பெண்களை காப்போம் பெண்மையை போற்றுவோம்

அன்பிற்கினிய தோழிகளே,
பலவற்றையும் நாம் இத்தளத்தில் பேசியுள்ளோம் அதில் இதுவும் வந்திருக்கலாம்.இருந்தாலும் பெண்களுக்கு உண்டாகும் உடல் உபாதைகள்,மன உபாதைகள்.மேலும் அதற்கு மற்றவர்க்கு தெரிந்த விளக்கங்கள் தீர்வுகளை இங்கே தெளிவாக கொடுக்கலாம்.இது பிறந்த பெண் குழந்தையில் இருந்து,வயது முதிர்ந்த பாட்டிவரை உள்ள பெண்களின் பிரச்சனைகளுக்கான இழையாக அமையட்டும்.
இதில் எனக்கு தெரிந்த விஷயங்களை(மருத்துவ முறையில்) சொல்கிறேன் நம் தோழிகளுக்கு தெரிந்ததை அவர்களும் சொல்வார்கள்,தேவையானவர்கள் பார்த்து படித்து பயனடையலாம்,சந்தேகம் இருப்பவர்கள் கேட்கலாம் தெரிந்தவர்கள் சொல்வாங்க.
தோழீஸ் இந்த பதிவுகள் உங்களை பயமுறுத்தவல்ல....நம்ம உடம்பில் என்னதான் நடக்குதுன்னு தெரியனும்ல,தெரிந்து தெளிவடைய மட்டுமே.....இப்படி இருக்குமோ,அப்படி இருக்குமோ?நமக்கும் இந்த வியாதியான்னு உடனே பயப்படவேணாம்......நல்லா உடலை அப்சர்வ் பண்ணுங்க..சரியா.......?இங்கு நான் சொல்பவை படித்து தெரிந்து கொண்டவை,மேலும் பல டாக்டர் கிட்ட கேட்டு தெளிவடைந்தவை. தோழீஸ்கு மேலும் விவரம் வேனும்னா கேட்களாம்,அல்லது டாக்டர்ஸ்சை கன்சல்ட் பண்ணலாம்....

இங்கு பெண்களின் பிரச்சனைகளை(நேய்கள் பற்றிய) மட்டும் பதிவிடவும்.எடுத்தவுடன் படித்து தெளிவடைய வசதியாக இருக்கும்.
கண்டிப்பா தமிழில் பதிவிடுங்க அனைவருக்கும் உதவும்.அரட்டை இங்கு வேண்டாம்......

பெண் சிசு

குழந்தை கருவில் உண்டானௌடனே அதில் மரபணுக்களின் பாதக சாதகங்கள் வந்துவிடுகின்றன.

கரு பெண்சிசுவாக உருவானவுடன் உடல் உறுப்புகள் பெண்ணின் உடலமைப்புக்கு தக்கபடி வளர்ச்சியடையத் துவங்குகின்றன.
இதில் அக்குழந்தை முதிர்வடையும் வரை நிர்னயம் செய்யப்பட்டுவிடுகின்றது,பிரசவித்தபின் வளரவளர எந்தமாதிரியான உணவுகள்,உடற்பயிற்சிகள் செய்கின்றன என்பது கொண்டு பெண் சிசுக்களின் வளர்ந்தநிலை உருவாக்கப்படுகின்றது.
பெண்சிசு உண்டானவுடன் அதன் ஓவரீசில் கோடிக்கணக்கான கருமுட்டைகள் உருவாகிவிடுகின்றன.பிரசவத்தின் போது அதன் எண்ணிக்கை லட்சங்களாக குறைகின்றன.பிரசவித்தது முதல் அப்பெண் குழந்தை பூப்பெய்தும் வரை அவை ஒரே மாதிரி(சைசில்) இருக்கின்றன,பின் பெண் பூப்பெய்தியவுடன் கருமுட்டைகள் மாதந்தோரும் வளர்ச்சியடைகின்றன.
பின் ஒவ்வொரு மாதமும் விலக்கின்போது சில முட்டைகள்(கருவாகாத முட்டைகள் வெடித்து) வெளியேறிவிடுகின்றன.அப்போது அவற்றின் எண்ணிக்கை ஆயிரங்களாக குறைகின்றன.
பின் பெண் திருமணத்தின் போது கருமுட்டகளின் எண்ணிக்கை நூறுகளாக குறைந்திருக்கும்(மாதந்தோறும் வெளியேறியதுபோக),திருமணம் முடித்து நல்ல வளர்ச்சியடைந்த கரு,உயிரணுவுடன் சேர்ந்து மீண்டும் கரு உருவாகின்றது.இதில் நன்கு வளர்ச்சியடையாத கருமுட்டைகள் சிதைவடைந்துவிடுகின்றன.
குழந்தைபேறு நின்றவுடன்,பெண்னின் மெனோபாஸ் வரை( 40,45 அல்லது சிலருக்கு 50)வரை மீதியுள்ள வளர்ச்சி குன்றிய முட்டைகள் வெளியேறுகின்றன.
கருமுட்டைகள் வெளியேறி தீர்ந்துபோனவுடன் ஒரு பெண்ணிற்கு மெனோபாஸ் வருகின்றது.
அச்சமையத்தில் பெண்னின் மனம் பல குழப்பங்களுக்கு உள்ளாகின்றது,உடல் சோர்ந்து போகின்றது.

