ஹுர்ரே !!! நம்ம வனிதாவை வாழ்த்த பூங்கொத்தோடு வாங்க!!!

ஆயிரம் குறிப்பு கொடுத்து அபூர்வ சிகாமணியா விரைவில் வரப்போற நீங்க இப்போ 625 குறிப்பு கொடுத்து கூட்டாஞ்சோறில் முதல் இடத்தை பிடிச்சிருக்கீங்க. உங்களை வாழ்த்த வார்த்தைகளைத்தேடுகிறேன். இந்நாட்களில் நீங்கள்தான் அறுசுவையின் மிகச்சிறந்த புரவலர்.இந்த வெற்றிக்குப்பின் எத்தனை ஷிரத்தை!!! எத்தனை உழைப்பு!!!

உலகத்திலேயே இப்போது விலைமதிக்கமுடியாத விஷயம்னா அது நேரம் தான். அறுசுவைக்காக எவ்வளவு நேரம் நீங்கள் அர்ப்பணித்து இந்த இடத்தை அடைந்திருப்பீர்கள்?

அறுசுவையில் உங்கள் பங்களிப்பு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வனிதா!!! :-)

வனி
இன்னும் ஒரே ஒரு குறிப்பு கொடுத்து கூட்டஞ்சோறில் முதல் வரிசையை பிடிக்கணும்.. அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சீக்கிரம் 1000 குறிப்பை கொடுக்க வாழ்த்துகள்.. நீங்க மட்டும் படைப்புகளை கொடுக்காமல் தோழிகளை தட்டி எழுப்பி அடிக்கடி தூண்டிவிடும் ஊக்கத்திற்கு நன்றி.. :)

மலர் கொத்தோடு நீங்க கேட்ட ஸ்விஸ் ரோலும், பார்ப்கார்ன் சிக்கனும் எடுத்துக்கோங்க.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு உள்ளங்களே பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் இருவர் பெற்றிருந்தாலும் முதலிடமென்றே சொல்கிறோம். அதே அடிப்படையில்தான் நான் வனிதாவை வாழ்த்துகிறேன். தீபாவளியை நாளு நாள் முன்னேருந்தே கொண்டாடுவதைப்போல. :-)

மக்களெல்லாம் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்கன்னு வனிதா நாளையே ஒரு இனிப்பு செய்து அனுப்பிடுவாங்க. :-)))))

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வனிதா,

முதலிடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் வனிதா.....

முத்தான குறிப்புகளை கொடுத்த உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியலை......டெடிகேஷன் என்றால் என்ன என்று உங்களிடம் தான் கத்துக்கனும்.

இந்த வெற்றியை ஜெயந்தி சொன்னது போல ஸ்வீட் ரெசிபி கொடுத்து எங்களோட கொண்டாடுங்க.....இன்னும் நிறைய குறிப்புகள் குடுக்க வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்... இந்த மலர்கொத்தோடு....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

முதல் இடத்தை பிடித்ததற்கு வாழ்த்துக்கள் அக்கா, உங்களை பார்த்து நான் ஆச்சர்யபடுகிறேன்., எல்லா பகுதியிலும் புகுந்து விளையாடுகிறீர்கள்., மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என் இனிய தோழி வனிக்கு மகிழ்ச்சி கலந்த பெருமிதமான வாழ்த்துக்கள்!

625+++ குறிப்புகள் அதிலும் பலவும் புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகள் கொடுத்து முதலிடம் பெறுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதன் பின்னே உள்ள கடின உழைப்பு, டெடிகேஷன் இதெல்லாம் ரொம்ப பெரிசு. குறிப்புகள் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல் கைவினை, கவிதை, கதை, பட்டிமன்றம், மன்றம்னு அறுசுவையின் அனைத்து பகுதிகளிலும் கால் வைத்து முத்திரை பதித்த எங்கள் வனியை எத்தனை பாராட்டினாலும் தகும் :).

