக்கதானே செய்யுராங்க வயசு வித்யாசம நு கூட இல்லாமா பெரியவங்க சின்ன பொன்னுங்கனு பலாத்கார சம்பவங்கல படிக்கும் போது இவங்களாம் என்ன மனுஷங்கனு தானே தோனுது இந்த மாதிறி ஆனவங்க பொன்னுஙகல போகப் பொருளாக பார்ப்பதால் தான் இன்னமும் பல இடங்கள ல பெண்கல் வீட்டிலே முடங்கி கிடக்குராங்க
மனிதனா இருந்தா சுயக்கட்டுப்பாடு வேணும் அந்த மாதிரி இல்லாதவங்கலாம் மனித பிறவியே கிடயாது தானே இன்னும் எத்தனை காலம் தான் பெண்களை இந்த மாதிரியே துரத்திட்டு இருப்பாங்கனு தெரில சமீபத்தில் சென்னையில் 1½ வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பி ஓடிய டிரைவரின் தாய் அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் நு பேப்பர் ல பார்க்கும் போதே அந்த கீழ்தரமான டிரைவரை அப்டியே பூமிக்குல்ல போட்டு புதச்சிடனும் நுதான் தோனுடுச்சு .
இந்த நிலை மாறனும் நா ஒவ்வொரு தனி மனிதனும் யோசிக்கனும் நாம பன்ற காரியங்கள் வீட்டுக்கு நாட்டுக்கும் நமக்கும் இவ்ளோ பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் நு .

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அய்யோடா ! இதென்ன இப்டி பாயிண்ட்ஸ் ஐ ரம்யா அக்க கொட்டோ கொட்டுனு கொட்டுனா நாங்க எல்லாம் என்னத்த சொல்லுறது.

முன்னாடி பேசுனவங்க பதிவெல்லாம் படிச்ச களைப்புல பாருங்க, உங்களை கூட வணங்காம வுட்டுபுட்டேன். சாரிங்க. அருமையான தலைப்பு, எண்ணங்களை எழுத்தில் வடிக்க உதவிய கவிசிவா அக்காவுக்கும் வாழ்த்துங்க. நடுவரக்காவுக்கு (தலையை பிச்சுக்கிட போவது என்னமோ நீங்க தான். இப்பமே லேசு பாசா தலைக்குள்ள ஒரு ரிசர்ச் சென்டறு ஓபன் பண்ணி வெச்சிருப்பீங்க ) ஜூடா ஒரு மசாலா டீயை குடிச்சு போட்டு என்னோட வாதத்தையும் கேட்டு போடுங்க.
பர்ஸ்ட் என்னோட அணியை சொல்லிடறேன். அது அந்த தர்ட் பிளேஸ் ல இருக்கறது தான்
1. ஆண்கள் பெண்களை சீண்டுவது,
இந்த பொண்ணுங்க கிட்ட
கம்மியாருக்கற தைரிய லட்சுமியினால தாங்க.
இதுக்கு ஏன் கை கொடுக்கறேன் ஆ , மத்த ரெண்டும் எதிராளியின் மனநிலையில உள்ளது ஆனா இந்த ஒன்னு நம்ம கிட்ட தான் இருக்குது.

நீங்க என்ன தான் அடக்க ஒடுக்கமா ட்ரெஸ் பண்ணினாலும், பார்க்கறவன் பார்வை விகாரமா இருந்துச்சுன்னா ,ஒன்னும் பண்ண முடியாது. ( நாலு சுவர் தாண்டி வரும்போதே, இந்த அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ) இதெயெல்லாம் விட்டு விட்டு வருவது நல்லது. ஆண்களுக்கு கிளர்ச்சி ஊட்டுவது, பெண்களின் நாணமே, வெட்கத்தால் வருமே வினை ! அப்படிங்கறது நான் கண்டுபிடிச்ச புது வாசகம்.

பொது இடங்களில் கலாட்டா செய்யும் ஆண்களில் பெரும்பான்மையானோர் குடி தைபோயோடும், கூட்டளிகளோடும் இருப்பார்கள். எப்படி பார்த்தாலும் எது நடந்தாலும் அபெக்ட் ஆகுவது, (சமுதாயத்திலும், மனதளவிலும் , உடலவிலும் )பெண்கள் மட்டுமே என்பது மறுக்க முடியாத உண்மை.

விஷம் என்று தெரிந்த பின்னர் அதை நாம் எவ்வாறு ஒதுக்கிகிரோமோ, அது போல , இந்த மனித ரூபத்தில் உள்ள மிருககங்களை , தீபந்தம் காட்டி விலக்க வேண்டும். அதற்கு 90% தைரியம் மற்றும் 10% புத்திசாலித்தனம் வேண்டும்.

அதே போல பெண்கள் ஐ ஆண்கள் போக பொருளாக பார்க்கிறாங்க என்ற வாதத்தையும் ஏற்று கொள்ள முடியாது. ஏனென்றால். எல்லா ஆணையும் பெத்து எடுப்பது ஒரு பெண் தான். அவன் வளர்ப்பு , அவனுக்கு பெண்களை மதிக்க கற்றுகொடுத்தல் எல்லாம் ஒரு தாயின் மூலமே வருகிறது இல்லையா. காலம் காலமாக பேச்சு சுதந்திரம் இல்லாமல், தன் தந்தையை போலவே பெண்களிடம் பழகும் ஒரு ஆண்மகனை எப்போது பெண்கள் தங்கள் கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வந்தார்களோ அப்பவே மாற்றியிருக்கலாமே !

பெண்கள் சுய முன்னேற்றப்பதையிலே நிறைய வந்து சாதித்தாலும், ஒரு விஷயத்தில் இன்னும் மாறவில்லை . எவ்வளவோ படித்த பெண்கள், நாகரீமான பெண்கள் இன்னும், தன பிள்ளைகளுக்கு சொல்லி தர வேண்டிய விஷயங்கள் ஏராளம். தான் சாதித்தால் மட்டும் போதாது. அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்ல வேண்டும் என்று அறிந்தாலே நிறைய ஆண்களிடம் மாற்றம் கண்டிப்பாக வருமே !

அதே போல, இந்த பெண்களை கவர்ச்சிக்காக விளம்பரங்களில் பயன்படுத்துவது, ___ இது நம்மீது நாமே எச்சிலை துப்பு வது போன்றது. அந்த பெண்களின் சம்மதத்தோடு தானே விளம்பரங்கள் அரங்கேறுகின்றன. நம் பெண்களிடம் நோ சொல்லும் தைரிய மனப்பான்மை வந்து விட்டாலே , ஆண்கள் வாலை சுருட்டி ஓடி விடுவர். நாம் கொடுக்கும் இடம். நம் தலையிலேயே கை வைப்பார்.

எந்த பெண் இந்த ஆண் சமூதாயத்தை நிந்தித்து பேசுகிறாளோ, அவளே, ஒரு ஆண் தன்னை அழகி என்று வர்ணிக்க வேண்டி ஒரு பேஸ் க்ரீம் பயன்டுத்தும் ஒரு விளம்பரத்தில் நடிப்பதாக ஒரு கதை படித்தேன். எனக்கென்னவோ இது கதை அல்ல நிஜம் என்றே இக்கால யுவதிகள் அநேகம் பேரை பார்க்கும் பொது தோன்றுகிறது.

கொடூர காமுகன்கள் அதிகம் ஆகியிருக்கலாம், மீடியாக்கள் அதை வெட்ட வெளிச்சம் ஆக்கலாம். வெறுப்பு நம் மனதில் கொதிக்கலாம். இதனால் இன்னும் போதை தலைக்கேற , இளித்த சிரிப்புடம், ஹாயாக சிறைக்கு செல்லுவார்களே தவிர, ஒரு மாற்றமும் உண்டாகாது.

அதையே, சிறிது தைரியம் + சாம்ரத்தியம் + பாரதியின் பெண்மையும் கலந்து இருப்போமானால் கண்டிப்பாக, நம் வாழ்க்கை நல்லாவே இருக்கும். அந்த கேடு
கெட்ட்வங்களின் எண்ணிக்கையும் குறையும்.

இப்போதைக்கும் தகிரியமா போயிட்டு, அப்பாலைக்கு எதிரணி களோட தீபொறி தாக்காம
பயர் ப்ரூப் ட்ரஸ் போட்டுக்கிட்டு வரேன்

மான்புமிகு நடுவருக்கும் காலத்துக்கு ஏற்ற தலைப்ப கொடுத்த கவிக்கும் வாழ்த்துக்கள் :)

நடுவர் அவர்களே பெண்களுக்கு ஆண்களால் பாதிப்புகள் வர காரணமே நடை உடை பாவனைதாங்க
அடக்கம்,அமைதி,கட்டுப்பாடு,சாந்தம் இவையெல்லாம் பெண்களுக்கே உரித்தானது ஆனால் இப்ப இருக்கும் பொண்ணுங்களிடம் எங்க பார்க்கமுடியுது
உடுத்தும் உடை என்பது அடுத்தவர் கண்ணை உருத்தாமல் இருக்கனும் அதுதான் அழகு
இப்போ எல்லாம் ஃபேஷன் சொல்லிக்கிட்டு இஸ்டத்துக்கு உடை உடுத்தறாங்க
எனக்கு சுதந்திரம் இருக்கு நான் எப்படி வேனாலும் ட்ரெஷ் போடுவேன்னு லோ நெக்,லோ ஹிப்னு திரிஞ்சிட்டு இருந்தா ஆண்கள் சும்மா இருப்பாங்களா
அதை படம் புடிச்சி அவங்க பார்ப்பது இல்லாமல் இனையத்திலும் போட்டுடுறாங்க
அப்புறம் குத்துதே குடையுதேன்னு வருத்தபட்டு என்ன பிரயோசனம் சொல்லுங்க
எதுவுமே கட்டுக்குள் இருந்தால்தான் அழகும்,நன்மையும்
எல்லைகள் மீறும்போது ஆபத்தும் எல்லை மீறிவரத்தான் செய்யும்

//நீங்க ஓவியக்கல்லூரிய பத்தி தெரிஞ்சிருப்பீங்க, படிச்சிருப்பீங்க , சொல்ல கேட்டு இருப்பீங்க, ஆடை உடுத்தும் விதத்தினால்தான் சொன்னா, இன்னேரம் ஓவியக்கல்லூரியையே இழுத்து மூடீருப்பாங்களே நடுவரே, மாடலா வ்ந்த அத்துனை பேருமே சீரழிக்கப்பட்டு இருப்பாங்கலே!!//

அது அவங்க தொழில் அதுக்காக பொது இடத்திலும் ஆபாசமாக உடுத்தினா நல்லாவா இருக்கும்
நடிகைகள் ஆபாசமா போடறாங்கன்னா அது அவங்க ஃபீல்டுக்கு தேவைபடுது,இன்னும் இது போல தொழிலில் இருப்பவங்களும் கவர்ச்சியா உடை உடுத்துறாங்கன்னு நாமும் பொது இடத்துக்கு அப்படி உடுத்திட்டு போகலாமா
அப்படி போனால் அது நமக்குதானே ஆபத்து
பெண்களும் கொஞ்சமாவாது கட்டுப்பாடா இருக்கனும் நடுவரே அப்படி இல்லைனா அது தொல்லையில்தான் முடியும்
எங்கெல்லாம் பெண்களின் கட்டுப்பாடுகளும்,எல்லைகளும் மீறப்படுகிறதோ அங்கு பிரச்சனைகளும் அதிகரிக்குது என கூறி இப்போதைக்கு விடைபெறுகிறேன் நடுவரே.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் :-)

நேத்து கவிசிவாவும், லீலாதாமஸும் போட்ட போடுல நேத்து வந்த நம்ம சிவகுமார் அய்யா ஆடிப்போயிட்டாரு:-( அவர ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு இன்னிக்கு நம்ம காந்திமதி அம்மாவ கூட்டிட்டு வந்திருக்கேன்:-) ஹேப்பியா:-)

