பட்டிமன்றம் 84: கணவர் சமையல் நிபுணராக இருப்பது மனைவிக்கு வரமா? சாபமா???

அன்பு தோழர் தோழிகளுக்கும் பட்டிமன்ற சிங்கங்களுக்கும் பட்டிமன்ற வாசகர்களுக்கும் வணக்கம். நம் தளமே சமையல் சம்பந்தப்பட்டது. அதனால் இந்த முறை தலைப்பும் சமையல் சம்பந்தப்பட்டதுதான் :).

********************கணவர் சமையல் நிபுணராக இருப்பது மனைவிக்கு வரமா? சாபமா???***************

இதுதான் இந்த வாரத்திற்கான பட்டிமன்ற தலைப்பு. தலைப்பை கொடுத்த தோழி பிந்துவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
சமையல் நிபுணர்னதும் கேட்டரிங் படித்தவர்கள்னு மட்டும் நினைச்சுக்காதீங்க. நல்லா சமைக்கத் தெரிந்தவர் அப்படீன்னு எடுத்துக்கோங்க :)
உங்க அனுபவங்களை வந்து சரமாரியா கொடுங்க தோழிகளே. நடுவர் அப்படிக்கா அந்த ஆலமரத்தடில உட்கார்ந்துக்கறேன். வாதங்களை கொட்டறேன்னு சொல்லி நடுவர் தலையில் கொட்டிப்புடாதீங்கோ. நடுவருக்கு இருப்பதே இத்துனூண்டு மூளை. அதுவும் அப்புறம் குழம்பிப் போயிடும் :)

ஸ்டார்ட் ம்யூசிக்.... தாரைத் தப்பட்டைகள் முழங்கட்டும் பட்டிமன்ற கலாட்டாக்கள் ஆரம்பிக்கட்டும். வாங்க தோழர் தோழிகளே வாங்க வாங்க. வந்து உங்கள் அட்டகாசஙளை ஆரம்பியுங்கள். பொதுமன்றம் என்பதை கவனத்தில் கொண்டு நாகரீகமான பேச்சு முக்கியம் :)

பட்டிமன்ற விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்

மக்களே பட்டிமன்றம் ஆரம்பிச்சாச்சு. பட்டிமன்ற சிங்கங்கள், ஒளிஞ்சு நின்னு எட்டிப்பார்க்கறவங்க வரலாமா வேணாமான்னு யோசிக்கறவங்க எல்லாரும் தயக்கத்தை விட்டுட்டு வந்து களத்தில் குதியுங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இப்படிலாம் யோசிச்சு தலைப்பு கொடுத்த அக்காவுக்கும் ;) அதை தேர்வு செய்து பல வீடுகளில் ஒரு வாரத்துக்கு சண்டை ஏற்பாடு செய்திருக்கும் நடுவர் கவிசிவாக்கும்... வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்....

சந்தேகம் இல்லாம “சாபமே”னு வாதாட இந்தா வனி வந்துட்டேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஐயம் ஜோஸ். நானும் வந்துடேன்.தலைப்பு நல்லா இருக்கு.

முதல் அணி ரெடி ஆயாச்சா! வாங்க வனி. கணவர் சமையல் நிபுணரா இருப்பது சாபமேன்னு சொல்றீங்களா... ஏன் எப்படின்னு நல்லா விளக்கமா சொல்லுங்கோ அப்பதான் நடுவருக்கு கொஞ்சமாவது புரியும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கணவருக்கு சமைக்கத்தெரிவது வரமே.அப்போதனுங்கலே நாம கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்

வாங்க ஜோஸ். பட்டிமன்றத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். அணியை தேர்ந்தெடுத்து சீக்கிரம் வாதத்தோடு வாங்க.

ஜோஸ் பட்டிமன்றத்தில் அரட்டை, நலம் விசாரிப்புக்கு அனுமதி இல்லை. தயவு செய்து மாற்று ஆப்ஷன் உபயோகித்து உங்கள் முந்தைய பதிவை மாற்றி விடுங்கள் ப்ளீஸ்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பும், பண்பும் , பாயசமும் இல்ல் இல்ல பாசமும் நிறைந்த நடுவர் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்... பட்டில இடம் புடிக்க தான் இந்த பதிவு... எந்த அணி அப்படின்னு பொண்ண ஸ்கூல்ல இருந்து இட்டாந்துட்டு சொல்ரேனுங்கோ நடுவரே....:) இப்ப வரட்டா....;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு நடுவருக்கும், அறுசுவை சகோதர சகோதரிகளுக்கும் இனிய வணக்கங்கள்:))
நல்லதொரு தலைப்பை வழங்கிய பிந்துவிற்கு வாழ்த்துக்கள் :) எந்த அணி என்பதை விரைவில் வாதங்கலுடன் வந்து தெரிவித்துக்கொள்கிறேன். முழுமூச்சில பட்டில பங்கேற்காவிடினும் அரை மூச்சோடவாது வந்து பதிவிடுவேன் என்பதை இந்த இடத்தில் தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவரே... உங்களுக்கு உங்க ஆத்துக்காறர் சமைச்சு தரனும்னு எதாச்சும் விபரீத ஆசையா?? என் இப்படி ஒரு தலைப்புன்னு தெரிஞ்சுக்கும் ஆவல் தான் ;(

நடுவரே... இந்த ஆண்களுக்கு சமைக்க நல்ல வருதோ இல்லையோ வாய் வாய் வாய் நல்லா வரும். :( அதுக்கு பயந்தே நான் அடுப்படி பக்கம் அனுப்ப மாட்டேன். ஏங்க இப்படி திட்டுறீங்கன்னு கேட்கறீங்களா??? இதோ வருது பாருங்க பட்டியல்...

1. சமையல்ல உப்பு கம்மி... நேத்து கம்மின்னு சொன்னா இன்னைக்கு இப்படியா கொட்டுறது?

2. காரம்... இப்படி போட்டா வயிறு என்ன ஆகும்? காரமும் இல்ல ஒன்னும் இல்ல... இதை எப்படி சாப்பிடுறது? உனக்கு இதை எதையுமே அளவா போட வாரதா? ஒன்னு கூடுது, இல்ல குறையுது.

3. மீன் வறுவல்னா எப்படி இருக்கனும் தெரியுமா? நீ பண்ணதுக்கு பேரு மீன் வறுவலா?? இல்ல பொரியலா?

4. ஹனி சிக்கன்?? யாரு உனக்கு இப்படிலாம் கறியில இனிப்பு போட கத்து கொடுத்தா?

5. இவ்வளவு நெய்யும், சர்க்கரையும் போட்டு மண்ணை தின்னா கூட டேஸ்டா தான் இருக்கும் :P இதுக்கு பேரு மைசூர்பாகா??? [எங்கையோ படிச்சாப்பல இருக்கில்ல... இருக்கும் இருக்கும்]

6. அதெப்படி உனக்கு மட்டும் சாம்பார் தினம் ஒரு டேஸ்ட்டா இருக்கு [இதுவும் எங்கையோ.... ம்ம்.. ம்ம்...]

இதெல்லாம் சமையலில் கொஞ்சமா நியானம் இருந்தாலே வரும்.... இன்னும் கொஞ்சம் அடுப்படி பக்கம் வரவங்களா இருந்தா...

1. இன்னைக்கு நான் செய்த குருமா சாப்பிட்டு பாரு.. “எப்படி?? டேஸ்ட்??” என்னைக்காவது நீ இப்படி டேஸ்ட்டா சமைச்சிருக்கியா??? :o

2. எனைக்காவது ஒரு நாள் சமைக்கும் எனக்கே எல்லாம் இத்தனை நல்லா வருதே, உனக்கு ஏன் இத்தனை வருஷமா சமைச்சும் வர மாட்டங்குது???

3. சமையல்ங்குறது ஒரு கலை... அதை அனுபவிச்சு ரசிச்சு பண்ணனும்... கடமைன்னு தினமும் எதையவது செஞ்சு வயிதுல போட கூடாது...

இப்படிலாம் கம்ண்ட் கேட்டா அது சாபமா? வரமா? நீங்களே முடிவு பண்ணிக்கங்க நடுவரே.

கேட்குது கேட்குது... இந்த லட்சனத்துல சமைச்சு நீயெல்லாம் அறுசுவையில குறிப்பு கொடுத்து நாங்களும் உன்னைய நம்பி சமைச்சு... ம்ம்.. ம்ம்... போதும் போதும்... வொய் ப்ளட்? சேம் ப்ளட்.

நடுவரே... கணவன் மனைவி இருவருமே எதாச்சும் ரெஸ்டாரண்ட்டுல டாப் செஃப்ஃபா இருந்தா கூட வீட்டுல கணவன் மனைவி சமையலை குறை சொல்ல தான் செய்வாங்க :P

இவங்களுக்கு சுடு தண்ணி கூட வைக்க தெரியலன்னு வைங்க... நம்ம கையை தானே நம்பி இருக்கனும்... அப்போ என்ன பண்ணுவாங்க தெரியுமா???

1. என் பொண்டாட்டி சமையலை அடிச்சுக்க ஆளே இல்லப்பா...

2. அவ ஒரு நாள் ஊரில் இல்லன்னா என் உடம்பே கெட்டுடும். [அவருக்கு வெளிய சாப்பிட்டா வயிற்றுக்கு ஆவாதுன்னு அர்த்தம்]

3. ஒரு டீன்னா கூட அது வொய்ஃப் கையால குடிச்சா தான்பா டீ. அன்போட அவ போட்டா டீ கூட தேவாமிர்தம் தான்.

இதெல்லாம் அவங்க சமைச்சா தான் உண்டு, வேற வழி இல்லைன்னு இருக்க ஆண்கள் டயலாக்கு. இப்ப சொல்லுங்க... எது நமக்கு வரம்??? சமைக்க தெரிஞ்சு நமக்கு உதவிக்கு ஆளிருக்கோ இல்லையோ... அட்லீஸ்ட் நம்ம சமையலை தட்டி கொடுக்கவாது ஆளிருக்கு... தட்டி கேட்க இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க சுமி! அன்பும் பண்பும் பாயாசமுமா... வரும் போதே நடுவரை கலாய்க்க ஆரம்பிச்சாச்சா... நடத்துங்க :).

சீக்கிரம் அணியை தேர்ந்தெடுத்து வாதங்களோட வாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்