வெஜ் பிரிஞ்சி

தேதி: February 18, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப்
வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 3
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி கலவை - 200 கிராம்
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 3
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
நெய் - 4 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பாஸ்மதி அரிசியை களைந்து ஊற வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸை ஒரு இன்ச் அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி, காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் பாஸ்மதி அரிசி சேர்க்கவும்.
பின் தேங்காய் பால் ஊற்றி, கொதி வரும் போது நெய் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
சுவையான வெஜ் பிரிஞ்சி தயார். தயிர் பச்சடி, முட்டையுடன் சேர்த்து பரிமாறவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

கலக்குங்க கனி.,சூப்ப்ர் அன்ட் சிம்பிள் ரெசிபி,பார்க்க பார்க்க சாப்பிட தோணுது பா.எனக்கு ஒரு ப்ளேட் பார்சல்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

குறிப்பை வெளியிட்ட அட்மின்க்கு மிக்க நன்றி ( ஸ்பெஷல் தான்க்ஸ் டூ பத்மா மேட :-)))

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வித்து அக்கா உங்களுகு இல்லாததா தாராளமா எடுத்துகோங்க பதிவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி பளிச் பளிச் போட்டோஸோட
குறிப்பு அருமையா இருக்கு,
வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள் அக்கா வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கலர்ஃபுல் பிரியாணி :) நல்லா இருக்கு கனி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அட ரெசிபி சூப்பர் மா ... இதை நாளை செய்து பார்க்கலாம்னு இருக்கேன் ...வாழ்த்துக்கள்...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

சூப்பர் கனி நீங்களே செஞ்சேங்களா?வாழ்த்துகள்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

நல்லா செய்துருகீங்க கனி.வாழ்த்துக்கள் :)

Kalai

சங்கீ அக்கா வாழ்த்துக்கு மிக்க நன்றி செய்து பார்த்துட்டு எப்படி வந்துச்சு நு சொல்லுங்க அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ப்ரியங்கா அக்கா ஹ்ம்ம் நானே தான் செஞ்சேன் வருகைக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கலா அக்கா வருகைகும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

super ah panirukinga mam...

maha

சூப்பரா இருக்கு ரொம்ப நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மஹாலக்ஷ்மி வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முசி அக்கா பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி சுவையான பிரியாணி சூப்பரா இருக்கு வாழ்த்துகள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்