செட்டிநாடு இறால் பிரியாணி

தேதி: February 20, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (14 votes)

 

இறால் - அரை கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கறி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
மல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடி
உப்பு
ஊற வைக்க:
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 3
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - ஒன்று
அன்னாசிப்பூ - பாதி
மராத்தி மொக்கு - ஒன்று
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

இறாலை சுத்தம் செய்து ஊற வைக்க கொடுத்தவற்றை சேர்க்கவும். இது குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வேண்டும். பாசுமதி அரிசியை களைந்து 20 நிமிடம் ஊற விடவும். பச்சை மிளகாயை நசுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, நசுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.
தயிர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
பின் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு, மல்லித் தழை புதினா சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி சிறுந்தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.
சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார்.

இங்கு கறி தூள் என்பது மிளகாய், தனியா மேலும் சில பொருட்கள் சேர்த்து அரைத்து. கடைகளில் கிடைக்கும் தூள். ரெடிமேட் கறி தூளும் பயன்படுத்தலாம். இறால் ஃப்ரெஷாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும். நான் ஃப்ரோசன் தான் பயன்படுத்தி இருக்கிறேன். அதுவும் மிக சின்ன சைசில் உள்ளவை. ஆனால் பிரியாணி சுவை அருமை. விரும்பினால் நீருக்கு பதில் பாதி தேங்காய் பாலும், பாதி நீரும் கூட பயன்படுத்தலாம். நீரின் அளவு அவரவர் பயன்படுத்தும் அரிசிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும். அரிசி சேர்த்த உடனே கலந்து விடுவதோடு விட்டு விடவும். அடிக்கடி கிளறினால் பிரியாணி குழைந்து போகும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இறா பிரியாணி சூப்பர் பா.பார்த்தவுடனே சாப்பிட தோணுதே.இன்னைகே செய்ரேன்.வாழ்த்துக்கள்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

வனி அக்கா கலக்கல் டிஷ்.... செட்டிநாடு இறால் பிரியாணி
நா இன்னமும் ட்ரை பன்னாத டிஷ் அக்க பார்த்ததுமே நிச்சயமா செஞ்சு பார்த்துடனும் நு முடிவு பன்னிடேன் அக்கா ரொம்ப ரொம்ப நல்ல குறிப்பு :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Vanitha romba nalla kurippu.... Intha murai Iral vagina kandipa seven Vazhthukkkal

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

superrrrrrrrrrr kuripu, biriyani partha udane appidie alli sapidanum pola thonuthu..:)pasanga ready yana udane seithudaren...vazlthukkal vani..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வனி இறால் பிரியாணி அருமையா இருக்குங்க ஆனா நான் இறால் செய்ததே இல்ல பார்க்கவே சாப்பிடத்தோனுது வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி, இறால் பிரியாணியை முறைப்படி செய்து சாப்பிடனும்னு ஆசை.. இங்கே ரெடிமேட் மசாலா போரா இருக்கும்.. நீங்க சொன்ன முறையில் மசாலா சேர்த்து செய்யும் பிரியாணி நல்ல டேஸ்ட் வரும்னு நினைக்கறேன். நீங்க சொன்ன மாதிரி ப்ரோசன் இறாலை விட ப்ரெஷ் இறால் பிரியாணிக்கு சுவையும், மணமும் தரும். பச்சை மிளகாய் தட்டி போட்டு நல்ல காரசாரமா பண்ணியிருக்கீங்க. இப்பவே ஜொள் ஊத்துது. எல்லா மசாலாவும் இருக்கு வனி. இறால் வாங்கி அடுத்த வாரம் செய்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள் வனி :) கடைசியா ஒரே டவுட்.. நார்மலா நான் பாஸ்மதி அரிசி ஒரு கப்புக்கு ரெண்டு கப் தண்ணி தான் ஊத்துவேன்.. நீங்க மூணே கால், மூணரை சொல்லியிருக்கீங்க. குழைஞ்சு போகாதா? இதை மட்டும் க்ளியர் பண்ணிடுங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Great வனி அக்கா. எளிதான முறை பார்க்கவே நாவில் எச்சி ஊறுகிறது.

Maturity is not when we start speaking “BIG” things!
It is when we start understanding “small” things!

எறா பிரியாணி சூப்பர். வாழ்த்துக்கள்.அடுத்த முறை இறால் வாங்கினா இப்படி செய்துட்டு சொல்றேன் :)

Kalai

Haï vanitha iral biriyani super intha murai iral vagina seven nalla kurippu

செட்டிநாடு இறால் பிரியாணி குறிப்பு அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி

பிரான் ஷேப் பார்த்தாலே எனக்கு எதோ ஒரு மாதிரி தோணும்.. சாப்பிடுவதில்லை.. ஆனா வழக்கம் போல கடைசி படம் அழகு.. வாழத்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தங்கச்சி,
செட்டிநாடு இறால் பிரியாணி செய்தாச்சு... எப்போதும் போல் சூப்பர் டேஸ்ட் ;-)

நன்றி தங்கச்சி:-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

vanitha mam neenga paniruka briyaniya paartona romba pasikudhu chance ah illa superb ah panirukinga...

maha

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்தீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) முடிவு பண்ணியாச்சா... செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் செய்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பசங்களுக்கு உடம்பு இப்ப எப்படி இருக்கு சுமி?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) நண்டெல்லாம் சமைக்கறீங்க, இறலுக்கு பயப்படலாமா... செய்யுங்க சுவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ஃப்ரெஷுக்கு இங்க நான் எங்க போக ;) மகளே... 1 கப்புன்னா 2 கப்... நான் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 3/4 சொல்லி இருக்கேன்... உங்க வீட்டு அரிசிக்கு வெந்தா சரி... குழையலாம் வாய்ப்பில்லை ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) இப்படி எல்லாம் சொல்லி என்னை சாப்பிட விடாம பண்ணிடாதீங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க தான் அக்கா எனக்கு ஏற்ற தோஸ்த்... செய்தாச்சா... வெரி வெரி குட். ;) மிக்க நன்றி உங்களுக்கு இல்லை. சந்தோஷம் அக்கா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கு இந்த பிரியாணி செய்தேன்.நல்ல சுவையா இருந்துச்சு வாழ்த்துக்கள் வனிக்கா :)

Kalai

மிக்க நன்றி கலை :) நிறைய குறிப்புகளை செய்து படத்தோட போட்டு அசத்துறீங்க, மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா