திங்கட்கிழமை காலை ; ஓர் நல்ல செய்தி ;

வினை விதைத்தவன் வினை அறுப்பான் :

நம் நாட்டையே உலுக்கிய சம்பவமான ,டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பஸ் டிரைவர் ராம் சிங், திகார் சிறையில் இன்று காலை 5 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். கல்லால் அடித்து கொல்லபடவேண்டியவன், தன்னால் அடித்து கொல்லபட்டு இருக்கிறான்.

இது ஒரு அருமையான செய்தி. நமக்கு மட்டும் அல்ல... அந்த பெண்ணின் பெற்றோர்... அந்த பெண்ணைப் போல பெற்றெடுத்த கோடிக்கணக்கான பெற்றோர்... ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் இது ஒரு நல்ல செய்தி !!!!

சுதா கொஞ்சம் யோசிங்கப்பா
அவன் இருந்தது சிறையில் தண்ணீர் கூட கேட்டு பெறக்கூடிய இடம்.அங்கே அவனுக்கு தூக்குபோட கயிறு ஏது?அவ்வளவு நேரம் ரோந்து காவலர் என்ன செய்தார்?
இதை கடவுள் கொடுத்த தீர்ப்புன்னு நினைக்க முடியாதுப்பா. ஒருவேளை அவன் உண்மையை சொல்ல தீர்மானித்திருந்தால், அது பெரிய புள்ளிகளுக்கு பாதகமாக இருக்குமானால் ,இது அவர்களால் செயல்படுத்தப்பட்டிருக்கலாமோன்னு ஒரு சந்தேகம் வரும்.....உண்மை வெளிவரனும்.நீதி நிலைக்கனும்.....

நீங்கள் சொல்வதை போல நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கலாம். எல்லாமே யூகத்தின் அடிப்படையில் தான் நாம் பேச முடியுமே தவிர இது தான் நடந்திருக்கும் என்று நம்மால் கூற முடியாதே அக்கா. அப்படி எதாவது இருப்பின் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

எது எப்படியோ தப்பு செய்தவன் அவன் தானே?...அவனாக இந்த முடிவு எடுத்து இறந்தானோ இல்லை என்கவுண்டர் போன்ற ஒன்றோ?... இறந்தவன் ஒரு கொடூரன்! இப்படி ஒரு கொடியவன் இறந்ததை நினைத்து மனம் சந்தோஷபடத்தான் செய்கிறது அக்கா . இந்த மாதிரி ஒரு மனிதன் நாட்டில் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? என்று தான் நினைக்க தோன்றுகிறது.
செய்தியை படித்தவுடன் மனம் சந்தோஷப்பட்டது என்று சொல்வதை விட , இவ்வளவு ஈசியாக அவன் இறந்திருக்க கூடாது, அந்த பெண் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்திருப்பாள்? அதை விட பலமடங்கு துடிக்க வைத்து கொன்று இருக்க வேண்டும் என்று தான் தோன்றியது.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

help me pls

- இருமுறை பதிவு

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

சுதா,
அப்படித்தான் சுதா, முதலில் கொஞ்சம் அமைதி இருந்தது.ஆனால் இப்படி யோசித்ததும்.அவன் பின்னால் இருக்கும் கருப்புக்கூட்டம்(இன்னும் பல குற்றம் செய்த பெரும் கும்பல்,பெரிய கும்பல்) அப்படியே இருட்டில் இருந்துவிடுமேன்னு கவலை,ஆற்றாமை இருக்கு.அவர்களை யார் வெளிச்சம் போட்டு காட்டுவாங்களோ?

மேலும் சில பதிவுகள்