கிச்சன் சின்க் கில் அடைப்பு -உதவி உதவி

எங்க வீட்டு கிச்சனில் பாத்திரம் துலக்கும் சின்க் அடைத்துக்கொண்டு தண்ணீர் சரியாக போகாமல் அடம் பிடிக்கிறது .... பெரும் சிரமமாக உள்ளது ... சில சமயம் தண்ணீர் கீழே உள்ள பைப் வழியே வெளியே வந்து தொல்லை கொடுக்கிறது ... ரொம்ப பெரிய பிரச்சனையாக இருக்கு உதவுங்கள் தோழிகளே

அன்பு சங்கீதா...

kiwi kleen - drain cleaner கிடைக்கிறது.வாங்கி உபயோகப்படுத்துங்கள். அடைப்பு நீங்கிவிடும். அந்த பாக்கெட்டில் சொல்லியிருக்கும் முறைப்படி பயன்படுத்துங்கள்.

கவிதா.

anbe sivam

;)) அட! சென்னையிலும் 'கீவி' க்ளீன்தானா! ;))
வீடு வாங்கிய முதல் வாரத்து அனுபவம் இது, //அந்த பாக்கெட்டில் சொல்லியிருக்கும் முறைப்படி// வேலை செய்யும். அடைப்பு அதிகமாக இருக்கிறதே என்று அதிகம் கொட்டினால், அதுவே கெட்டியாகி அடைக்கும். ;) தேவையானால் இரண்டாம் முறை படிமுறைகளைப் பின்பற்றலாம்.
~~~~~~~~~~~~~~~~~
சங்கீ...
பாதி சமையல்... உடனடி நிவாரணம் வேண்டுமானால் ;) plunger தான் பொருத்தம். (சமயலறைக்கு என்று தனியாக ஒன்று வாங்கி, அது டாய்லெட் பக்கம் போகாமல் லேபிள் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.) சிங்க்கை நிரப்பி (சுடுதண்ணீர் நிரப்ப நேரம் இல்லாவிட்டால் தண்ணீரே போதும்.) plunger கொண்டு அடித்தால் சட்டென்று அடைப்பு எடுபடும்.

சிங்க் முழுவதாக அடைத்திருந்தால், சிங்க்கில் சுடுநீர் நிரப்பி பேக்கிங் சோடா கரைத்து, ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து plunger அடித்து விடுங்கள். உணவுத் துணிக்கைகள் மென்மையாகி நீரோடு போய் விடும்.

//சில சமயம் தண்ணீர் கீழே உள்ள பைப் வழியே வெளியே வந்து தொல்லை// கட்டாயம் கீழே உள்ள பைப்பை இறுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடைப்பை எடுக்க முயற்சிக்க இன்னும் லூசாகி சிங்க்கின் அடியில் வெள்ளம் எடுக்கப் போகிறது. எப்பொழுதாவது இதன் வழியே வாடையும் வரலாம்.
பைப்பை இறுக்குமுன் U வடிவில் உள்ள பகுதியைக் கழற்றி (அளவான ஸ்பானர் வேண்டும். இதற்கு ஆள் பிடித்தாலும் உங்களுக்கும் கொஞ்சம் வேலை இருக்கும்.) அங்கே அடைப்பு இருக்கிறதா என்று பாருங்கள். அதற்குமுன் சிங்கின் கீழ் உள்ள பொருட்களெல்லாம் ஒதுக்கி சுத்தம் செய்ய வேண்டும். கீழே விரிக்க பழைய துணியும் கொட்டும் நீரைப் பிடிக்க வாளி ஒன்றும் வேண்டும். திறந்து சுத்தம் செய்துவிட்டு, துடைத்து, மீண்டும் பைப்பை மாட்டி இறுக்கி விடவேண்டும். (இறுக்கம் போதாவிட்டால் சீல் செய்யவேண்டி இருக்கும். அதை இங்கு விபரிக்கவில்லை. தேவையானால் கேளுங்கள்.)

இதற்குப் பின்னரும் அடைப்பு இருந்தால், குழாய் சுத்தம் செய்வதற்கு விசேடமான கேபிள் (cable) கிடைக்கும். அதை நுழைத்து மேலும் கீழும் அசைக்க அடைப்பு எடுபடும். பிறகு தொட்டியை அடைத்து முழுவதும் நிரப்பி, திறந்து ஓட விட்டால் சரியாகும்.

வருமுன் காக்க - எப்படி அடைப்பை நீக்கினாலும் உள்ளே உணவுத் துணிக்கைகள் போகாமல் தடுப்பது முக்கியம். சிங்கிற்கென்று சின்னதாக வட்டமான வலைத்தட்டு / துவாரம் உள்ள தட்டுகள் தனியாகக் கிடைக்கும். ஒன்று வாங்கிப் போடுங்கள். உணவுத் துணிக்கைகள் மேலேயே தங்கிவிடும். எடுத்து வீசிவிடலாம். பிறகு அடைப்பே வராது. (இந்தத் தட்டுகள் வித்தியாசமான அளவுகளில் கிடைக்கிறது. பாத் டப், துணி கழுவும் சிங்க், வாஷ் பேசின் என்று எல்லாவற்றிற்கும் போடலாம்.)
சிங்க் குழாய் உள்ளே பாசி போல கருப்பாகப் பிடித்திருக்கும். இடைக்கிடை பைப் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்வது நல்லது.
எண்ணெய் / உருகிய நிலைக் கொழுப்பு எதையும் சிங்க்கில் கொட்ட வேண்டாம்.

வீட்டிலுள்ள மற்றவர்களின் ஒத்தாசையும் தேவை அல்லவா! :) வலைத்தட்டு போட்டிருப்பதையும் அதன் காரணத்தையும் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள். அடைத்தால்... காரணமானவர் யாரோ அவரே சுத்தம் செய்யட்டும். ;) ஒரு முறை அனுபவித்தால் பிறகு கவனமாக இருப்பார்கள்.

‍- இமா க்றிஸ்

கவிதா இதுக்கு கூட பவுடர் வந்துச்சா ... ரொம்ப நல்லதா போச்சு ...அனா நாங்க இருப்பது கிராமம் இங்கே அது கிடைப்பது கஷ்டம் வெளில போனதன் வாங்கலாம் .... உங்க தகவலுக்கு மிக்க நன்றி .....
imma அழகா சொல்லி இருக்கீங்க ... உங்க குறிப்புகள் மூலம் செய்து பார்க்கிறேன் ... என் கவலையை தீர்த்த சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

அடைப்புக்கு காரணமான பொருட்களை போடமல் இருப்பது நல்லது. சபீனாவை பயன்படுதி பாதரங்களை சுத்தம் செய்யாதீர்கள் சாதத்தையும் டீ தூளையும் பயன் படுதிய பாதிரங்களை ஒன்றாக சின்கில் சுத்தம் செயய பயன்படுத்தாதீர்கள்

Information is wealth

விடை கிடைத்து விட்டது.. plunger உபயோகிக்கும் முறையும் தெரிந்து கொண்டேன். எனக்காக ஹெர்னியா பக்கத்தில் விளக்கியதற்கு மனமார்ந்த நன்றிகள்..நான் இரண்டு முறைபயன்படுத்திய எண்ணெயை வடிகட்டி சிங்கில் கொட்டிவிடுவேன்..
என் தவறும் புரிந்து விட்டது.. இந்த வீட்டில் வெளியே சென்று ஊற்றி வர வசதிகள் இல்லை.. இனி பாலிதீன் கவர் உபயோகிக்கலாம்...

மேலும் சில பதிவுகள்