சாகோ புட்டிங்

தேதி: February 28, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (12 votes)

 

பொடி ஜவ்வரிசி - அரை கப்
சர்க்கரை - கால் கப்
ரோஸ் எஸன்ஸ் - அரை தேக்கரண்டி (அ) பந்தன் எக்ஸ்ட்ராக்ட் - சிறிது
கலர் - சில துளிகள்
வெண்ணெய் - சிறிது
தேங்காய் துருவல் - அரை கப்


 

ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற விடவும்.
பின் நீரை முழுவதும் வடித்து விட்டு கலர் மற்றும் எஸன்ஸ் சேர்த்து வைக்கவும்.
சர்க்கரையுடன் கால் கப்பிற்கு சற்று கூடுதலாக நீர் விட்டு கொதிக்க விடவும். பந்தன் இலை சேர்ப்பதாக இருந்தால் இந்த நிலையில் பந்தன் இலையை போட்டு கொதிக்க விடலாம்.
சர்க்கரை கரைந்து சற்று கொதித்ததும் ஜவ்வரிசியில் ஊற்றி கலக்கவும்.
ஸ்டீம் செய்ய போகும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி விட்டு கலவையை ஊற்றி பரப்பி விடவும். குக்கரில் நீர் விட்டு அதில் கலவை உள்ள பாத்திரத்தை வைக்கவும். நீர் போகாமல் இருக்க சிறு சிறு ஓட்டைகளிட்ட அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடலாம்.
விசில் இல்லாமல் குக்கரை மூடி அதிக தீயில் 15 - 20 நிமிடம் வேக வைக்கவும். உள்ளே விட்ட கத்தி சுத்தமாக வெளியே வந்ததும் எடுத்து ஆற விடவும்.
தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து பரிமாறவும்.
சுவையான சாகோ புட்டிங் தயார்.

இவர் மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா (Kuih / Kway Sago) போன்ற நாடுகளில் பிரபலமானவர். ஆனால், மாலத்தீவிலும் ரிசார்ட்களில் கிடைக்கும். இங்கு இவர்களுக்கு எல்லாம் புட்டிங் தான். நீர் அதிகம் இருந்தால் செட் ஆக தாமதமாகும். அதனால் கால் கப்பிற்கு மேல் அரை கப்பிற்கு குறைவாக இருந்தால் போதும். நன்றாக ஆறும் வரை எடுக்க வராது. இது தனி தனி மோல்டில் ஊற்றினாலும் சரி, ஒரே தட்டில் ஊற்றி வேக வைத்து துண்டுகளாக்கினாலும் சரி. இதில் தேங்காய் துருவல் ஃப்ரெஷாக பயன்படுத்தி இருக்கிறேன், விரும்பினால் அதையும் ஆவியில் வேக வைத்து பயன்படுத்தலாம். இந்த பொடி ஜவ்வரிசி சுலபமாக ஆவியில் வேகக்கூடியது. பந்தன் அல்லது ரம்பை இலை எஸன்ஸ் சேர்த்தாலும், ஃப்ரெஷ் இலையை சர்க்கரையில் சேர்த்து கொதிக்க வைத்தால் நல்ல வாசம் தரும். இதில் லேயர்களாக பல வண்ணங்கள் கொண்டும் செய்யலாம். ஒரு கலர் ஊற்றி 5 நிமிடம் வேக விட்டு பின் அடுத்த கலர் கலவை ஊற்றி வேக விடலாம். இது போல் வேரியேஷன்ஸ் குட்டீஸ் பார்ட்டிக்கு ஏற்றதாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி
முதல் இடத்துக்கு வந்தாச்சா? அருமை.. குறிப்பா இந்த ரெசிபியில் நான் தான் பர்ஸ்ட்
எந்த இடம்னாலும் உங்க ரெசிபியும், அதன் படமும் அழகோ அழகு :)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பார்க்கவே கலர்புல்லா இருக்கு பா.ம்ம்ம்ம்ம் நாக்கில் எச்சில் ஊருதே?சூப்பர் பா.முதல் இடத்தை பிடித்ததர்க்கு எங்க ஸ்வீட் கொடுத்துடீங்க போங்க.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

வனி அக்கா.. சூப்பரான கலர்புல்லான குறிப்பு. வண்ணமே சாப்பிட தூண்டுது. படங்கள் அனைத்தும் அருமை, அதிலும் தேங்காய் துருவல் பிரட்டி வைத்துள்ள படம் மிக அருமை. அப்படியே சாப்பிடனும் போல இருக்கு. வாழ்த்துக்கள் அக்கா .

