பட்டி - 85 "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?"

தோழிகளுக்கு வணக்கங்கள் பல, பட்டிமன்றம - 85 ஆரம்பமாகிவிட்டது.இதோ தலைப்பு
*** "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?" ***
இது நம் பாபு அண்ணா கொடுத்தது,கொஞ்சம் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தலைப்பை பற்றிய விளக்கம் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்.வாங்க தோழீஸ் வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே எனர்ஜி தேவைப்படும். ஸ்பீடா வாங்க வாதங்களோட,சூடா பதிவிடுங்க,நடுவருக்கு பாய்ட்ஸ் கொடுங்க ஒரு முடிவுக்கு வர....
வந்து கலக்குங்க...அனைவரும் கலந்து கருத்துகளை பதிவிடுங்க, தோழிகள் தம் அணியை முகப்பில் குறித்து பதிவிட்டால் தோழிகளின் வாதங்கள் எந்த அணிக்கு என்பதுபற்றிய குழப்பம் தவிர்கப்படும்.பட்டி விதிமுறை அனைவருக்கும் தெரிந்ததே.ஆனாலும் தலைப்பை நினைவில் வைத்து விதிமுறைகளை இங்கே கொடுக்கிறேன்.....

* பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

*. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

*. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

*. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

*. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.

*. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக, அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

நல்லதோ,கெட்டதோ அதை பெரிசு பண்ணி அனைவரும்க்கும் தெரியும்படி செய்வது சினிமாத்துறையேன்னு வாதாடராங்க அவ்வணித்தோழி, என்னப்பா மற்ற கல்விதுறை அணியும்,அதிகாரத்துறை அணியும் என்ன சொல்லப்போரீங்க? மக்களிடம் நீங்க பாப்புலர் இல்லையா??

என்னப்பா பொறுப்பில்லாமல் இப்படி பட்டியை தூங்கவிடரீங்களே.இது நல்லாயிருக்கா???மூன்று கேள்விக்குறி மூன்று அணிக்கும்தான்.....இன்னும்மா பாயிட்ஸ் கிடைக்கலை..இது பட்டி வா...ரம் மறந்துட்டீங்களா? சீக்கிரம் ஓடிவாங்க வாதங்களுடன்.

தோழீஸ் என்னபா இப்படி பட்டியை தூங்கவிட்டுட்டீங்க? நாளை மாலை பட்டி தீர்ப்பு சொல்லப்போறேன்.அதற்குள் உங்களின் கடைசிகட்ட வாதங்களை சமர்பியுங்கள்.............

தோழீஸ் பட்டி தீர்ப்பு கொடுத்திடாலாமா?

எதிர்பார்த்ததுபோல வாதங்கள் கிடைக்காதபடியால் நடுவர் சில கருத்துகளை சேர்க்கப்போகிறார்.அதன் பின்பு தீர்ப்பு வழங்கப்படும்.

என்னாச்சு? பட்டியில் ஏன் இத்தனை அமைதி??? :o

நடுவரே... சற்று நேரம் அவகாசம் கொடுங்க... நான் ஒரே ஒரு பதிவு போட முடியுதா பார்க்குறேன். :) இல்லை என்றால் தாராளமா தீர்ப்பை போடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பொறுப்புகள்:
************

1. தனிமனித ஒழுக்கத்தையும்,தன்னம்பிக்கையையும் வளர்க்கனும்.

2.. எந்தப்பள்ளி,எந்த கல்லூரின்னாலும்(தனியார் & அரசு) நல்ல கல்விமுறை.

3. இவற்றை கொடுத்தால் ஒரு குழந்தைக்கு சமூகம் பற்றிய அக்கரை விதைக்கப்பட்டு வளர்ந்திடும்.

பொறுப்பின்மைகள்:
******************

கல்வித்துறையில் சில குறைகள் இருக்கின்றன.அவற்றை நீக்கிவிட்டு பார்த்தால்; பொறுப்புகள் இன்னும் இன்னும் அதிகமகும்,இருக்கும் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றமுடியும்.

1. பள்ளிகளின் முன்னேற்றத்தை மட்டும் பார்த்து வசூழிக்கப்படும் அதிக கட்டணச்ங்கள்.

2.தங்கள் பள்ளி சிறந்ததென காட்டிட மாணவர்களை வடித்தெடுத்து சேர்த்தல்,அதிக சலுகைகள் கொடுத்தல்,விளம்பரப்படுத்தல்.

3.சரிவர வசதிகள் இல்லாத பள்ளி கல்லூரிகளுக்கு வழங்கப்படும் அனுமதிகள்.