ஒரு பெண்னின் வாழ்நாளில் வரும் நோய்களையும்,உணவு பழக்கங்கலையும்,மருத்துவம் பற்றியும் பின்வரும் பதிவுகளில் காணலாம்......

ரேணுகா, நீங்க ,நல்ல டாபிக் ஆரம்பித்துஇருக்கிங்க.நான் படிக்க ஆவலாக இருக்கிறேன்.சீக்கிரமாக எழுதுங்க

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

பெண்கள் முப்பது வயதானாவுடன் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை உடல் பரிசோதனை செய்து ஃபைல் பண்னி வைத்துக்கொள்ளனும்....

முதல் நோயைப்பற்றி தெரிந்துகொள்வோமா?

1. அதிக பசி,அதிக தாகம்..
2. அடிக்கடி அளவில்லாத கோபம்.
3. தலை சுற்றல்,மயக்கம்......
4. உடம்பு வலி,முக்கியமாக தோள்பட்டை வலி......
5. மலச்சிக்கல்,வயிற்றுக்கோளாறு.......
6. புண் ஆறாமல் இருப்பது.....சீழ் கட்டுவது.
7.அரிப்பு,கொப்புளம்,கட்டி போன்ற தோல்வியாதிகள்....
8. கண்பார்வை திடீரென குறைவது.....
9. பற்கள் பலமிழந்து ஆடுதல்.
10. உடல் சோர்வு,அதிக தூக்கம்...
11. சிறுநீரக பாதையில் எரிச்சல்,அரிப்பு,யூரினரி இன்ஃபெக்ஷன் அடிக்கடி வருதல்.....
12. பாதம்,கால் விரல்கள்,உடலின் ஈதாவது ஒரு பாகம் திடீரென மரத்துபோவதுபோல மதமதப்பாக இருத்தல்.....
13. பாதங்களில் எரிச்சல்,முள் குத்துவது போன்ற உணர்வு.........
என்ன தோழீஸ் இத்தனைய அடுக்கறேன்னு மயக்கம் வருதா? எதற்கும் ஒரு சுகர் டெஸ்ட் எடுத்திடுங்க.......
ஆமாம் இது அனைத்தும் "டயபடீஸுக்கான" ("சர்க்கரை வியாதி") அறிகுறிகள்.......இவை அனைத்தும் ஒன்னா இருக்கனும்னு இல்லைங்க,எதாவது இரண்டு மூன்று காம்பினேஷனில் இருந்தாலும் டெஸ்ட் எடுப்பது நலம்ப்பா.......

நீரழிவில் இரண்டு விதம் இருக்கு......

முதல் - பரம்பரையாக வருவது.....அதாவது தாத்தா,அப்பா,பேரன் இப்படி.....பாட்டி,மகள்,பேத்தி இப்படி.....இதில் ஒரு டிவிஸ்ட் இருக்குங்க,அதாவது முதல் தலைமுறையில் இருந்து இரண்டாவதுக்கு வராமல் நேரா மூன்றாவது தலைமுறைக்கும் வரலாம்..(அதாவது தாத்தாவிற்கு இருந்து அப்பாவிற்கு வராமல் பேரணுக்கு வரலாம் இதுபோலவே பெண்களுக்கும் புரியுதா ?),அதிக உடல் பருமனாக இருப்பது........
இரண்டாவது - நாள்பட்ட சிறுநீரகப் பிரச்சனைகள்,யூரினரி இன்ஃபெக்ஷன்ஸ், தோலில் ஏற்படும் புண்கள் ரொம்பநாளா ஆறாமல் இருப்பது,உடல் இளைத்துக்கொண்டே போவது,நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகளினாளும் நீரழிவு வரும்.........
நீரழிவு நோயை கண்டரிய GTT டெஸ்ட் செய்து கன்ஃபாம் செய்யலாம்........

"Glucose Tolerant Test (GTT)" ஆகும்.காலையில் வெறும் வயிற்றில் பரிசோதகரிடம் சென்றால் அவர் பெரிய்ய்ய்ய கிளாசில் குளுக்கோஸ் கலந்த நீரை பருக கொடுப்பார். பின் ஒன்னரை மணிநேரங்கழித்து ஒரு முறை ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்குன்னு பரிசோதிக்க துவங்கி,நான்கைந்து முறை பரிசோதிப்பார்.......
சாதாரணமாக ஆரம்பத்தில் 80mg சர்க்கரை நம் ரத்தத்தில் இருந்தால் - இந்த GTT க்கு பிறகு படிப்படியாக உயர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்து,பி அதேபோல அமைதியாக படிப்படியே குறையவும் வேண்டும்......
ஆனால் திடீர்னு அதிகமாகி(250,300,400 )ன்னு சீரில்லாமல் அதிகமாவதோ குறைவதோ இருந்தால் பரிசோதகர் சர்க்கரை இருப்பதை உறுதி செய்வார்.....பார்த்துங்க 400 க்கு மேல போனா மக்கம்தான்.......:-((
மேலும் Random, Post Pranatial டெஸ்ட்கள் எடுத்து சர்க்கரை உள்ளதை உறுதி செய்வார்கள்......
பிறகென்ன டயட் கண்ட்ரோலா இருந்தால் டயபடீஸ் கண்ட்ரோலா இருக்கும்.........:-)

இன்று ஷுகருக்கான டயட் பற்றி பார்க்கலாம்....

ரேணுகா நல்ல பயனுள்ள ஒரு தலைப்பு ஆரம்பித்து இருக்கீங்க எல்லாருக்கும் நிச்சயம் பயன்படும் தொடர்ந்து எழுதுங்க படிக்க ஆர்வமாக இருக்கேன்,
அம்மாக்கு கண் பார்வை கொஞ்சம் மங்களா இருக்குறது மாதிரியும், அப்பறம் கண் அரிப்பு ரொம்ப ஜாஸ்தி இருந்ததுன்னு போய் டாக்டர் பார்க்க போனதுக்கு அவரு சொன்ன முதல் விஷயம் சுகர் செக் பண்ணுங்க சுகர் அளவு அதிகமா இருந்தாலும் கண் அரிப்பு இருக்கும்னு. இதுலாம் கூட சுகர் இருக்க ஒரு அறிகுறியா இருக்கு

தோழீஸ்,
டயட் சொல்வதற்கு முன் ஒன்று.எதை சாப்பிட்டாலும் அதை ஆர அமர மென்று கூழாக்கி விழுங்க வேண்டும். அப்போதுதான் நமது உமிழ் நீர் சுரப்பி நன்கு வேலை செய்யும்.இப்படி கூழாக்கி அனுப்பும்போது "பாங்கீரியாஸின்" வேலை குறைகிறது.இது என்னன்னு கேட்கரீங்களா? இந்த "பாங்கீரியாஸ்" தான் இன்சுலினை சுரந்து இரத்தத்தில் சக்கரையின் அளவை சரியாக வைக்கிரது.

காலை ஆறு மணிக்கு - காஃபியுடன்(டீயுடன்,சர்க்கரி இல்லாமல், இரணு மேரி பிஸ்கட்ஸ்,இரண்டுதான்.