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

பச்சை நிறம்... அழ..கா பார்க்கவே ஆசையா இருக்கு வனி.
இந்தக் குறிப்பு விருப்பப் பட்டியலில் சேருது. ரேட்டிங் - சூப்பர்

‍- இமா க்றிஸ்

வனி அக்கா சாகோ புட்டிங் பார்க்கவே ரொம்ப கலர்புல்லா இருக்கு அக்கா செய்முறை ரொம்பவே எளிமையா இருக்கு குட்டிஸோட ஃபேவரிட் டிஷ் ஆஹ் நிச்சயம் இருக்கும் நல்ல் அகுறிப்பு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி.. முதலாமிடத்தை பசுமையான கலர் இனிப்பால நிரப்பிட்டீங்க வாழ்த்துக்கள் :))
பார்க்கவே அழகா இருக்கு:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி பார்க்கவே அழகா இருக்கு எளிமையாவும் இருக்கு அட்டகாசமான குறிப்பு வனி வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி இதில் சர்க்கரைக்கு எதாவது பதம் உண்டா?
(எ.கா. கம்பி பதம் )இத மாதிரி உண்டானு சொல்லுங்க

இந்த கலரே செய்ய தூண்டுது:)சீக்கிரமே செய்திடறேன்.வாழ்த்துக்கள் :)

Kalai

வனி,

இனிப்பான குறிப்பு கொடுத்து முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்க ஸ்பெஷலில் அடுத்து இதைதான் செய்யனும்பா.பார்க்கவே நல்லா இருக்கு செய்துட்டு சொல்கிறேன்........சரியா:-)

மலேசியாவ மறுபடியும் ஞாபகபடுத்திட்டீங்க
காலேஜில இருந்து திரும்பும்போது அங்க ஒரு சின்ன கடையில இதுமாதிரி செஞ்சு அடுக்கிருப்பாங்க அடிக்கடி சாப்பிடுவேன் ஆனா செய்யறமுறை எழுதிவைக்கல மறந்துபோச்சு எப்பவாச்சும் நெனைப்பேன் அந்த ரெசிபி எழுதி வைக்கலியேன்னு....இப்ப லட்டுமாதிரி ரெசிபி போட்டுட்டீங்க லபக்கிட்டேன்..:0

குறிப்பு சூப்பர்..படங்கள் சூப்பரோ சூப்பர்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நல்லா இருக்கு நானும் இது போல் செய்வதுன்டு,டவுன்டா இலை செர்த்து மோல்ட் இல்லாமல் செய்வேன்.அடுத்த முறை மோல்டில் முயர்சி செய்கிறேன்.படங்கள் அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி,

டாப்ல உங்களை கொண்டு சேர்த்த இந்த குறிப்பும் டாப் டக்கரா இருக்கு! :-) படங்கள் அத்தனையும் எப்பவும்போலவே வெகு அழகு! கடைசிப்படம் அட்டகாசம்!! :-) வீட்டில நிறைய ஜவ்வரிசி இருக்கு. கட்டாயம் செய்து பார்க்கனும். வாழ்த்துக்கள் வனி!!

அன்புடன்
சுஸ்ரீ

கொண்டாடத்திற்கு பச்சைக்கொடி காட்டியதுபோல் பச்சை கல்ர் ஸ்வீட். குழந்தைகளை நிச்சயம் கவரும். ஃபுட் கலர் இல்லை. வாங்கி நிச்சயம் முயற்ச்சிக்கணும் வாழ்த்துக்கள் வனிதா :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

செய்தாச்சு புட்டிங்...நல்ல டேஸ்ட்.நான் ரெட் ஃபுட் கலர் யூஸ் செய்தேன்.நல்ல குறிப்புக்கு நன்றி :)

Kalai

வாவ் சுப்பரா இருக்கு வனி அக்கா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி உந்தன் கை பக்குவத்தை சொல்ல மொழி இல்லையம்மா.. சூப்பர் சூப்பர் சூப்பர்.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. வாழ்த்துகள் போங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வந்துடேன் வந்துட்டேன் ரம்யா... முதல் பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரம்யா ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி சிஸ்டர்

மிக்க நன்றி :) எடுத்துங்க ஸ்வீட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அப்படியே சாப்பிட்டா ஷாக் அடிக்கும்... செய்து சாப்பிடுங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) விருப்பப் பட்டியல்ல ரொம்ப நாள் வைக்க புடாது... கெட்டு போயிடும் :( சீக்கிரம் செய்து சாப்பிட்டு சொல்லிடனும் :P ஓக்கே? டீல்??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) இல்லைங்க பதம் எல்லாம் இல்லை, சர்க்கரை கரைந்து நீர் கொதிக்க துவங்கினா போதும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி செய்தி வாசிப்பாளரே... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) நீங்க மாலேசியாவா??? எனக்கு தெரியாதே இதுவரை. இப்ப செய்து சாப்பிட்டு அப்படி இருக்கா சொல்லுங்க. அந்த ஊர் ஸ்டைல்ல வேணும்னா கட்டாயம் பந்தன் இலை தான் போடனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க, குட்டீஸ்க்கு பிடிச்சுதான்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆகா... செய்தே ஆச்சா??? ;) ஃபோட்டோ எங்க கலை? இருந்தா போடுங்க, பார்க்க ஆசையா இருக்கு :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பாட்டு... ம்... நடத்துங்க நடத்துங்க. முன்னலாம் சுஸ்ரீ தான் பாட்டு பாடிகிட்டிருந்தாங்க, நீங்களும் கூட்டணி வைங்க இனி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vanithaaaaaaa accaaaaa (*_*) romba romba colourful ah irrukku. ippa thaan paarthean try panni parkkanum... thank uuuuuuuuuu accccca naan srilankan samyal kurippugal theriyum intha pakuthikku eppadi anuppuvathu padam illaiyea. pls help me............... namba nada nambi nadavaathea

அறுசுவை அன்போடு வரவேற்கின்றது :) அவசியம் ட்ரை பண்ணி பாருங்க. குறிப்புகள் தாராளமா அனுப்பலாம்... நீங்க அவற்றை சமைக்கும் போது ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் எடுத்து விளக்கம் எழுதி படங்களுடன் அறுசுவைக்கு arusuvaiadmin @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பினால் அவர்கள் யாரும் சமைக்கலாம் பகுதியில் வெளியிடுவார்கள். 25 குறிப்புக்ள் கொடுத்ததும் கூட்டாஞ்சோறு பகுதியில் உங்கள் பெயர் இடம்பெரும். அதன் பின் நீங்களே குறிப்பை நேரடியாக சேர்க்கும் ஆப்ஷன் வரும். வாழ்த்துக்கள். கலக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai vanitha acca romba romba thanks.. (*_*)

வனி செய்தாச்சு "சாக்கோ புட்டிங்" சூப்பர் அல்வா டேஸ்ட், குட்டி சாப்பிட்டான்,தேங்காய் பிரட்டலுக்கு முன் முந்திரி,பாதாம் பொடிசெய்து மேலே தூவலாமா?முகநூலில் ஃபோட்டோ பாருங்க நல்லாயிருக்கா சொல்லுங்க.

வாவ்... சூப்பர் சூப்பர். மிக்க நன்றி ரேணு. பிடிச்சுதா? பாதாம் பொடி செய்து தேங்காய் துருவலோட கலந்து வெச்சு பிரட்டுங்க. முதல்ல பாதாம் பிரட்டிட்டா அதன் பின் தேங்காய் ஒட்டாது. ஃபோட்டோ உங்களோடதில் இல்லையே ரேணு... எப்படி பார்க்க?? :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முகநூலில் நம்ம அறுசுவை பக்கம் எடுத்து பாருங்க.அதில் போட்டிருக்கேன்.தேங்ஸ் வனி.நல்ல டேஸ்ட்பா....

தேன்க்ஸ் ஃபார் ஷேரிங் ரேணு :) பார்த்தேன் ரொம்ப அழகா இருந்துது. அறுசுவை க்ரூப்’ல நான் இருக்குறதில்லை, அதான் பார்க்க முடியல. நீங்க திரும்ப ஷேர் பண்னதும் வந்துச்சு. அழகா செய்திருக்கீங்க, நல்ல கலர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா