ஈஸி ப்ரெட் பொரியல்

தேதி: March 13, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (7 votes)

இந்த ஈஸி ப்ரெட் பொரியல் கவிசிவாவின் ஈஸி ப்ரெட் உப்புமா குறிப்பினைப் பார்த்து சிறு மாற்றங்களுடன் செய்தது.

 

ப்ரெட் - 3 துண்டுகள்
முட்டை - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். ப்ரெட்டை சிறு துண்டுக்களாக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் ப்ரெட் துண்டுகளைப் போட்டு லேசாக வதக்கி, முட்டையை உடைத்து ஊற்றவும்.
பிறகு நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
எளிதாகச் செய்யக்கூடிய் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற ப்ரெட் பொரியல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பருங்க... சூப்பர்... சிம்பிளா கவிசிவா ஒன்னு குடுத்தா அதை பேஸ் பண்ணி நீங்க ஒன்னு... கலக்குங்க (y) ஆஹா... தம்ஸப் இங்குட்டு வரலயே... பரவாயில்லை... வனி தம்ஸப் காட்டினதா நினைச்சுக்கங்க இருவரும். ட்ரை பண்ணி முகபுத்தகத்துல படம் காட்டிடுவோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி மிக்க நன்றி :D பல்லு தெரிறாப்புல சிரிச்சுட்டு இருக்கிறதா நினச்சுக்குங்க :))
முதல் பதிவிட்டு பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி வனி :)

குறிப்பை வெளியிட்டமைக்கு அட்மின் குழுவினருக்கு நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப சுலபமான அருமையான குறிப்பு
வாழ்த்துக்கள்

பரணிகா:)

அருள் என்னோட சின்ன ஐடியாவை பேஸ் பண்ணி முட்டை எல்லாம் சேர்த்து கலக்கல் ப்ரெட் பொரியல். சூப்பர் பா! நானும் இதுபோல் ட்ரை பண்றேன் விரைவில். நன்றி அருள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சிம்பிள் அன்ட் சூப்ப்ர்ப் அருள்

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

சிம்பிள் அன்ட் சூப்ப்ர்ப் அருள்

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

ஈசி குறிப்பு,ரொம்ப நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருளு சூப்பரான குறிப்பு கவியோடத மாற்றத்தோட அருமையா குடுத்துருக்கீங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Where is that "mugaputhagam". How to see that.
Thanks

mugaputhagam na facebook ah tamil la solli irukanga...

ஈஸி ப்ரெட் பொரியல் நேற்று செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது வாழ்த்துக்கள் கவி/அருட்ச்செல்வி

பொன்னி