ஒன்பது மணிக்கு - வீட்டு இட்லி 4 , ஒரு கப் சாம்பார், அதிகம் தேங்காய் இல்லாத சட்னி ஒருகப் (கப் சைஸ் நார்மலா இருக்கட்டும்).
தோசைன்னா மூன்றுதான். அதுவும் மெலிதாக,மொத்தமா இல்லை கவனிக்கவும்.இதே சட்னி,சாம்பாருடன் ரொட்டி துண்டுகள் மூன்று.
ஒரே டேஸ்ட் பிடிக்காதவங்க, ரொட்டியுடன் பச்சை காய்கறிகள்,வெறும் தக்காளி,வெங்காயம்,கொஞ்சம் உப்பு. அல்லது, எலுமிச்சை சாறு,கேரட் துறுவல்,ஒரு பச்சை மிளகாய் பொடியா நறுக்கி,ரத்த சுத்தத்துக்கு பொதினா அல்லது கொத்தமல்லி. அடுத்து முட்டை இஷ்டம்னா வெல்லை கரு மட்டும் மிளகு,உப்பு சேர்த்ட்து டோஸ்ட் பண்ணி சாப்பிடலாம்.எல்லாம் நம் சுவௌக்கேற்ப. ஆனால் டயட் முக்கியம்.

மேலும் பசித்தால் இரண்டு மணிநேர இடை வெளியில் தக்காளி,கோஸ்,முளைகட்டிய பச்சைபயிறு உண்ணலாம். பின் நீர் மோர் அல்லது உப்பு போட்ட எலுமிச்சை பழசாறு குடிக்கலாம்.

பகலுணவில்(மதியம்) - கார்போஹைட்ரேட்டான அரிசி சோறு குறைந்த அளவும் ,பச்சை காய்கறிகள், சுண்டல்,பச்சடி,கூட்டு இப்படி சாப்பிடலாம்.ஆபீஸ் போபவர்கள்,பொரியல்,கூட்டு ,சுண்டல்,கீரை ஏதாவது ஒரு வகையில் இப்படி இவற்றை அதிக படுத்திக்கொண்டு சாதத்தை குறைக்கனும்.......

மாலை - காஃபியோ,தேநீரோ,அதனுடன் ஈதாவது சுண்டல்,அல்லது சாத்துக்குடி சாப்பிடலாம். இனிப்பில்லாத பிஸ்க 2 தான்.

இரவு - 2 அல்லது 32 சப்பாத்தி,ஒரு கூட்டு, நீர்மோர் அவ்வளவே.....

இதில் காலை 9 டூ மதிய உணவுக்கும், மதிய உணவு டூ இரவு உணவுக்கும் இடையில் அதிக நேரம் சாப்பிடாமல் விடக்கூடாது,இடையில் பசித்தல் வெள்ளரிப்பிஞ்சு,மிளகு தூவிய தக்காளி,கொஸ் இப்படி சாப்பிடலாம்,.

ஒரே அடியாக வயிற்றை நிறப்புவதும்,ரொம்ப நேரம் காயப்போடுவதும் தவறு,,,,,சிறுக சிறுக சாப்பிடனும்....உடல் உழைப்பும் அவசியம்.........
மீண்டும் சந்திப்போம்.....

தோழீஸ் அடுத்து நாம பார்க்கப்போவது பிளட் பிரஷர்(இரத்ட்தக் கொதிப்பு)பற்றி
இரத்த கொதிப்பின் உச்சம் மரணம்.ஆனால் அனைவரையும் இது உடனே அழைத்து கொள்வதில்லை.இதன் பக்க விளைவுகளாக பல வியாதிகளை உடலில் வரவேற்கிறது.அதாவது பி.பி இருப்பவர்களில் சிலருக்கு மாரடைப்பு வரலாம்,சிலருக்குமூளையில் இரத்தகுழாய் அடைப்போ,அல்லது வெடிப்போ ஏற்படலாம்,இதனால் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகலாம்.இதற்கும் மேல் கோமாவிற்கும்கூட போகலாம்.ஆனால் இப்படி கோமாவிற்குபோவது ரேர்னு டாக்டர்ஸ் சொல்ராங்க.அப்படி கோமாவிற்கு போனால் திரும்ப நினைவுவராமலே இறப்பும் வந்துவிடும்கறது கொடுமைங்க,நிறைய பேருக்கு சிறுநீரக பாதிப்பும் வரால்ம்.

