டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படி கையாள்வது?

தோழீஸ்
ஒரு பக்கம் அறிவியல் முன்னேற்றம்(mobile,tablet,laptop) குழந்தைகள் முதல் பெண்கள்,முதியவர்கள் வரை எவ்வளவோ பயனுள்ளதாகவும்,நல்லதொரு பொழுதுபோக்காகவும் இருந்தாலுமே,சில சமயம் இதன் மிகப்பெரிய ஆதிக்கத்திற்கு பின் இருப்பது , இளையதலைமுறையின் வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்று சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.விஷயம் என்னவென்றால் இதுதான்!
ஒரு நான்கு தினங்களுக்கு முன்னால்,என் நாத்தனாரின் இரு மகன்கள்(15வயது,13வயது) வீட்டிற்கு வந்திருந்தார்கள். நானும் என் கணவரும் கோயிலுக்கு சென்றுவிட்டோம். வீட்டில் என் மாமியாரும்,நாத்தனாரும்,இருந்தார்கள். கூடவே அவரது மகன்கள் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பிறகு சென்றுவிட்டார்கள்.நேற்று நான் ப்ரவுஸ் செய்துகொண்டிருந்தபோது, கண்ணி ஹேங்க் ஆனதால், பசங்க ஏதாவது தேவையில்லாததை டவுன்லோடு செய்துவைத்துவிட்டார்களா என்று சந்தேகித்து ஹிஸ்டிரியை சர்ச் செய்து பார்த்தபோது அதிர்ச்சியாகிவிட்டேன். அவர்கள் ஆபாச இணையதளங்களை பார்வையிட்டிருந்தார்கள். இதை என் நாத்தனாரிடம் என் கணவர் சொன்னபோது என்ன செய்வதென்று தெரியாமல் வருந்தினாராம்,அவர் கணவரோ இதை கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டும்,எல்லாம் வயது என்றாராம்.என் மாமியாரோ கம்ப்யூட்டரில் இப்படி பிள்ளைகள் பார்க்காமல் இருக்கும்படி செய்யமுடியாதா என்கிறார்.
தோழீஸ்
இந்த பிள்ளைகளை எப்படி கையாள்வது? உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை சொல்லுங்கள்.

நிச்சயமாக அதிர்ச்சியுண்டாக்கும் விஷயம் என்றாலும் இன்று சர்வ சாதாரணம் இது நடக்கிறது என்பது தான் உண்மை..வீட்ல தொலைகாட்சியில் அவிழ்த்து போட்டு ஆடும் எல்லாத்தையும் பார்க்கும் பிள்ளைகளுக்கு அதுக்கு மேலயும் இன்னும் பார்க்க ஆர்வம் தூண்ட தான் செய்யும் வயதும் அப்படி..இதனை சாமர்த்தியமாக கைய்யாள்வதெ சிறந்தது..9 வயது பையன் இன்டெர்னெட் கேஃபேவில் ஆபாச படம் பார்த்த கதை கூட உண்டு..
உங்களுக்குள் பெரியவர்கள் ஆள் ஆளுக்கு பேசிக் கொள்வதோ இப்படி செய்து விட்டார்களே என்று பின்னாளிலும் இப்படியே தொடர்வார்களோ என்றெல்லாம் பயப்படவும் வேண்டாம் அப்படியே விடவும் வேண்டாம்..பேரென்டல் கன்ட்றோள் போட்டு வைய்யுங்க.
இதனை சம்மந்தப்படுத்தாமல் பட்டும் படாமலும் இந்த வயதுக்குறிய ஆர்வக்கோளாறால் வரும் தீமைகளை பெற்றோர் தான் நைசாக சொல்லி புரிய வைக்க வேண்டும்..அல்லது நெருங்கிய உறவினர் சொல்லி புரிய வைக்கலாம்..இப்படி பார்த்த கதையை சொல்லி நீங்கள் சொல்வீர்களானால் பிள்ளைகள் அவமானப்பட்டு போகும் பிறகு எப்படியும் மானம் போயாச்சு இனி இதை தொடர்வதில் தப்பில்லை என்று கூட எண்ணும்..
எதற்கும் ஒரு வரைமுறை உண்டு என்பதை புரிய வைய்யுங்கள்.

மேலும் சில பதிவுகள்