ரத்தப்பொரியல்

தேதி: February 19, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (4 votes)

 

ஆட்டு ரத்தம் - ஒரு கப்
கடலைப்பருப்பு - கைப்பிடி
தேங்காய் துருவல் - கால் கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மல்லித் தூள் - சிறிது
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
பட்டை - ஒரு துண்டு
சோம்பு - கால் தேக்கரண்டி


 

இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி ரத்தத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து மூடி வேக வைக்கவும். கத்தியால் நடுவில் விட்டு பார்த்து ஒட்டாமல் வருகிறதா என உறுதிப்படுத்தி இறக்கவும்.
பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து ஒரு சுற்று அரைத்து வைக்கவும்.
வேக வைத்த ரத்தத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய ரத்தத்தில் கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பிசைந்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
சுவையான ரத்தப்பொரியல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரத்தம் !!! வித விதமா சமைக்கறீங்க... எனக்கு இது போல சமையல் எல்லாம் சுத்தமா தெரியாது சுவா. அழகா இருக்கு கடைசி படம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புதுமையான ரெசிபி.வாழ்த்துக்கள்.நான் ரத்தம் வாங்கினதே இல்லை.வாங்கி செஞ்சி பார்க்க ஆசை வந்துடுச்சு.சீக்கிரம் செய்ரேன்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

ஸ்வர்ணா அக்கா ரத்தப்பொரியல் அம்மாகு புடிச்ச ரெசிபி ரொம்ப நாள் ஆய்டுச்சு அக்கா இந்த வாரம் அம்மகிட்ட சொல்லி செய்ய சொல்லுரேன் ஆனா நா இன்ன வரைக்கும் ஒரு நால் கூட டேஸ்ட் பன்னதே இல்ல அக்கா படங்கள் லாம் ரொம்பவே அழகா இருக்கு அக்கா ரொம்ப நல்ல குறிப்பு
******

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுவா குறிப்பு அருமை:)) படங்கள் அழகா தெளிவா இருக்கு வாழ்த்துக்கள் சுவா :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி முதல் வருகைக்கு மிக்க நன்றிப்பா :) ரொம்ப ஈசிதான் வனி ட்ரை பன்னி பாருங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வித்யா மிக்க நன்றி :) செய்து பார்த்து சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கனி மிக்க நன்றி :) சீக்கிறமே செய்துபாருங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரத்த பொரியல் நல்லா செய்து காட்டியிருக்கீங்க.அம்மா செய்வாங்க..ஆனா நா சாப்பிட்டது இல்லை.வாழ்த்துக்கள்

Kalai

வாழ்த்துக்கள்!!!
படங்கள் எல்லாம் சூப்பர்....
நான் ரத்த பொரியல் சாப்பிட்டதே இல்லை. அது என்னமோ பயம் எனக்கு...
அப்புறம் அக்கா எனக்கு ஒரு டவுட். முதல் படத்தில் ரத்தம் சிவப்பா இருக்கு. பொடியா நறுக்கும் பொது அப்படியே கலர் change ஆயிருக்கு. இப்படி தான் வருமா ?

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

கலை மிக்க நன்றிப்பா :) ஒரு முறை செய்து பாருங்க பிடிக்கும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுதா மிக்க நன்றிப்பா :) பயமா எதுக்கு :)
ரத்தம் வெந்ததும் கலர் மாறிடும் சுதா ஈரல் மாதிரி இருக்கும் பார்க்க செய்து பாருங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா, ரத்தம்..... பாட்டி வீட்ல ஒரே முறை செய்தாங்க.. தூரமா நின்னு எட்டி பார்த்துட்டு ஓடினதோட சரி. செய்த பிறகு பக்கத்துல கூட போகல :( இப்ப உங்க குறிப்பை பார்த்து உள்ளே வந்தேன். இந்த முறையில் க.பருப்பு சேர்த்து செய்திருப்பது புதுமையாக உள்ளது சுவா. நீங்க க.பருப்புக்கு விசிறியா? B) நல்லார்க்கு சுவா.. வாழ்த்துக்கள் :)

//வனி ட்ரை பன்னி பாருங்க :)// ரத்தம்-னு போட்டு ஆச்சர்ய குறி போட்டிருக்கவங்க கிட்ட பன்னி-ய வேற பண்ணி பார்க்க சொல்றீங்களே இது நியாயமா? அடுக்குமா? நடக்குமா B)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹஹஹா.... கரக்ட்டு கரக்ட்டு... ;) ஆனா இப்ப அவங்க ஊரில் இல்லைன்னு தைரியத்துல போட்டு தாக்கி இருக்கீங்க.. வந்தா இருக்கு உங்களுக்கு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்வரு
நானும் அது போல தான்.. ரத்தம் பார்க்கும் போது தூரத்தில் நின்னு பார்த்துட்டு ஓடிடுவேன்.. அது கட்டியானத்தை பார்த்த பின், ரெட் ஜெல்லி ஐஸ் கிரீமை பார்த்தும் பயம்.. ஆனா நீங்க அழகா செய்து காட்டி இருக்கிங்க.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)