பிளட்பிரஷர் அளவுகள் என்னன்னு பார்ப்போமா?
120/80 நார்மல்,
135/90 ஒருவகையில் இதுவும் பரவால்லைன்னு சொல்லப்படுது.அதாவது அதிகமில்லையாம்.
190/110 இது அதிகம்.
210/120 இது ரொம்ப கொடுமைங்க, மிக அதிகமாம்.

அதென்ன 120/80 ந்னு பார்க்கலாம். பி.பி மெஷின் பார்த்திருப்பீங்க.அதில் ஸிஸ்டாலிக்,டயஸ்டாலிக் என்று சொல்லப்படுகிறது.அது இரத்த அழுத்தத்தின் உச்சத்தையும்,அதே ரத்த அழுத்தம் சாதாரணமாய் எந்த அளவுக்கு உச்சத்திலிருந்து இறங்குகிறதுன்னு குறிப்பதுவாகும்.

பூசினாற் போன்ற உடல் இருந்தால்.மடி ஏறி இறங்கும்போது அதிக மூச்சு வாங்குதல்.
அதாவது நார்மலா மூன்று மாடி ஏறி மூச்சு வாங்குவதற்கும்.முதல் மாடியிலேயே மூச்சு வாங்குவதற்கும் உள்ள வித்யாசம் புரிகிறதோன்னோ.
இதுவும் சர்க்கரைபோல மூதாதையரிடமிருந்து வருமா?
அப்படி முன்னோரிடமிருந்தும் மரபுவழி வரலாம்,நாமும் வரவைலைத்துக்கொள்ளலாம்.அதாவது உடம்பில் சேரும் அதிகப்படி கொழுப்பினால் கண்டிப்பாக வரக்கூடியது இந்த பிளர் பிரஷர்.
காரணம் - அதிகப் பருமனில்லாத உடம்புக்குள் இருக்கும் இதயத்துக்கு, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ரத்தக்குழாய் வழியே ரத்தத்தை செலுத்த ஆகும் நேரத்தைவிட,
உடல் பெருத்தவருக்கு - ரத்தம் செலுத்த அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதய வால்வுகள் இன்னும் பலமாய் அழுத்தம் கொடுத்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இரத்தத்தில் படிகிற கொழுப்பு,ரத்த குழாய்களின் துவாரங்களை குறுகச்செய்கிறது.
அதுபோன்ற சமையங்களில் மூச்சு திணறல், தலைவலி,தலை சுற்றல், மயக்கம் வரும்.

பிளட்பிரஷரிலும் இரு வகை உண்டாம்,
TYPE 1 - Primary Hypertension.
TYPE 2 -Secondary hypertension.

முதல் வகை - பரம்பரை,உடற்பருமன்,சரியான உணவுப்பழக்கம் இல்லாதது,அதிக உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது,அதிக கவலை,மனச் சோர்வு,மன அழுத்தம் இவையெல்லாம் பிரைமரி ஹைபர்டென்சனுக்கான காரணங்களாக வரையறுக்கப்பட்டவை.

இரண்டாம் வகை - குழந்தைகளுக்கு சிறுநீர் பாதையில் சின்னசின்ன உபாதைகள் அடிக்கடி வருதல்,
(உடல்சூடினால் சிறுந்ர் கழிக்கும்போது எரிச்சலில் அழுதல்,சமையங்களில் குளிர்,காய்ச்சல்கூட வரும்,பள்ளியில் கழிப்பிடம் போக அருவருப்பு பட்டுக்கொண்டு காலையில் வீட்டில் போனது,மாலை வந்துதான் மகள் சிறுநீர் கழிக்கிராலா?இதுவும் காரனமாகும்.)
பெண் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு அதிகமாம்,காரணம் சிறுநீர் வெளியேற்றுப்பாதை ஆண்குழந்தைகளுக்கு அதிக நீளம் இருப்பதும் பெண் குழந்தைகளுக்கு அபடி இல்லாமல் இருப்பதுமாம்.
குழந்தைகளுக்கு கிளீன் பண்ணிட்டு அங்கே பவுடர்போட்டு ட்ரை பண்னுவொம்ல அதையும் தடுக்கிரார்கள் டாக்டர்ஸ்.குழந்தைக்கு "காட்டன் ஜட்டீஸ்"தான் கம்ஃபோர்ட்ட இருக்குமாம்.
இப்படி குட்டி பாப்பாவா இருக்கும்போது ஆரம்பிக்கிறது பெண்ணின் பிளட்பிரஷர்.நம்ப முடியலைல்ல,ஆனால் நிஜம்

