6 மாத கர்ப்பிணி-வயிற்று வலி

ஹாய் தோழிகளே...
நான் 6 மாத கர்ப்பிணி....எனது சந்தேகங்களுக்கு பதில் கூறுங்கள் ப்ளீஸ்...
1.நான் இன்ஃபெக்ஷனுக்காக 1 வாரம் எரித்ரோம்ய்cஇன் டேப்லட் சாப்பிட்டேன்...அப்பொழுது லேசான வயிற்று வலி,மயக்கம்,வாந்தி இருந்தது...நேற்றோடு மருந்து முடின்து விட்டது...இப்பொழுதும் வாந்தி,வயிற்று வலி உள்ளது (பொறுக்க கூடிய அளவில் தான்)
2.எனக்கு 2 நாட்களாக மூலம் போன்று உள்ளது...இதுவும் நார்மல் தானா?
எனக்கு டாக்டர் அப்பாயின்ட்மென்ட் அடுத்த வாரம் தான்...அது வரை என்ன செய்வது?
எனது குழப்பத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே..
என்னால் பழைய ஐடியில் இருந்து மெசேஜ் பண்ண முடியவில்லை...பாஸ்வேர்டு மறந்து விடாது...

மருத்துவரின் போன் நம்பர் இருந்தால் தொடர்பு கொண்டு சந்தேகத்தை தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

தோழி தினம் இரவு உணவை குறைத்து நிறைய பச்சை காய்கறி பழம் சேலட் சாப்பிடுங்க தினம் 1 கேரட் சாப்பிடுங்க கீரை சேத்துக்குங்க..படுக்கும் முன் 1 அத்திப்பழம் சாப்பிட்டு படுங்க

பூர்ணிமா, தளிகா ரெண்டு பேரும் வேற வேற விஷயத்தை மனசில வைச்சு பதில் சொல்லி இருக்காங்க. முதல்ல டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. கூடவே தளிகா சொன்னதையும் செய்யுங்க.

‍- இமா க்றிஸ்

நன்றி பூர்ணிமா,தளிகா,இமா........
நான் 2 தினங்களாக வெளி உணவை சாப்பிட்டதால் வந்த விளைவே வாந்தி,வலி...
இப்பொழுது பரவாயில்லை....நான் அடுத்த வாரம் கன்சல்ட்டிங் போகும் போது கேட்கிறேன்...நான் தயிர் சாப்பிடலாமா?

வெளி உணவை இனி எடுக்காதிங்க மூலம் இருப்பதால் சொன்னிங்க கருணைக்கிழங்கு சாப்டுங்க ,சூட்டுனால தான் மூலம் வரும்.
நிறைய தண்ணீர் குடிக்க . தயிர் தாராளமா சாப்பிடலாம் ..சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுங்க ரொம்ப நல்லது

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

2013ல் போட்ட பதிவிற்கு இப்போது பதில் கொடுத்து உள்ளீர்கள்.. இந்நேரம் குழந்தை ஸ்கூல் போய் இருப்பார்.. பயனுள்ள தகவல் தான் இது..

மேலும் சில பதிவுகள்