தேதி: March 7, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
ஃப்ரோசன் பட்டாணி - அரை கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை
எண்ணெய் - தாளிக்க
உப்பு
முதலில் அரிசியைக் கழுவி உப்பு போட்டு உதிரியாக வடித்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
வாயகன்ற தவாவில் எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
பச்சை வாசனை போனதும் பட்டாணி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து 10 நிமிடம் அடுப்பை குறைத்து வைக்கவும்.
பின் உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து சாதம் உடையாமல் கீழிருந்து மேலாக பிரட்டி விட்டு, தேவையெனில் உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஈஸி பட்டாணி, சீரக ரைஸ் தயார்.
மதியம் மீதமான சாதத்திலும் இதைச் செய்யலாம். தயிர் பச்சடி, உருளை வறுவல் நல்ல காம்பினேஷன். ஃப்ரோசன் பட்டாணிக்கு பதில் சாதாரண பச்சை பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் வேக வைத்தும் பயன்படுத்தலாம். லன்ச் பாக்ஸிற்கு ஏற்ற சாதம் இது.
Comments
sumi
:o பாருடா... கடகடன்னு குறிப்பு வர துவங்கிடுச்சு ;) கலக்குங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
ஒரு ஆர்வ கோளாறு தான் வனி.. இனியும் வந்துட்டே இருக்கு பாருங்க..... நன்றி வனி....
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ஈஸி பட்டாணி சீரக ரைஸ்
பட்டாணி சீரக ரைஸ் நல்லா செய்து காண்பிச்சிருக்கீங்க - வாழ்க வளமுடன்
சுதா
உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி சுதா...:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி,
சுமி,
எளிமையான குறிப்பு..
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
kavi..:)
ungal valthukku rompa thanks kavi....:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
எளிய குறிப்பு. செய்து பார்க்க முயற்சிக்கிறேன்
பாக்யா...
உங்கள் பதிவுக்கு நன்றி பாக்யா...:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
easy pattani rice
wov it is so nice, its really super pa. i like it. and try it
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.