நிவர்த்திக்கான வழிகள்:
**********************
இதுபோன்ற குறைகளை சரிசெய்தால் கல்வித்துறையின் செயல்கள் இன்னும் பொறுப்பு மிக்கதாக அமையும்.

1.அரசுப்பள்ளிகள் கல்லூரிகளில் தரமான கல்விமுறையும்,சலுகைகளும் இருப்பின் தனியாரை பெற்றோர் நாடுவது எதற்காக?

2.அரசு மற்ற சலுகைகளை மக்களுக்கு கொடுத்தாலும் "எழுத்தறிவித்தவன் இறைவனாவான்" என்பதற்கு ஈடாகுமா?

3.அனுமதிக்கப்படாத கட்டிடங்களும்,அதிகாரிகளின் அலட்சியப்போக்கும் மனதில் ஒன்றுமில்லாத பச்சை பிள்ளைகளையும்,வளைந்து கொடுக்கும் இளைஞர்களின் மனைதில் தவறான எண்ணங்களை விதைப்பது குற்றமல்லவா?

இப்படிப்பட்ட களைகளை பறித்தெரிந்தால் விதைக்கப்படுவது அனைத்தும் நல்விதைகள் உருவாக்கும் விருட்சமாகும்..........

இத்துறை ஒரு பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்றாலும்கூட இக்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் விவாதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

பொறுப்புகள்:
************

* பொழுதுபோக்கு மட்டுமே இருந்தால் போதுமானது.

* இதில் நாம் வாழ்வது சமூகம் சார்ந்ததென்பதாலும், அதில் நிறைந்திருப்பது மக்கள் என்பதாலும் அதன் நிறைகுறைகள் பட்டவர்த்தனமாக
வெளிப்படுத்தப்படுகிறது.

* மனிதனின் நல்லொழுக்கம்,கடமைகள்,நல்லறிவினை வளர்க்கும்படியான பொறுப்புகளை இத்துறை கடைபிடிக்கலாம்.

* நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்கள்,குடும்ப அமைப்புகள் இவற்றினை மேம்படுத்தும் விதமாக படங்களை திரையிடலாம்.

பொறுப்பின்மைகள்:
*********************

தோழிகளோ அல்லது வேறு யாரேனுமோ கேட்கலாம்,இது ஒரு பொழுதுபோக்கு மட்டும்தானேன்னு.ஆனால்,இத்துறை மக்களை மதிமயக்கி வைத்து ஆட்டுவிக்கிறது பாவம் அவர்கள் அறியாமலே........

உரியவள் அறியாமல்
உள்நுழைகிறது "காதல்"...
அதுபோல,
உடையவன் அறியாமலே
பதிக்கப்படுகிறது "வக்கிரம்..."

* வருஷம் 10 படம் வரட்டும்,4 படம் "ஆக்ஷன்"ன்னு சொல்லக்கூடிய சண்டைபடம், மீதியில் 5 படம் காதலில் நனைவதும் அதனால் சண்டையுமாக வருகிறது.மீதி 1 படம் சமூக அமைப்பையோ,குடும்பத்தையோ குறிப்பதாக இருந்தாலும்கூட இதிலும் சண்டையும்,காதலும் தேவையாகவுள்ளது.இதில் மக்கள் மனதில் எதுபதியும்னு நல்லாவே தெரியும் அனைவருக்கும்:-((

* நல்லதை மறைத்துக்காட்டி கெட்டதை எடுத்துக்காட்டி மனதில் பதியவைக்கும் விபரீதம்.

* கொடுக்கப்படும் பணமொருவருடையாதாக இருந்தாலும் எடுக்கப்படும் பணம் மக்களோடது..இதில் அவர்களுக்கான சமூக பொறுப்பாக நினைத்து மக்களுக்கு கொடுப்பது அவர்களின் மனதில் விதைக்கப்படும் அலட்சியமும்,கொடூரமும்,எல்லை மீறிய வக்கிரமமும்.....:-((

* இத்துறையால் மக்களுக்கும் மக்களின் சமூகத்திற்கும் என்ன பௌயன்? தலைவர் படமென்றால் பல ஆயிரம் லிட்டர் பால் வீண்:-(,

நிவர்த்திக்கான வழிகள்:
***********************
டெக்னாலஜி,மாடனைஸ்,திறமைகள் என்று என்னதான் வாய்விட்டு பேசினாலும்கூட

* இத்துறையால் சமூகத்த்ஹிற்கு என்ன பயன்?

பனம்போட்ட ஒருவன் பணம் எடுக்கிறான்,மக்களுக்கு கூடுதல் செலவு. சொல்லலாம் இத்துறையால் பலதுறைக்கு வேலை கிடைக்குதுன்னு,ஆனாலும் கூட நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் குறையலையே...!?
பஞ்சம் குறையலையே...!?
ஒருவனுக்கு வீட்டில் அனைத்துவித உணவு,ஒருவன் வீட்டில் கஞ்சிக்கும் அரிசியில்லை. கொடுமைதானே..?

