சட்டம் தெரியுமா?

அன்பு தோழிகளே,
எனக்கு ஒரு சந்தேகம்? என் அம்மா இறந்ததும் அப்பா இரண்டாவது மணம் செய்தார். சொத்து என் அம்மா பெயரில் உள்ளது. எங்களுக்கு இரண்டாம் மனைவிக்கோ அவர் குழந்தைக்கோ எதையிம் விட்டு தர துளியும் விருப்பமில்லை. ஆனால் சட்டம் என்ன சொல்லும்? எனக்கு திருமணம் ஆகிவிட்டது, தம்பி என்னுடன் இருக்கிரான். எங்களுக்கு தெரியாமல் விற்க எங்கள் அப்பாக்கு உரிமை உள்ளதா? தெரிந்தால் பதில் போடவும்.

எனக்கு தெரியாது. இந்த லின்க் இல் கேட்கவும்
www.legalserviceindia.com

வாழ்க வளமுடன்

ஹாய் அஸ்விதா,

உங்களுடைய இரண்டாவது அப்பாவின் மனைவிக்கோ அல்லது அவருடைய குழந்தைகளுக்கோ உங்களுடைய அம்மாவின் சொத்து சேராது ஆனால் உங்களுடைய அப்பா அந்த சொத்தினை விற்கமுடியும் அதாவது உங்களுடைய அம்மாவின் பரம்பரை சொத்தாக இல்லாவிட்டால் அதற்கும் உங்களுடையதும் உங்களுடைய தம்பியுடையதும் கையெழுத்து தேவை.ஆனால் சட்டத்திற்கு மாறக உங்களுடைய அப்பா அந்த சொத்தினை விற்றால் நீங்கள் அவர் மேல் அந்த சொத்தினை கேட்டு வழக்கு போட்டு அந்த சொத்தினை பெறலாம்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

Dhushyanthy,
பதிவிற்கு நன்றி. அது அப்பா பாக பிரிவினையில் வந்த பணத்தை கொண்டு வாங்கிய சொத்து. ஆனால் என் அதிர்ஷ்டம் அம்மா பெயரில் உள்ளது. இறந்தும் அம்மா எங்களுக்கு செய்திருக்கிறார். அப்பா சுயநலவாதி. எதுவுமே எங்களுக்கு செய்யவில்லை. உங்கள் பதிவில் (இரண்டாவது அப்பாவின் மனைவிக்கோ) என்று தவறாக உள்ளது. அப்பாவின் இரண்டாவது மனைவி என்பதே நீங்கள் கூற வந்த வார்த்தை என்று நினைக்கிரேன். நன்றி தோழி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Nithya,
பதிவிற்கு நன்றி. அந்த லிங்கில் சென்று பார்க்கிரேன்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

நீங்கள் நினைப்பது சரி நான் உங்களுடைய வினாவிற்கு மிக மிக அவசரமாக பதிலை எழுதிவிட்டு மாணவர்களுக்கு தமிழ் படிப்பிப்பதிற்காக தமிழ் பாடசாலை சென்றுவிட்டேன் அதனால் அதில் இருந்த பிழையை நான் கவனிக்கவில்லை இதற்காக என்னை மன்னிக்கவும்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்