தான் பங்கு பெறுவதோடு நின்றுவிடாமல் தோழிகளையும் ஊக்கப்படுத்தி இதை செய்யுங்க உங்களால் முடியும்னு சொல்லி அவர்களுக்குள் அவர்களுக்கே தெரியாமல் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வரவும் ஓரு மனசு வேணும். அது வனிகிட்ட நிறைய இருக்கு. இந்த மனசே இன்னும் பல சிகரங்களுக்கு உங்களை இட்டுச்செல்லும் வனி!

மேலும் பல படைப்புகளோடு குறிப்புகளும் கொடுத்து ஆயிரம் ரெசிப்பிகளை எட்ட எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களும் உள்ளம் நிறைந்த பாராட்டுக்களும் வனி!

*********************************** WE ARE PROUD OF YOU VANI!!! ****************************************

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துகள் அக்கா, உங்கள் பணி மேலும் தொடருட்டும்.

அன்பு வனி,
உங்களின் குறிப்புகளில் பாதிகூட செய்துபார்த்திருக்க மாட்டோம்,ஆனால் செய்த அனைத்தும் சுவையில் அபாரம்.....:-) இன்னும் பலபல குறிப்புகள் கொடுத்து ஹெல்ப் பண்ணுங்க(வீட்டில் நல்லபெயர் வாங்கனும்ல), மேலும் குறிப்பு மட்டுமில்லாமல் அனைத்திலும் திறம்பட செய்ய வாழ்த்துக்கள்ப்பா.......:-)

வாழ்த்துக்கள்

:):)
இந்த நாளத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்.....

:):) கடைசில சிகரம் தொட்டாச்சா.....வெரி நைஸ் ஆப் யூ

தொடர்ந்து அசத்தலும் ஆச்சர்யமும் பல பரிணாமங்களில் கொடுக்க

வாழ்த்துக்கள் :)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வனிதா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பிடிங்க இந்த ரோஜா பூங்கொத்தை. அசத்திட்டீங்க 625 குறிப்புகள்னா சும்மாவா அதில் நிறைய படங்களுடன் உண்மையாவே ரொம்ப பிரமிப்பா இருக்கு. இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து முதல் இடத்தை தக்க வச்சுக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். குறிப்புகள் அல்லாமல் கதை, கைவினை, மன்றம்னு அசத்துறீங்க சூப்பர்ங்க

அருமை அருமை:)) வாழ்த்துக்கள் வனி:)) பிடிங்க பூங்கொத்து:)) பாத்து பாத்து மெதுவா:))
அன்புத்தோழியே!! எத்துனை எத்துனை குறிப்புகள்!!
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்!!
ஏன் குறிப்பு மட்டுமா அழகு, பயணக்கட்டுரை, பயனுள்ள இழைகள்,அடுத்தவர்களுக்கு பின்னூட்டம் அளிப்பதில் அக்கறை:))
முதல் ஆளாக வந்து தனக்கென உரிய பாணியில் பாராட்டுவதும், அக்கறையோடு அதில் உள்ளவற்றை எடுத்துக்கூறுவதும், எப்படி தனி ஒருமனுசியிடம் இத்தனை குணங்களும் விரவிக்கிடக்கமுடியும்?? ஆச்சர்யமூட்டு(றீங்க)கிறாய் தோழியே!! என்னெனவோ எழுத ஆசை ஆனால் எதுவும் எழுதினால் முகஸ்துதியாகிவிடுமோ என மனம் அஞ்சுகிறது.
புதிதாக வந்தவர்கள் அனைவருமே ஒரு மன சஞ்சலத்தில் இருப்பர், அவர்களையும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி ,கேட்டக் கேள்விகலுக்கு பொறுமையுடன் பதிலளித்து, சகமனுஷியாய் தோழியாய் ஏற்று வழிநடத்துவதில் உ(ங்களு)னக்கு நிகர் நீ(ங்க)தான்!!
அன்புத்தோழியே!! வாழ்வின் அனைத்து வளங்கலும் பெற்று நீடூழி வாழ எனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் :))))
(Y) (Y) :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்