பட்டி - 85 "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?"

தோழிகளுக்கு வணக்கங்கள் பல, பட்டிமன்றம - 85 ஆரம்பமாகிவிட்டது.இதோ தலைப்பு
*** "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?" ***
இது நம் பாபு அண்ணா கொடுத்தது,கொஞ்சம் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தலைப்பை பற்றிய விளக்கம் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்.வாங்க தோழீஸ் வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே எனர்ஜி தேவைப்படும். ஸ்பீடா வாங்க வாதங்களோட,சூடா பதிவிடுங்க,நடுவருக்கு பாய்ட்ஸ் கொடுங்க ஒரு முடிவுக்கு வர....
வந்து கலக்குங்க...அனைவரும் கலந்து கருத்துகளை பதிவிடுங்க, தோழிகள் தம் அணியை முகப்பில் குறித்து பதிவிட்டால் தோழிகளின் வாதங்கள் எந்த அணிக்கு என்பதுபற்றிய குழப்பம் தவிர்கப்படும்.பட்டி விதிமுறை அனைவருக்கும் தெரிந்ததே.ஆனாலும் தலைப்பை நினைவில் வைத்து விதிமுறைகளை இங்கே கொடுக்கிறேன்.....

* பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

*. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

*. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

*. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

*. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.

*. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக, அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

கல்வித்துறை வலுப்படுகிறது......நீங்களிம் இதே அணீயா,வாழ்த்துக்கள்.
பாசுமரத்தாணின்னு சொல்ரீங்க,நல்ல எண்ணங்கள் மனதில் பதியும்னு சொல்ரீங்க சரி.உங்களின் எதிரணிகள் என்ன சொல்ல வராங்கன்னு கேட்டுடலாம்.வாங்க மற்ற இரு அணியினரும் வாதங்களை கொடுங்க.....

வண்க்கம் நடுவரே எனது அணியை தேர்வு செய்து விட்டேன். குழந்தயாக இருக்கும்போதே மாற்றத்தை உருவாக்கிட வேண்டும். விரிவான வாதங்களுடன் பின்னர் வருகிரேன்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

இதோ என் வாதங்கள். ஐந்தில் வளையாதாது ஐம்பதில் வளையுமா என்பது போல சிறு வயதிலே கற்றுக்கொடுப்பது இறுதி வரை வரும். எனவே சமூக அக்கறையை பள்ளியிலேயே சொல்லிக்கொடுப்பது அவசியம். செடியாக இருக்கும்போது உரம் வைக்காமல் மரம் ஆகி வைப்பதில் எந்த பயனும் இல்லை. காவலர் இருந்தாலும் இல்லையினாலும் ஒழுங்காக செல்ல வேண்டும் என்ற மனதை வளர்க்க வேண்டியது கல்வித் துறையின் கடமை. மக்கள் பார்ப்பதனாலேதான் சினிமா எடுக்கிறார்கள் அவர்களை குறை சொல்வதில் பயன் இல்லை.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

நீங்களும் கல்வித்துறையா...ஐந்திலேயே சொல்லிக்கொடுத்து சமூகப்பொறுப்பை ஊட்டனும்னு சொல்ரீங்க.மீண்டும் நிறைய வாதங்களோட வாங்க.

சினிமாத்துறையும்,அதிகாரத்துறையும் என்னப்பா பாய்ட்ஸ் எடுக்கரீங்களா?பட்டி விறுவிறுப்பாக சீக்கிரம் வாங்க..... .

என்னவாச்சு? பட்டி விறுவிறுப்பாக நடக்க உதவுங்கள்.உங்கள் கருத்துகள் எங்கே?உங்களின் சுவையான வாதங்கள் எங்கே? இரண்டுக்கு மூன்றணி இருந்துட்டு சத்தத்தையே காணோமே....! வாங்க சீக்கிரம்......

பட்டியை தூக்கிவிடவே இப்பதிவு..

எதிர் அணி தோழிகளே சீக்கிரம் ஓடி வாங்கோ. நடுவர் கூப்பிடுவது கேட்கவில்லையா?

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

மூன்று அணிகளும் எங்கே போயிட்டீங்க? பேச ஆளில்லையா?இல்லை பேச பாயிட்ஸ் இல்லையா?என்னகொடுமைப்பா...:-( யாரங்கே மூவணி வாதிகளும் எங்கே இருக்கிரார்களென எனக்கு துப்பு கொண்டுவாருங்கள்....(அட சீக்கிரம் வாதங்களோட வாங்கப்பா)

கெட்டதை நல்லது போலவும் இல்லாததை இருப்பது போலவும் நம்மை நம்ப வைக்கும் ஒரு குணம் சினிமாவுக்கு உண்டு..முன்பு காதல் நு சொல்ல வெக்கப்பட்டோம்..பிறகு சர்வ சாதாரணமா லவ் பன்றாங்கன்னு சொன்னோம் பிறகு கட்டிப் பிடிக்கன்னு சொல்ல கஷ்டப்பட்டோம் அது ஹக் அப்படின்னு ஈசியா போச்சு செக்சி எஙிற வார்த்தை கொச்சையான ஒண்ணா இருந்தது இப்போ சும்ம அழகா இருந்தாவே யூ லுக் செக்சி அப்படின்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கிற மாதிரி எளிமையாக்கித் தந்தது சினிமா தானே

மேலும் சில பதிவுகள்