கொத்தமல்லி பிரியாணி

தேதி: March 11, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (9 votes)

 

பாஸ்மதி அரிசி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தேங்காய் பால் - அரை கப்
உப்பு
கரம் மசாலா - 2 சிட்டிகை
மஞ்சள் தூள் - சிறிது
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, பிரியாணி இலை - தாளிக்க
அரைக்க:
பச்சை மிளகாய் - 2
மல்லித் தழை - ஒரு பெரிய கைப்பிடி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
முந்திரி - 6
தேங்காய் - 2 விரல் அளவு
பட்டை, லவங்கம்


 

அரைக்க கொடுத்தவற்றை நைசாக அரைக்கவும். அரிசியை களைந்து ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலா மற்றும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும்.
பின் தேங்காய் பால் ஊற்றி மீதத்திற்கு நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க துவங்கியதும் அரிசி சேர்த்து கலந்து விடவும். மீண்டும் கொதிக்க துவங்கியதும் மூடி சிறு தீயில் வைத்து வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவையான கொத்தமல்லி பிரியாணி தயார். ரைத்தாவுடன் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி,
எனக்கு பிடித்த சாதம் கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.....இங்கே அப்படியே எடுத்துக்கலாம்பொல இருக்கு.பட் தோழீஸ்கும் கொஞ்சம் வெச்சுடறேன்......

வனி மல்லி வாசத்துல பிரியாணி மணக்குது :) வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கொத்தமல்லி பிரியாணி எனக்கு பிடித்தது; நல்லா செய்து காண்பிச்சிருக்கீங்க. படங்களும் அழகு - வாழ்க வளமுடன்

வனி கொத்தமல்லி பிரியாணி சுவையும்,மணமும் சுண்டி இழுக்குது:)
பக்கத்தில இருக்கிற கேரட் ரோஸ யாருக்கும் தெரியாம அபேஸ் பண்ணிடுறேன்:))
வாழ்த்துக்கள் வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனிதா,
கம கம குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனி அக்கா கொத்தமல்லி பிரியாணி குயிக் அண்ட் டேஸ்டி டிஷ் சூப்ப்ரா இருக்கு அக்கா கடைசி ப்ளேட் அருமையான குறிப்பு :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கொத்தமல்லி பிரியாணி பார்க்கவே நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

NETTRU INTHA BIRIYAANI SEITHEN VANI AKKA ROMBA NALLAA IRUNTHATHU VITIYASAMA IRUNTHATHU

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) முழுசா கொடுத்துட்றேன் தட்டை... தீர்ப்பை எங்க பக்கம் சொல்லி போடுங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அதென்னவோ நமக்கு கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை எல்லாம் அப்படியே இழுக்குது ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அது கேரட் ரோஸில்லை அம்மனி... தக்காளி ரோஸ் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) கடைசி ப்ளேட் நல்லா இருக்கா, இல்ல ப்ளேட்ல இருக்க சாப்பாடு நல்லா இருக்கா? சமைச்சு சாப்பிட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

so colourul dish i think taste willbe very good

அவசியம் ட்ரை பண்ணி பாருங்க :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா