constipation problem

hai friends,
Indha topic patri pesanerun nu kobam vendam. Mudinthal udhavul. Idu udaal arogiyaythai kedukiradhu.
36yrs female having constipation problem. 2 days once going for toilet(latrine). having plenty of water still having that problem and moreover so much of smell coming. Earlier she was going regularly. feeling guilty to ask anyone.

suggest your valuable ideas.

//Indha topic patri pesanerun nu kobam vendam. Mudinthal udhavul. Idu udaal arogiyaythai kedukiradhu.//
இது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கிறதுனு சொல்லி இருக்கீங்க, இத பத்தி பேசுறனேனு கோபம் வேண்டாம்னு சொல்லி இருக்கீங்க?? இது ஒண்ணும் பேசக்கூடாத டாபிக் இல்லியே? மலச்சிக்கல் இருந்தா உடம்புல சகலவியாதிகளும் வரும். இங்க ஆரோக்கியமான கேள்விகலுக்கு தோழிகள் அனைவருமே ஓடி வந்து பதில் சொல்வாங்க ... அதுனால கவலைபடாதீங்க..

எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களை சொல்றேங்க...
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொதிக்க வைத்து ஆறவைத்த வெது வெதுப்பான நீரை எவ்வளவு குடிக்கமுடியுமோ அவ்வளவு குடிங்க.

(இரவே தண்ணீரை ஒரு பெரிய பாத்திரத்தில் நன்றாக கொதிக்கவிட்டு வைத்துக்கொள்ளவேண்டும், காலையில் குடிப்பதற்கு ஏதுவான சூட்டில் இருக்கும், பியூரி ஃபையர் இருந்தாலும் கொதிக்க வைத்த நீர்தான் கிருமிகளை முற்றிலும் அழிக்கவல்லது, சாதாரணமாகவே இது போல் அருந்தி வந்தால கூடுமானவரை உடல் உபாதைகள் இல்லாமல் இருக்கலாம்)

ஆரம்பத்தில் குறைவாகத்தான் குடிக்கமுடியும். 1/2 லிட்டர் குடிக்க ஆரம்பிங்க படிப்படியா உயர்த்துங்க. 1 லிட்டர் வரை குடிங்க. பொறுமையா குடிக்கணும். முடிந்த வரை அதிகாலையில் எழும் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். ஏனேனில் தண்ணீர் குடித்த பிறகு 1 மணிநேரத்திற்கு திட,திரவ உணவுகள் உட்கொள்ளக்கூடாது.
அதுனால நேரம் கழிந்து எழுந்து தண்ணீர் குடித்து விட்டு , உடனே காலை சிற்றுண்டியும் சாப்பிட நேருமாயின் இந்த முறை அவ்வளவாக பலனலிக்காது.
முதல் ஒருவாரம் இதை நடை முறைப்படுத்துங்க, பலனை உடனே அறீவீங்க.

ஆனா தண்ணி குடிக்கும் பொழுது கடக் கடக் என ஒரே மூச்சில் குடிக்கக்கூடாது, இது மிக முக்கியம்.
அதேபோல் இரவு நேரம் வரை கண்விழிப்பதால் உடல் உஷ்ணம் ஏற்பட்டு மலத்தை இறுகச்செய்துவிடும். அதே போல் அயல்நாட்டு உணவுகளை தவிருங்கள், இயற்கை பானங்களையே அருந்துங்கள்.

இவையெல்லாம் கண்டிப்பாக இப்பிரச்சினை தீர்ர்க்கும, அதையும் மீறி சரியாகவில்லையெனில்... இயற்கை நல மருத்துவத்தை நாடுங்கள்...அங்கு செல்ஃப் எனிமா பற்றிய முறைகளையும், இதற்கான தீர்வையும் தெளிவாக விளக்குவார்கள்.

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்".

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அசைவம் குறைச்சுக்குங்க,பழம் காய்கறி எடுத்துக்குங்க,இரவு அத்திப்பழம் மற்றும் ஒரு பச்சை கேரட் சாப்பிட்டு படுங்க..காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணி குடிங்க...நிச்சயமா உடற்பயிற்சி முக்கியம் ஒரு நடைபயிற்சியாவது தேவை
கேக்கக் கூடாத கேள்வியையெல்லாம் கேக்கறாங்களாம் ஏங்க ஆஃப்டர் ஆல் மலச்சிக்கலுக்கெல்லாம் தயங்கறீங்க

romba thanks selvi madam & thalika madam.
neenga sonnapdi seiren

raamani
vellore

மேலும் சில பதிவுகள்