பெண்குழந்தைகள் கொஞ்சம் பெரிது ஆனதும்,நானே குளிச்சுக்கிறேன்னு சொல்லிடுது,பேரன்ஸுக்கு சந்தோஷம்தான்.ஆனால் நல்லா குளிக்கறாளா? அடுத்து, பெரியவள் ஆவது,அந்த சமையத்திலும் சில பாதுகாப்பு முறைகள் தெரியாமல் அசட்டையாக இருப்பது.பின் திருமனத்தின் பின் முதல் குழந்தை,பிரசவம்,யூரினரி இன்ஃபெக்ஷன் இப்படி படாதபாடெல்லாம் பட்டபின்,அடிக்கடி அங்கே இன்ஃபெக்ஷன்ஸ் தொடர்ந்தால் இது சிறுநீரகத்தை தாக்கும்.இந்த சமையத்தில்தான் இந்த "செகன்டரி ஹைபர்டென்ஷன்" பெண்களை தாக்குகிறது. இந்த வகை இரத்த அழுத்தம் கவனிக்காமல் விடும்பட்சத்தில் கிட்னி பாதிக்கப்படும். ஆக பிளட்பிரஷர் வந்தால் கிட்னிமேலும் ஒரு கண் வச்சுக்கனும் தோழீஸ்.

தோழீஸ்,
பிளட்பிரஷர் அதிகரிப்பினால் வரும் சிறிநீரக செயலிழத்தல் பற்றி பார்த்தோம்.இது தவிர இன்னும் சில அபாயங்கள் வரக்கூடும்,அவற்றையும் பார்த்துடலாம்.
மாரடைப்பு,மூளையில் ரத்தக்குழாய் வெடித்தல்,கோமா....என்ன தலைசுற்றுதா இதைவிட பக்கவாதமும் வருமாம்.....
இது பி.பி அதிகமாய் மிக அதிகமாய் போகும்போது வருமாம்.

