தேதி: February 20, 2013
கார்டு ஸ்டாக் பேப்பர் - கால் அங்குல ஸ்ட்ரிப் (விரும்பும் நிறத்தில்)
க்வில்லிங் டூல்
கம்மல் கொக்கிகள்
க்ளூ
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வெள்ளை நிற ஸ்ட்ரிப்புடன் 2 நீல நிற ஸ்ட்ரிப்பை நீளமாக வரும் படி இணைத்து க்வில்லிங் டூலில் வைத்து இறுக்கமாக சுற்றி ஒட்டவும்.

படத்திலுள்ளது போல் இருக்கும். இதை அப்படியே வட்டமாகவும் கம்மல் செய்யலாம். நான் ஒரு முனையை லேசாக அழுத்தி இந்த வடிவில் செய்துள்ளேன். ஒரு வெள்ளை ஸ்ட்ரிப்பை இரண்டாக வெட்டி, ஒன்றை டூலில் வைத்து சுற்றி ஒட்டவும் .இதன் நடுவில், கம்மல் கொக்கியில் உள்ள வளையத்தை நுழைத்து இறுக்கிவிடவும். இதனை செய்து வைத்துள்ள கம்மலின் மேல் ஓட்டவும். இதே போல் இன்னொரு கம்மலுக்கும் செய்து முடிக்கவும். இதனை விரும்பும் இடங்களில் மணிகள் வைத்து அலங்கரிக்கலாம்.

ரோஸ் நிற ஸ்ட்ரிப்புடன் 2 பச்சை நிற ஸ்ட்ரிப்புகள் ஒட்டி, அதை இறுக்கமாக டூலால் சுற்றி ஓட்டவும். அதன் நடுவில் டூலால் அழுத்தினால் ஜிமிக்கி போல் வடிவம் கிடைக்கும். ஒரு பச்சை நிற ஸ்ட்ரிப்பை இரண்டாக வெட்டி, ஒன்றை டூலில் வைத்து சுற்றி ஒட்டவும். இதனை ஒரு பக்கம் லேசாக அழுத்தி முக்கோண வடிவில் செய்து இதன் நடுவில், கம்மல் கொக்கியில் உள்ள வளையத்தை நுழைத்து இறுக்கிவிடவும். இதனை செய்து வைத்துள்ள ஜிமிக்கி மேல் ஓட்டவும். இதே போல் இன்னொரு ஜிமிக்கிக்கும் செய்து முடிக்கவும்.

அழகான, எளிமையாக செய்யக்கூடிய கம்மல் தயார்.

இதே போல் செய்த வேறு டிசைன்கள் இவை. இதே போல் நம் விருப்பத்திற்கும், உடுத்தும் உடைக்கும் ஏற்ப வேண்டிய வடிவங்களில், நிறங்களில் செய்யலாம்.

Comments
கலா
ரொம்ப அழகா இருக்கு :) சூப்பர்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
க்வில்லிங் கலா
கம்மல் எல்லாம் சூப்பர்.
- இமா க்றிஸ்
கம்மல்
கலா உங்க குறிப்பு அருமை .... அழகா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்...
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
Wow!
எல்லாமே அசத்தலா இருக்கு
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
கலை
கலை
க்யூட் க்யூட் கம்மல்ஸ்..
அழகு.. வாழ்த்துக்கள் :)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
நன்றி
குறிப்பை அழகாக வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி :)
Kalai
இமா
இமா ஆன்டி மிக்க நன்றி :)
Kalai
சங்கீதா
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றிகள் சங்கீதா :)
Kalai
ராஜி
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி ராஜி :)
Kalai
ரம்யா
வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரம்யா :)
Kalai
க்வில்டு கம்மல்
மிக்க நன்றி வனிதா அக்கா :)
Kalai
Qulling
என்னங்க இவ்வளவு சூப்பரா இருக்கு..பயங்கர ஐடியாவோட தான் எல்லாரும் இருக்கீங்க போலிருக்கு..நேற்று தான் சில தளங்களில் க்வில்ட் கம்மல் விற்பனை பார்த்தேன் இப்போ செய்தே காட்டிட்டீங்க.அருமைங்க
கலா
ரொம்ப க்யூட்டா இருக்கு கம்மல்கள் எல்லாமே க்வில்ட் ராணிஆகிட்டீங்க கலா வாழ்த்துக்கள்
கலா
அத்தனையும் அழகு.வாழ்த்துக்கள்
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
கம்மல்
தளிகா மிக்க நன்றிங்க :) இதைவிடவும் நல்ல க்ரியேடிவா செய்றவங்க இருக்காங்க :)
Kalai
உமா
மிக்க நன்றி உமா :) க்வில்டு ராணி லாம் இல்லைங்க :)
Kalai
முசி
மிக்க நன்றிங்க முஹசினா :)
Kalai
கலா அக்கா
கலா அக்கா ரொம்ப க்யூட்டா அழகா இருக்கு க்வில்டு கம்மல் சூப்பர்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கலா
க்வில்டு கம்மல், எல்லா டிசைனும் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.
கனி
வருகைக்கும்,பதிவிற்கும் மிக்க நன்றி கனி :)
Kalai
வினோஜா
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வினோஜா :)
Kalai
கலா
கம்மல் சூப்பர் வெயிட்லெஸ்ஸா கலர்ஃபுல்லா சூப்பரா இருக்கு.விதவிதமா செய்யலாம்
நிக்கி
மிக்க நன்றி நிக்கி :)
Kalai
கலா
கலா,
அழகு கம்மல்கள்
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
கவி
மிக்க நன்றி கவி :)
Kalai
Nice........
It's easy to design..... Thank you so much.
seithu parthen
miga arumai....
nanum seihten.... en thangaiyum use pani patha... nandraga ullathu
nandri......
kammal
romba alaga irukku! akka