உல்லாச பயணத்திற்கு முக்கிய பொருட்கள்

அன்புள்ள அறுசுவை நண்பிகளுக்கு வணக்கம்

அடுத்த மாதம் பிள்ளைகளுக்கு விடுமுறை ஆதலால் சுற்றுலா செல்லாம் என்று முடிவு செய்து உள்ளோம். என்ன என்ன பொருட்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று யாரவது டிப்ஸ் கொடுங்களேன்.

சில காலம் முன்பு இங்கே ஒரு முறை படித்த நினைவு இப்பொழுது தேடி பார்த்தல் கிடைக்கவில்லை. உங்களுக்கு தெரிந்தால் லிங்க் கொடுங்கள்.

நன்றி

உங்கள் வீட்டு நபர்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு ஏதாவது ஹெல்த் பிரச்சனை இருந்தால் அதற்க்குரிய மருந்து வகைகளை மறக்காமல் எடுத்து வையுங்கள்.

எடுத்துக் காட்டாக
ஆஸ்த்துமா என்றால் PUFF கொண்டு செல்வது போன்றவை.

மற்றப்படி
முதலுதவிப் பெட்டி(First aid box)
காய்ச்சல் மருந்து( paracetamol)
வாந்தி மருந்து(For travel sickness)
கொசுகடி மருந்து போன்றவை(mosquito cream)

குழந்தைகளுக்கு என்று ஸ்நாக்ஸ் எப்போதும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளின் சிறிய விளையாட்டுப் பொருட்கள்

மேலும்
செல்போன் Charger
வெயிலுக்குரிய கருப்பு கண்ணாடி(COOLERS) ,தலைக்கு தொப்பி(SUN HAT)
சன் கிரீம்(SUN CREEM)

குளிர் பிரதேசம் என்றால் ஸ்வெட்டர்,மற்றும் ஸ்கார்ப்ஃ
இது போக உங்களின் டாய்லடரிஸ்,துணிகள்,அழகு சாதனப் பொருட்கள்,பாஸ்போட்(வெளி நாட்டு பயணம் என்றால்) மற்றும் டிக்கெட்கள்.

முக்கியமான அவசர போன் நம்பர்களை எப்பொழுதும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்

உங்களுடைய டிப்ஸ்க்கு மிக்க நன்றி. நான் குறித்து வைத்து கொள்கிறேன்.

http://arusuvai.com/tamil/node/19133

சுபா இந்த லிங்க் ட்ரை பண்ணிப்பாருங்க.

நீங்கள் கேமரா கொண்டு செல்வதானால் அதற்குண்டான பேட்ரிகள் இரண்டு செட் வைத்திருப்பது நலம். மேலும் அதற்குரிய சார்ஜர்கள் எடுக்கனும்,லைட் வெயிட் துணிவகைகளை பெட்டியிலும்,கனமான ஜீன்ஸ் போன்றவற்றை போட்டுக்கொண்டும் போகலாம்.
பவ்டர்,ஷாம்பு போன்றவைகளை ஷாஷே பாக்கெட்டில் எடுத்துக்கொண்டால் அதிக வெயிட் ஆகாது.டிக்கெட்ஸ் சரிபார்த்து எடுத்துக்கோங்க.
கேரி பேக்குகள் கண்டிப்பா எடுத்துக்கோங்க,(வாமிட்டிங் வந்தால் உடனே இறங்க முடியாத சூழலில் இதை உபயோகிக்கலாம்),காதுக்கு காட்டனும் தேவைப்படலாம்.சீப்பு,சோப்புகளை குட்டி குட்டியா எடுத்துப்பது நலம்.ரெடிமேடு ஃபுட் அயிட்டம்ஸ்(பிரட்,பிஸ்கட் அதுபோல)எடுத்துப்பதும் நலம்.மீண்டும் நினைவு வரும்போது வருகிறேன்.

மேலும் சில பதிவுகள்