ரத்தக்கொதிப்பினால் - நமது உடம்பிலுள்ள ரத்தம் முழுதும் இறுகி,ரத்த நாளங்களில் ஆங்காங்கே படிந்துவிடுகிறது..... அப்படி திட்டு திட்டாக படிந்த ரத்தங்களை பின்னிருந்து வரும் வேகமான இரத்தங்கள் உந்தித்தள்ளும்போது இந்த வாதம் ஏற்படுகின்றது. இது தலைப்பகுதியில் ஏற்பட்டால் எப்பகுதி என்பதைப்போறுத்து கைகால்கள் செயல் இழந்துபோகும்.அல்லது கோமாவுக்கும் இழுத்துச்செல்லும்.
இப்படி கைகால்கள் செயலிழப்பதற்கு முன் சிலருக்கு காலையில் தலை சுற்றல் வரும்,காலையில் நா குழறி பேசுவதும்,பின் போகப்போக சரியாவதும் நடக்கும்,இது தலைக்குள் நடக்கும் யுத்தம்,சிலருக்கு கண்களில் புகை படிந்ததுபோல மசமசன்னு இருந்து பின் பார்வை தெளிவாகும். இன்னும் சிலருக்கு பார்வை இரண்டிரண்டாக தெரியும்,தலைவலி,கன்னங்கள்,தாடைகள் மரத்தாற்போன்ற உணர்வு இது ஆபத்திற்க்கான அறிகுறிகள்.கண்டிப்பா மருத்துவரை ஒருமுறை பார்ப்பது நலம்.
அடுத்தகட்டம் மூளைக்கு செல்லும் ரத்தகுழாய்கள் ஆங்காங்கே அடைத்துவிட்டதன் அறிகுறியாக பாதிக்கபட்ட பாகம்,மெதுவாக வீங்கத்துவங்கும்....அப்படியே ஒரு ஹ்டருணத்தில் நகர முடியாமல் இரத்த ஓட்டம் நிற்கிறது....
கையில் எடுத்த பொருள் கீழே விழுந்துவிடும்,உடம்பில் ஒருபகுதியில் உணர்வில்லாத நிலை, நினைப்பதை சொல்ல வார்த்தைகள் வராது..இப்படிப்பட்ட சமையத்தில் பிசியோதெரபிஸ்ட்டுகள் சொல்லித்தருவதே சிறந்தமுறையில் குனப்படுத்தும்....
இப்படி படுத்தபடுக்கையாக இருக்கும் சமையத்தில் "படுக்கௌபுண் அல்லது உடம்பின் அழ்குத்தத்தினால் ஏற்படும் புண்" வர வாய்ப்புகள் அதிகம்.
படுக்கை புண்னுக்கு வயது வித்யாசம் இல்லாததுபோல,வியாதி வித்யாசமும் இல்லை.அதாவது, சர்க்கரை ,பக்கவாதம்,அல்லது ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து நீண்டநாள் படுக்கையில் இருந்தால் இப்படி எந்த நோய்ய்க்காகவும் படுக்கையில் கிடந்தால் கண்டிப்பாக வரும்.
உடம்புக்குள் சுற்றி வருகின்ற ரத்தம் - ரத்த அழுத்தத்தினாலோ அல்லது சர்க்கரையினாலோ குறையலாம்.அப்படி குறையும்போது - நமது மேல் தோலில் உள்ள மிகச் சிறிய அணுக்கள் வரையில் சென்றுவர ரத்தம் போதாமல் போய்விடுகிறது.இதற்கிடையில் கை,கால்,இடுப்பு இப்படி ஏதோ ஒரு பகுதி அழுந்த படுக்கும்போது, எலும்புக்கும் தோலுக்கும் நடுவில் இருக்கும் தசை போன்ற பகுதி நசுங்குகிறது....இப்படி நசுக்கப்பட்ட பகுதிக்கு ரத்தம் சீராக போய் வர முடியாத நிலையில், அப்பகுதின் தசை மட்டுமின்றி ந்லும்புக்கும் தோலுக்கும் சம்பந்தப்பட்ட மெல்லிய ரத்த நாளங்கள் சிதைகின்றன.இச்சமையங்களில் படுக்கை புண் வரக்கூடும்..... முழங்கால்,நடு முதுகு, இடுப்பு,முழங்கை இங்கெல்லாம் சீக்கிரம் பாதிப்பு வரும்.

2,3 நாட்கள் படுத்தபடுக்கையாய் இருந்து பின் நடக்கும்போது முதுகு மரத்தாற்போல இருக்கும்,ஆனால் அங்கு தோல் கறுப்பு திர்ருகள் எரிச்சலுடன் இருந்தால் கவனிக்கனும்.இது தொட்டால் உரிந்துவிடுவது போல இருக்கும் இதுதான் படுக்கை புண்.
"இது முதலில் அழுத்தப்பட்ட எலும்பிலிருந்து ஆரம்பிக்கின்றது....பிறகுதான் தோலில் வெளிப்படுகிறது....."
" தோலில் சின்ன பருப்பளவுக்கு கறுப்பு திட்டு தெரிகிறதுன்னா,அதன் அடிபாதிப்பான எலும்பில் ஒரு ரூபாய் அளவுக்கு பாதிக்கபட்டிருக்குமாம்". இப்படிப்பட்ட புண்கள் வெருமனே மருந்து தடவி,பவுடர் போட்டு,சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் ஆறிடாது, சாப்பாட்டிலும் கவன் வேண்டும்.
இதற்கு பிசியோதெரஃபி பரவாயில்லைதானே.....? இத்தனை கஷ்ட்டங்களும் தப்பி பிழைப்பவதற்கான வழிகள்.ஆனால் ஸ்ட்ரோக்கின் கடைசி ஸ்டேஜ் கோமா..

ரொம்பநாள் இடைவெளிவிட்டாச்சு இல்லை தோழீஸ் இதோ வந்துட்டேன்.....நீங்களும் தொடர்ந்து படிங்க தெளிவாகுங்க....

மேலும் சில பதிவுகள்