காஷ்மீரி ஆலூ

தேதி: February 18, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
தக்காளி விழுது - அரை கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
மல்லிப் பொடி - அரை தேக்கரண்டி
சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - சிறிது
மல்லித் தழை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் போட்டு அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பொடி வகைகள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் உருளைக்கிழங்கைப் போட்டு கிளறவும்.
சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்க விடவும். 2 நிமிடம் உருளைக்கிழங்கை வேக விடவும்.
பிறகு மல்லித் தழை சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான காஷ்மீரி ஆலூ தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல ரெசிபி.வாழ்த்துக்கள்.செஞ்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்ரேன்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

சங்கீதா அக்கா டேஸ்டி அன்ட் சூப்பர் குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

படங்கள் பளிச் :) சூப்பர். சுலபமான குறிப்பும் கூட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி .....

வித்யா கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க ....உங்க வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

கனிமொழி ரொம்ப நன்றி பா ...

வனிதா ரொம்ப நன்றி பா....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

காஷ்மிரி ஆலு சிம்பிள் அன்ட் சூப்பர்.வாழ்த்துக்கள் :)

Kalai

காஷ்மீரி ஆலு குறிப்பு அருமை...வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருமையான குறிப்பு படங்களும் அழகு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

thank you so much swarna

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

சங்கீ அக்கா.

சமையல் அருமை. ரொம்ப எளிமையா இருக்கு. இது காஸ்மீர் உணவா அக்கா

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

காஷ்மீரி ஆலூ seithen superraa irunthathu