கல்வி சம்பந்தமாய் உதவி தேவை

அன்புள்ள தோழிகளே,
நலமா?

ரொம்ப அவசரமாய் இந்த பதிவினை இடுகிறேன்.
ஏற்கெனவே பெண்களுக்கான 2 வீலர் பற்றி ஐடியா கேட்டிருந்தேன்.
பதில் சொன்ன அனைத்து தோழிகளுக்கும் நன்றி.
வண்டி வாங்கியதும் என்ன வாங்கினேன் என்பதனை கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன்.

இப்போது எனக்கு தெரிந்த ஒருவருக்காக இந்த பதிவினை இடுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் இப்போது 12ம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டு இருக்கிறார்.
வசதி சற்று குறைந்தவர்களாக இருப்பதால் மகனை பொறியியல் சென்னை அல்லது கோயம்புத்தூரில் படிக்க வைக்க (ஹாஸ்டலில்) எவ்வளவு செலவாகும் என்பதனை என்னிடம் கேட்டார்.
ரொம்ப நன்றாக படிக்ககூடிய, கவர்ன்மென்ட் கோட்டாவிலேயே கண்டிப்பாக அவருக்கு நல்ல கல்லூரியில் கேட்ட பிராஞ்ச் கிடைக்கும் என்றாலும் செலவைப்பற்றிய பயம் அவர்களுக்கு இருக்கிறது.
வங்கியில் லோன் எடுக்கவும் விரும்பவில்லை. சொந்த செலவில் படிக்க வைக்க விரும்புகிறார்கள்.

வீட்டில் அவர்தான் முதல் மகன். தயவுசெய்து தோழிகள் சென்னை அல்லது கோயம்புத்தூரில் ஹாஸ்டலில் தங்கி 4 வருடங்கள் முடிக்க முதல் வருடத்தில் இருந்து ஒவ்வொரு வருடங்களும் எவ்வளவு செலவாகும் என்று யாருக்காவது தெரிந்தால் தெரிவிக்கவும்.
கண்டிப்பாக பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
நன்றி!

(:-( ????????????????????????

மேலும் சில பதிவுகள்