பீட்ரூட் சட்னி

தேதி: February 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (6 votes)

 

பீட்ரூட் - 2
வெங்காயம் - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
எண்ணெய்


 

பீட்ரூட்டை தோல் நீக்கி சீவிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, போட்டு தாளித்து, சீரகம், தனியா, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும்.
பின்பு உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக விடவும்.
வெந்ததும் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
பீட்ரூட் சட்னி தயார். சாதம், இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

இச்சட்னியை இட்லி மாவுடன் கலந்து, தோசை, பணியாரம், இட்லியாகவும் செய்யலாம். குழந்தைகள் மிகவும் விரும்புவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் சூப்பர் கலர்ஃபுல் ஹெல்த்தி சட்னி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருட்செல்வி அக்கா பீட்ரூட் சட்னி ரொம்ப வித்யாசமான குறிப்பா இருகேன் நான் முதல் முரை பீட்ரூட் ல இந்த ரெசிபி பாகுரேன் நல்ல குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பீட்ரூட் சட்னி புதுசா இருக்கே. ஹெல்தியும் கூட ட்ரை பண்ணிடுவோம். வாழ்த்துக்கள்.

முதல் பதிவிட்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கனி கண்டிப்பா முயற்சி செய்து பாருங்க.... பதிவிற்கு மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாழ்த்திற்கும் பதிவிற்கும் மிக்க நன்றி வினோஜா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின்&குழுவினருக்கு மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள் அருமையான ரெசிப்பி வாழ்த்துக்கள். எல்லாப் பொருளும் இருக்கு செய்துர வேண்டியது தான்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

அருமையான கலர்புல்லான குறிப்பு . அம்மாவை செய்ய சொல்லி, சாப்பிட்டு, எப்படி இருந்ததுன்னு சொல்றேன் . வாழ்த்துக்கள் . :)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

அருளு
உங்க குறிப்பு தாணு கண்டுபிடிச்சேனே :)
கலர்ஃபுள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆஹா!! எளிமையான ஆரோக்கியமான குறிப்பு!

Maturity is not when we start speaking “BIG” things!
It is when we start understanding “small” things!

பதிவிற்கும், பாராட்டிற்கும் நன்றி லீமா:)
கண்டிப்பா முயற்சிசெய்து பாருங்க:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பதிவிற்கும் பாராட்டிற்கும் நன்றி:)
கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரம்ஸ் மிக்க நன்றி:)
கண்டுபிடிச்சீங்களா??
அவ்ளோ தெளிவா தெரியுதா குறிப்பு என்னோடதுனு:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பதிவிற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள்,
புதுமையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அருள்,
பீட்ரூட் சட்னி நல்லதொரு ஹெல்தி குறிப்பு! கடைசிப்படத்துல சட்னி கலர் சும்மா கலக்குது! சூப்பர்ர்ர்!! :) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

அருள் முகப்புலயே தெரிஞ்சிடுச்சே உங்க குறிப்புன்னு:) சத்தான கலர்ஃபுல் குறிப்பு படங்கள் தெள்ளத்தெளிவு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருள் இந்த சட்னி செய்து சாப்பிட்டு பின்னூட்டம் போடறேன். சுவை அருமை. கூட சிறிது புளியும் வைத்தேன் .செய்வதற்கு எளிமையா இருந்தது. நன்றி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

பீட்ரூட் சட்னி ரொம்ப சுவையா இருந்திச்சு.நமக்கு காரம் கொஞ்சம் அதிகமா வேணும்,அதனால கூட மூணு மிளகாய் சேர்த்தேன்.நல்ல குறிப்புக்கு நன்றி அருளு :)

Kalai