* திறமை ஆம் மிகப்பெரிய திறமைதான் ,மக்களை மது,மாது போல மயக்கி சுழல வைத்திருப்பதே தெரியாமல் ஆட்டிப்படைப்பது,இவர்களின் மிகப்பெரிய திறமைதான்.......:-((

* மக்கள் விழிப்படைந்து வலையை கிழித்தெறிந்தால் ஒழிய இந்த மாய வலை கிழியாது..........

* மக்கள் சமூகத்திற்காக பொறுப்போடு உதவாத இத்துறைக்கு,
பொழுதுபோக்கிற்காக மட்டுமே நுழைந்து நேரத்தை விழுங்கும் இத்துறைக்கு,

எதிர்மறை எண்ணங்களைய்யும்,கலாச்சாரத்தையும் விரும்பாதபோதும் உட்கொணரும் இத்துறைக்கு,'

வரிச்சலுகை எதற்காக?

இத்துறை வியாபாரமெனில் வெரும் வரவு செலவு மட்டும் பாருங்களே,அவ்விடத்துடன் விட்டு வாருங்களேன் மக்களே.......

வியாபார சந்தைக்கு விருதுகள் எதற்காக???

* இதற்கு கொடுக்கும் சலுகைகளையும்,அனுமதிகளையும் விவசாய மக்களுக்கு கொடுத்தால் நாடு பசுமையடையும்,மக்கள மனம் குளிரும்........

இத்துறையின்கீழ் அனைத்துப்பிரிவு அதிகாரிகளும் அடங்குவர். கிராமத்தின் அலுவலர் முதல்,காவலர்,மாவட்ட ஆட்சியர் வரை அனைத்து அதிகார வர்க்கமும் அடங்கும்.

பொறுப்புகள்:
************

* அவரவர் பதவியின் வேலைகளை சரிவர செய்தாலே பொறுப்பு நிறைவேறும்.

* மக்களின் சேவைகளை கவனித்து செய்ட்ய்ஹல். சமூகத்தில் தேவைகளையும் தேவையற்றவைகளையும் கவனித்தல்.

* மக்களுக்காக சட்டங்களை நடத்துதல்,மக்களுக்கும் சட்டங்கச்ளை தெளிவுபடுத்தி நடஈமுறைபடுத்தல்.

பொறுப்பின்மைகள்:
*******************

* மக்களுக்கான அதிகாரிகள் என்பதை பிரித்து பணம்படைத்தோருக்கும்,பணம் இல்லாதோருக்கும் சட்டங்களை மாற்றுதல்.

* ஊக்கத்தொகை என்று சொல்லப்படும் லஞ்சம் வாங்கி சமூகத்தை கெடுத்தல்.

* காலம்தாழ்த்தி செயல்படுதல்.

நிவர்த்திக்கான வழிகள்:
***********************

* இவங்கெல்லாம் அதிகமா ஒன்னுமே பண்ணவேணாங்க, அவர்களின் வேலைகளை அடுத்தவர் தலையீடின்றி சரிவர செய்தாலே போதுமானது.

* படித்து அதிகார பொறுப்பிற்கு வந்த இவர்கள் மக்களை ஒன்றும் தெரியாதவர்போல நடத்தாமல் சொல்லி புரியவைத்தால் சமூக மக்களும் பொறுப்போடு நடந்துகொள்வர்.

* தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம், பண்ணாமல் அனைவருக்கும் சமமாய் நடந்தால் போதும்.

"தீர்ப்பு "
********

சமூகத்தின் மீது பொறுப்பு இவர்களுக்கு உள்ளது,இவர்களுக்கு இல்லைன்னு சொல்லிடமுடியாது,ஒவ்வொறு தனிமனிதனுக்கும் இருக்கவேண்டிய ஒரு உணர்வு.

இதில் தனிமனிதனின் பொறுப்புணர்வு எப்படி இருக்கு?

பிளாஸ்டிக் காகித உபயோகிக்க கூடாதுன்னு பல காரணங்கள்
சொன்னாலும் அசட்டை செய்து உபயோகிப்போம்.

பொது இடத்தில் எச்சில் துப்புவோம்,

பொதுவில் புகைத்து அனைவருக்கும் மரணத்தை கிட்டே அழைப்போம்,

சாக்கடை திறந்திருப்பின் மூடவேண்டாம்,ஃபிரீ கால் யூஸ்பண்ணி கப்லெயிட்கூட செய்யமாட்டோம்......

