பொரிச்ச குழம்பு

தேதி: March 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (7 votes)

இந்த பொரிச்ச குழம்பு திருமதி. சீதாலஷ்மி அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.

 

பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
முருங்கைக்காய் - ஒன்று
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
அரைக்க:
காய்ந்த மிளகாய் - 6
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 3 பல்
சின்ன வெங்காயம் - 11
தாளிக்க:
நெய் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி


 

அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து வைக்கவும்
பாசிப்பருப்பை அலசிவிட்டு முருங்கைக்காய் சேர்த்து வேக வைக்கவும்.
காயும், பருப்பும் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நெய்யில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து இறக்கவும்.
எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்குங்க சுவா... ;) சொல்லவே இல்லையே இப்படி ஒரு சர்ப்ரைஸை ;) சூப்பர் குறிப்பு தந்த சீதாலஷ்மிக்கும், அதை அழகா செய்து காட்டி இருக்கும் சுவாக்கும்... வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்வர்னா அக்கா ஈஸியா ஆ இருக்கு குறிப்பு குயிக் செய்முறையோட நல்ல குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பொரிச்ச குழம்பு சூப்பர், நல்ல ஈசியான குறிப்பை தந்த சீதாம்மாவிற்க்கும், அதை செய்து காட்டிய உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி சர்ப்ரைஸ சர்ப்ரைஸா கொடுத்தாத்தானே அது சர்ப்ரைஸா இருக்கும் ஹிஹி :) முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி வனி :)

நொடியில் ரெடி போல இருக்கு சீதாம்மாவின் குறிப்பு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கனி ஆமாம் பா செம ஈசியா இருக்கு செய்வது சுவையும் சூப்பர் :) நன்றி

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுமி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வரு

வாவ்.. சூப்பர்
கண்டிப்பா செய்து பார்க்கிறேன் :)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ் வாழ்த்திற்க்கு மிக்க நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்ல குறிப்பு..செய்து பார்கிறேன் ஸ்வர்.வாழ்த்துக்கள் :)

Kalai

ஸ்வர்ணா,
பொரிச்ச குழம்பு இரண்டு நாட்களுக்கு முன் செய்தேன்...
செம யம்மி....

நீங்களே சொல்லி இருப்பது போல் ரொம்பவே சுலபமும் கூட :)

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சுவா பொரிச்ச குழம்பு சூப்பர்:) கண்டிப்பா முயற்சி பண்ணி பாக்குறேன்:)
வாழ்த்துக்கள் சுவா:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஸ்வர்ணா,

எனக்கு பிடிச்ச குழம்பு..
உங்களுக்கும்,சீத அம்மாவிற்கும் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சுவர்ணா,

இரண்டு நாள் முன்னாடி, இந்த பொரித்த குழம்பு செய்தேன். சுவை மிக நன்றாக இருந்தது, செய்வதும் ரொம்ப சுலபமாக இருந்தது. அருமையான குறிப்பு தந்த சீதாலஷ்மிம்மாவிற்கும், அதை செய்துக்காட்டிய உங்களுக்கும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