எனக்கு எச்.ஐ.வி உள்ளது. உதவுங்கள்.

எனக்கு எச்.ஐ.வி உள்ளது. என்னை தவறாக நினைக்க வேண்டாம். ஒரு ஆப்ரேசனினால் வந்தது. நாங்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள். எனக்கு சிறிய குழந்தை உள்ளது. ஏங்களுக்கு பிரச்சனைகள் எதுவும் கிடையாது. எங்களை போல் சந்தோசமான தம்பதிகளும் கிடையாது. விதி வலியது. எனக்கு இந்த கொடிய நோயை கொடுத்து விட்டது. சீக்கிரம் செத்து விடுவோமோ என்ற பயம் எனக்கு உள்ளது. இவ்வளவு அன்பான குடும்பத்தை விட்டு விட்டு சாக மனதில்லை. இக்கொடுமையிலிருந்து வெளியேற வழி சொல்லுங்கள். நான் வேறு யாரிடமும் இதை சொன்னதில்லை. என் கணவரைத் தவிர குடும்பத்தினர் யருக்கும் தெரியாது. உங்களை என் உறவெனக்கருதி இதை சொல்லுகிறென். நான் புதியவலல்ல. அறுசுவையில் இருந்து வருபவள் தான். என் பெயரில் கேட்க முடியாததால் பெயரை மற்றி கேட்கிறேன். இந்த நோயை குறைக்கவோ இல்லை தீர்க்கவோ வழி இருந்தால் சொல்லுங்கள். தயவு செய்து உதவுங்கள்.

எனக்கு உதவ யாருக்கும் மனமில்லையோ

யாரும் உங்களுக்கு பதிவு போடலையேன்னு வருந்தாதீங்க அக்கா . வீக் எண்டு இல்ல, நம்ம தோழிகள் பதிவுகளை பார்க்காமல் இருந்துருபாங்க. இதை பற்றி தெரிந்தவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு ரிப்ளை பண்ணுவாங்க அக்கா .
உங்க மனவருத்தம் நல்லாவே புரிகிறது. ஆனா எனக்கு நீங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாது. வருத்தபடாதீங்க அக்கா. உங்களை நல்லா புரிந்துகொண்ட, உங்க மேல உயிரையே வைத்திருக்கும் அன்பான கணவர் இருக்காங்க. மனச அதிகமாக வருத்திகாதீங்க. உங்க குழந்தையின் சிரிப்பை பாருங்க. வலிகள் கரைந்து போகும். உங்களுக்காக நான் கடவுளை வேண்டிக்கறேன்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

email id இருந்தால்எனது email id க்குஅனுப்பவும் .licumag@gmail.com

அன்புத் தோழி ,
வேதனைக்கு உரிய பதிவு . இருப்பினும் சரியான சிகிச்சை முறை நீண்ட காலம் வாழ வழி வகுக்கும். உங்கள் குழந்தையின் உருவத்தில் தெய்வத்தை உணருங்கள் .மனதைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் . என் பிராத்தனைகள் .

ஆங்கில மருத்துவத்தில் இதுக்கு இப்போ ட்ரீட்மண்ட் இருக்கு தானே? மருத்துவரை பார்த்திருப்பீங்க... சித்தாவிலும் ட்ரை பண்ணி பாருங்க. அவங்க தான் இதுக்கு முழுமையான தீர்வு இருக்குன்னு சொல்றாங்க... தெரியல முழுசா தகவல். இறைவன் துணை என்றும் இருக்கும். கவலை வேண்டாம்... சொல்வது சுலபம், ஆனா உங்க மனசு இப்ப எப்படி தவிக்கும்னு புரியுது. சீக்கிரம் சரியாகி நல்லபடியா வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மனதை தளரவிடாதீர்கள்... தற்பொழுது இதற்கு ஆங்கில மருத்துவத்தில் முக்கியமான பெரிய மருத்துவமனைகள் அனைத்திலும் இதற்கான சிகிச்சை பிரிவு இய்ங்குவதாக படித்துள்ளேன். எதற்கும் உங்கள் ஊரில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்..... நீண்ட ஆயுளுடன் உங்கள் குடும்பாத்தாருடன் வாழ எங்கள் அனைவரின் பிரார்த்தனைகள்.... உங்களின் மனம் அமைதியை நாட்டட்டும். உங்கள் மனம் இருக்கும் நிலையில் யாராக இருந்தாலும் தவித்துதான் போவார்கள்... மருத்துவ ஆலோசனைகளை முறையாக பின்பற்றுங்கள் தோழி ...

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Follow healers baskars anatomic therapy . If u Search in google u will find anatomic therapy site and watch the videos .if u have doubt call the number given in that site .follow the medicine given by doctors. I m using mobile that's why I m typing in English

ஹெச் ஐ வியும் எயிட்ஸ் உம் ஒன்றல்ல..

நமக்கு யாருக்கு தான் உயிருக்கு உத்திரவாதம் இருக்கு..எல்லோரும் ஒரே பாதையை நோக்கி பயனிப்பவர்கள் தான் அதுவரை உடம்பை ஒழுங்காப் பார்த்துக் கொள்வது மட்டும் நம் கடமை
தோழி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும்படியான உணவுகளை உட்கொள்ளுங்கள்..
ஒரு நாலு பல் பூண்டை 1 லிட்டர் பாலில் போட்டு 1/4 லிட்டராக வற்றும் வரை காய்ச்சி வாரம் ஒன்று அல்லது இருமுறை குடிப்பது உடலுக்கு நல்லது
கேரட்,கீரை வகைகள்,மீன்,பழங்கள்,சத்து மாவு கஞ்சி,பப்பாளி பழம் என நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்..பழம் காய்கறிகளை சாப்பிடுவதற்கு மணிநேரம் முன்பே மஞ்சள் உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைத்து பிறகு கழுகி பயன்படுத்துங்கள்.
கருஞ்சீரகம் அருமையான ஒன்று.வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு தண்ணி குடிச்சுடுங்க.ஹீலர் பாஸ்கர் அவர்கள் சொன்னது போல் ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் உணவை மென்று அரைத்து கூழாக்கி முழுங்கவும்..அவசரப்பட்டு சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்கவும்.உடம்பை பார்த்துக்குங்க ஆண்வனை நம்புங்க எதுவும் வராதுன்னு தைரியமா இருங்க

இந்த பதிவு வருத்தமளிக்கிறது. அனைவரும் ஒருநாள் இறப்பவர்கள்
தான்.இருக்கும் வரை மகிழ்வோடு வாழ்வோம்.அதனால் கவலை வேண்டாம் தோழி.
உங்கள் கணவர் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்போது கவலைவேண்டாம்.கடவுளை நம்புங்கள்.நிச்சயமாக உங்கள் பிரச்சனை தீரும்.

செவி வழி தொடு சிகிச்சை பார்க்கவும்.

மேலும் சில பதிவுகள்