இப்படியே தொடர்கிறது பல பொறுப்பில்லா செயல்கள்............

சினிமாத்துறை கொஞ்சமும் சமூக பொறுப்பை உணராத,உணர்த்தாத,உணர்த்திணாலும் வேண்டிய மனதில் பதியாத கொடுமை,அதை விடுத்து பார்த்தால்.....

அதிகாரத்துறை, மக்களுக்கு சரியாக கொண்டு செல்லக்கூடியதும்,மக்களுக்கு வேண்டாதவற்றை தவிற்பதும் இத்துறைக்கு அதிகம்.ஆனால் பல இடையூருகளாலும்,தலையீடுகளாலும்,தட்டி உட்காரவைத்து,இப்போது அவர்களுக்கும் ஒன்றும் தெரியாமல் ஆகிவிடுகின்றது.

மக்களிலிருந்து கல்விகற்று அதிகாரவர்கத்திற்கு வரும் இவர்கள் மக்களின் கஷ்டங்களை அறியாததும்,அலட்சியப்படுத்துவதும் ஏற்கக்கூடியதல்ல.
தட்டிக்கழிப்பதாலோ,தட்டப்படுவதாலோ இத்துறையின்ப் சமூக பொறுப்பும் அழுத்தப்பட்டுவிடுகின்றது..........இதையும் விடுத்து அடுத்து பார்த்தால்............

கல்வித்துறை,பிஞ்சில் பதியன்போட்டு நீரூற்றி விருட்சமாக்கி கனியாக்கி,மீண்டும் நல்விதைகளை உருவாக்கும் பொறுப்பு இத்துறைக்கு உண்டு......
பழுதுபார்த்து சீர்செய்தால்
விழும் விதைகளனைத்தும் நல் விருட்சமாகும்..........
இல்லையேல் அதுவும் மலடுதட்டிப்போகும்.........
ஐயகோ..............:-((
சமீபகாலமாக இப்படித்தானே ஆகிறது.

"கல்வித்துறையின் அதிகாரி சரியில்லைன்னா கீழிருப்போர் செயல்பாடும் தரம்குறையும்.........கல்வியில் தரம் குறைந்தால் இதிலிருந்து பிரியும் அனைவரும் வேறு திசையில் பழுதடைந்தவராக காலூன்றுவர். இது தொடர்ந்தால் அனைத்தும் பழுதாகும்.........

"சரஸ்வதி
லட்ஷுமியாகிறால்
பாடசாலைகளில்......:-(("

இந்த ஹைக்கூபோல கல்வி வியாபாரமாக்கப்பட்ட சூழலில் இத்துறையில் சமூகப்பொறுப்பை எதிர்பார்ப்பதுவும் நம் தவறுதான்.

"ஆக இம்மூன்று துறைகளுக்குமே இக்காலத்தில் சமூகப்பொறுப்பு இல்லை......"

இதுவே இப்பட்டிமன்றத்திற்கான நடுவரின் தீர்ப்பு.........மக்களின் சிறு பொறுப்புகளை கடமைகளாக பாவித்து செயல்படுத்துபோது சமூகம் பற்றிய பயமும்,அதனை காக்க நாம் போராடவும் அவசியமில்லாது போய்விடும்.

ஒன்றைப்பற்றிய முழு தெளிவு இல்லாததுவும்,தன்னம்பிக்கை கலையப்படுவதுமே காரணமாகப்படுகிறது.

இவற்றை கலைய அடிப்படையான கல்வி பாகுபாடின்றி சமமாகவும்,சமூக விழிப்புணர்வும்,சமூக பொறுப்புணர்வும் கொடுக்கும் பாடம் கட்டாயமாக்கப்படுதலும் நல்ல தீர்வு கொடுக்கும்.

ஆக ஒவ்வொரு தனி மனிதனும் தத்தம் பொறுப்புகளை சரிவர செய்தாலே சமூகம் சீரடையும்.......

மீண்டும் தெளிவிற்காக--- பட்டிமன்றம் - 85, " இக்காலத்தில் சமூக்லப்பொறுப்பு யாருக்கு அதிக? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா? "

"தீர்ப்பு -- இக்காலத்தில் சமூகப்பொறுப்பு யாருக்கும் இல்லை...:-(("

தோழீஸ் தீர்ப்பு அனவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக
இருக்குமென நம்புகிறேன். பட்டியில் அனி தேர்வு செய்து வாதங்களை பதிவிட்ட தோழீஸ்கும்,வரமுடியாமல் தவித்து பார்வையிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல..........அட்மின் பாபு அண்ணா தலைப்பிற்கு மீண்டும் நன்றிகள்......:-))

மேலும் சில பதிவுகள்