தேங்காய் வெங்காயத் துவையல்

தேதி: September 29, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய்த்துருவல்- ஒரு கை
கொத்தமல்லித்தழை- 2 கை
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்-3
பச்சைமிளகாய்-7
சிறிய பூண்டுப்பற்கள்-5
நறுக்கிய இஞ்சி-கால் ஸ்பூன்
புளி- நெல்லியளவு
கறிவேப்பிலை- 15இலைகள்
தேவையான உப்பு


 

புளியை சிறிது வென்னீரில் ஊற வைக்கவும். பிறகு மற்ற பொருட்களைச் சேர்த்து மையாக அரைக்காமல் ஒன்று பாதியாக அரைப்பது போல அரைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று மதிய சாப்படிற்க்குஎங்க வீட்டில் இந்த துவையல் செய்தேன். சூடான சாததிற்க்கு ரொம்ப நன்றாக இருக்கும் . நன்றி மனோ மேடம்.

தேங்காய் வெங்காயத்துவையல் செய்து பார்த்து நன்றாக இருக்கிறது என்று எழுதியது மிகவும் மகிழ்வாக உள்ளது. உங்களுக்கு என் அன்பான நன்றி!!

மனோ அக்கா, இத் துவையல் இன்று செய்தேன், கொத்தமல்லி குறைவாகத்தான் சேர்த்தேன். மற்றும்படி இஞ்சி உள்ளி சேர்த்தால், வதக்கித்தான் அரைப்பேன். இன்று பச்சையாகவே அரைத்தேன், நல்ல காரசாரமாக இருந்தது. வவயிற்கு நன்றாக இருந்தது. முடிந்தவரை முடிவில் படங்கள் எடுக்கிறேன் வரும்போது பாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்புள்ள அதிரா!

இந்தத் துவையல் கறி பிரியாணிக்குத் தொட்டுக்கொள்ள காரசாரமாக, சுவையாக இருக்கும். என் சினேகிதி இல்லத்தில் அதுபோல செய்வார்கள். இது சுவையாக இருந்ததென அன்பான பின்னூட்டமளித்த உங்களுக்கு என் அன்பு நன்றிகள்!!

அன்பு மனோ அக்கா

இன்று தேங்காய் வெங்காய துவையல் செய்தேன் மிகவும் ருசியாகயிருந்தது மிக்க நன்றி.

என்றும் அன்புடன்.
மைதிலி.

Mb

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த தேங்காய் வெங்காயத்துவையலின் படம்

<img src="files/pictures/aa211.jpg" alt="picture" />

அன்புள்ள அதிரா!

துவையல் பசுமையான கலரில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது!!