ஜீரா புலாவ்

தேதி: March 6, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

பாஸ்மதி அரிசி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
புதினா, உப்பு, கொத்தமல்லி - தேவைக்கு
பச்சை பட்டாணி - ஒரு பிடி
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
நெய் - தாளிக்க


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
நெய்யில் புதினா, சீரகம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
களைந்த அரிசி, உப்பு, பச்சை பட்டாணி, தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வைக்கவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மிக சுலபமாக சமைக்கக்கூடிய சாதம் இது. காய்ந்த பட்டாணியாக இருப்பின் வேக வைத்து சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிம்பிள் டேஸ்டி புலாவு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா உங்க ரெசிபி ரொம்ப ஈசியா இருக்கு. இப்போ உடனே ட்ரய் பன்னப்போறேன். தண்ணீர் எவ்வளவு வைக்கனும். முடிஞ்சா கொஞ்சம் சீக்கிரம் பதில் சொல்லுங்க தோழி.

அன்புடன்,
zaina.

அருமையான குறிப்பு, நானும் இதே போல ஒரு குறிப்பை நேற்றுத்தான் அனுப்பினேன்( சில மாற்றத்தோட) என் குழந்தைகளுக்கு பிடித்தமான சாதம் இது கவிதா. வாழ்த்துக்கள்...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுலபமான டேஸ்டியான புலாவா இருக்கே கவிதா. காலையில் சாப்பாடு கட்டிக் கொடுக்க ஈஸியா முடிஞ்சுடும், நன்றி.

உதிரிஉதிரியா,அருமையா செய்திருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருமையான குறிப்பு வாழ்த்துக்கள் கவி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்.இதுக்கு சைட் டிஷ் தேவை இல்லயா?

ஜீரா புலாவ் ரொம்ப நல்லா இருக்கு,செய்து சாப்பிட்டு வந்துதான் பதிவு போடறேன்.ஸ்வர்ணாவோட சிக்கன் சாப்ஸ்க்கு நல்லா இருந்துச்சு.வாழ்த்துக்கள் கவி :)

Kalai

கவிதா அக்கா புலாவ் ஈஸியா இருக்கு குயிக் செய்முறையோட சூப்பர் ரெசிபி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நானும் இப்படிதான் செய்வேன் கவிதா . எளிமையான குறிப்பு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும்,எக்ஸ்ட்ரா effort எடுத்து வெளியிட்ட பத்மாவிற்கு ஸ்பெஷல் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஸைனா,

நான் 1 கப் பாஸ்மதிக்கு 1 1/2 கப் சேர்த்தேன்.நீங்கள் பயன்படுத்தும் பாஸ்மதிக்கு ஏற்ப (பாக்கில் குறிப்பிட்ட அளவு) சேர்க்கவும்.
செய்துபார்த்து சொல்லவும்.
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சுமி,

அவசியம் உங்க குறிப்பை எதிர்பார்க்கிறேன்.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

உமா,

செய்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அருள்,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சௌந்தர்யா,

அவசியம் வேணுங்க.
வெஜ்/நான்வெஜ் ஹெவி கிரேவியுடன் சாப்பிடுங்க..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கலா,
செய்து பார்த்து செய்து பார்த்து பதிவிட்டதற்கு மகிழ்ச்சி + நன்றி
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கனி,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

குமாரி,

Sailing on Same Boat...
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா எளிமையான சுவையான குறிப்பு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Simply superb pulav...taste also good.thanks...

Sujitha