”அடியாத்தி, //அவ்ங்க வீட்டு பெண்களை இப்படி வெச்சு போட்டோ எடுப்பாங்களா??// எடுப்பீகளாயா.. நல்லா கேட்ட புள்ள ..கேக்கரவ கேணையனா எலிஃபேண்ட்டும் ஏரோப்ளேன் ஓட்டுமாம்..இவிக வீட்டு பொண்ணுங்க எல்லாம் குத்துவிளக்காம் ஊரான் விட்டு புள்ளைக எல்லாம் என்ன ஈடு தேங்காயா போறவனெல்லாம் பொருக்கி எடுக்க :-(

//நல்ல சாப்பாடுதுணி மணி இதெல்லாம் கொடுத்து மன்னரின் போகத்துக்காகவே வளர்க்கப்பட்ட "பிராய்லர் கோழிகள்" அந்த பாவப்பட்ட பெண்கள்..// பிராய்லர் கோழியா நினைச்சு வளர்த்ததுனாலதான அவனுகள பல பேர் பிராந்து (பைத்தியம்) ஆயி சுத்ததினானுங்க...

//அட மடையா, உன் தாயின் உதிரத்தை தாய்பாலாக உண்டுவளர்ந்தவந்தானே நீ!! ஆனால் பிற பெண்டிரின் அங்க அவயங்களை கேடுகெட்ட வர்ணைகளால் வர்ணிக்கிறாயே, உன் உடம்பில் ஓடுவது ரத்தமா, சாக்கடையா??//இப்போ சாக்கடையவிட கேவலமா உடம்பு பூரா டாஸ்மார்கில்ல ஓடுது..

//மரத்துக்கு ஒரு சேலைய சுத்திவிட்டாக்கூட பொண்ணுனு நினச்சு சுத்தி வரஆளுங்கள என்ன சொல்ல நடுவரே!!// இவனுகளையெல்லாம் பட்டுக்குஞ்சம் கட்டின விளக்குமாத்தாலேயே சாத்தனும் சாத்து...எனக்கு வர கோவத்துக்கு இருமா ஒரு சொம்பு தண்ணி குடிச்சுட்டு வாரேன்..

அருள் உங்களோட முதல் கட்ட வாதம் பிரமாதம். கிழி கிழின்னு கிழிச்சுப்போட்டிங்க காந்தி மதி அம்மாவே ஆடிப்போயிட்டாங்க..:-) நீங்க சொன்ன காரணங்களாலதான் பொது இடங்களில் பெண்கள் பாதிக்கபடறாங்கன்னு ரொம்ப நல்லாத்தெரியுது .. எதிரணியில என்ன சொல்லவராங்கன்னு கொஞ்சம் கேட்டுட்டு வரலாமா??

ரொம்ப நேரம் காக்க வைச்சதுக்கு இப்படி சோடாப்பாட்டில் எல்லாம் வீசக்கூடாது.. நீதி மன்றம்னு பாக்கறேன் இல்லனா அழுதுடுவேன்...

Don't Worry Be Happy.

//என் அன்பிற்கும்,பாசத்திற்கும் உரிய மகா கணம் (???) பொருந்திய நடுவர் அவர்களே..// இப்படி எதாவது எடக்குமுடக்கா கொஸ்டீன் கேப்பீங்கன்னுதான் நாலு பெப்சி பாட்டில தண்ணி நிரப்பி தோள்ல தொங்கவிட்டு வந்திருக்கேனாக்கும்:-) ஸ்பெஷல் பாராட்டுக்கு மிக்க நன்றி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..வரவேற்க வரலைங்கறதுக்காக பட்டிய அம்போன்னு விட்டு போயிடாதிங்க பச்ச மண்ணுல்ல கொஞ்சம் தெம்பாகி வரணும்ல அதான் கொஞ்சம் டைம் எடுத்துட்டேன் மன்னிச்சு மன்னிச்சு..சீக்கிரமா உங்கப் பக்கத்தை தேர்ந்தெடுத்து வாதத்தோட வாங்க :-)

Don't Worry Be Happy.

வாழ்த்துக்கு மிக்க நன்றி கூட்டணியோட கலக்க தங்களுக்கும் வாழ்த்துக்கள்:-)

சீக்கிரமா வாங்க காத்துட்டு இருக்கோம் :-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்