பட்டி - 85 "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?"

தோழிகளுக்கு வணக்கங்கள் பல, பட்டிமன்றம - 85 ஆரம்பமாகிவிட்டது.இதோ தலைப்பு
*** "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?" ***
இது நம் பாபு அண்ணா கொடுத்தது,கொஞ்சம் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தலைப்பை பற்றிய விளக்கம் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்.வாங்க தோழீஸ் வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே எனர்ஜி தேவைப்படும். ஸ்பீடா வாங்க வாதங்களோட,சூடா பதிவிடுங்க,நடுவருக்கு பாய்ட்ஸ் கொடுங்க ஒரு முடிவுக்கு வர....
வந்து கலக்குங்க...அனைவரும் கலந்து கருத்துகளை பதிவிடுங்க, தோழிகள் தம் அணியை முகப்பில் குறித்து பதிவிட்டால் தோழிகளின் வாதங்கள் எந்த அணிக்கு என்பதுபற்றிய குழப்பம் தவிர்கப்படும்.பட்டி விதிமுறை அனைவருக்கும் தெரிந்ததே.ஆனாலும் தலைப்பை நினைவில் வைத்து விதிமுறைகளை இங்கே கொடுக்கிறேன்.....

* பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

*. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

*. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

*. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

*. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.

*. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக, அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

ரேணு..... பொறுப்பு யாருக்கு இருக்குன்னு கேட்டதை நான் யாருக்கு இருக்கனும்னு அர்த்தம் எடுத்தேன்... நீங்க யாருக்கு இருக்குன்னே கேட்டிருக்கீங்க ;( அன்னைக்கே சீதாலஷ்மி சொன்னாங்க... என் மண்டைக்கு தான் புரியல போல. இருங்க தீர்ப்பை முழுசா படிக்கறேன். இன்னும் போன பட்டி தீர்ப்பையே படிக்கல ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டியை சிறப்பாக நடத்தி முடித்த சகோதரிக்கு நன்றிகள். ஆனா, இது மாதிரி ஒரு தலைப்பு நான் எப்ப கொடுத்தேன்னு தெரியாம யோசிச்சுக்கிட்டே இருக்கேன். !!!

அன்பு வனி,
பட்டியில் கலந்து கொண்டதற்கு நன்றிகள். தோழீஸ்கும் வரமுடியலைபோல. சரி என் மனதிற்கும் அறிவிற்கும் உணர்ந்தவற்றை தீர்ப்பாக கொடுத்துள்ளேன். படிங்க முழுதாய் படித்துவிட்டு சரியா இருக்கான்னு சொல்லுங்க....

வணக்கம் அண்ணா,

பட்டி நடந்திருக்குன்னு சொல்லுங்க,ஆனா சிறப்பான்னு சொன்னா ஏற்றுக்க மனம் ஒப்பவில்லை.நம் தோழி,தோழர்கள் சிறப்பான வாதங்களை கொடுத்திருந்தால் தீர்ப்பு இன்னும் சிறப்பாய் அமைந்திருக்குமோ என்னவோ,:-(கால சூழ்நிலை இத்தலைப்பிற்கு பதிவுகள் குறைந்தே வந்துள்ளன.பரவாயில்லை என் கருத்துகளை சொல்லமுடிந்திருக்கிறது.

அண்ணா "பட்டி தலைப்புகள்"முதல் இழையில் இரண்டாம் பக்கத்தில் சமூகப்பொறுப்பு அதிகமுள்ள நடிகர் யார்? ரஜினியா?கமலான்னு கேட்டிருக்கீங்க.அத்தலைப்பைதான் கொஞ்சம் மாற்றி கொடுத்துள்ளேன்......

சினிமா பத்தி நிறைய பேசியாச்சு,அதான் கொஞ்சம் மாற்றினேன்.தவறில்லைன்னு எண்ணுகிறேன்.....தீர்ப்பில் உங்கள் கருத்தை சொல்லலையே......குறைகள் இருந்து சொன்னால் அடுத்தமுறை சரிசெய்ய ஏதுவாகும்.....

உங்கள் வாதங்களும் வரும்னு எண்ணினேன் அண்ணா.......மிஸ் பண்ணிட்டேன்..,..:-( பதிவிற்கு நன்றிகள் அண்ணா......

ரேணு, முதலில் மன்னிச்சு மன்னிச்சு. நான் வாதிட வேண்டும் என்று ஆசைப்பட்ட அருமையான தலைப்பு. ஆனால் சூழ்நிலை காரணமாக அறுசுவை பக்கம் கூட வர முடியவில்லை. மிஸ் பண்ணிட்டேனென்னு வருத்தமா இருக்கு. தீர்ப்பில் மூன்று அணியினரும் சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்லி தீர்ப்பு சொன்ன விதம் அருமை. வாழ்த்துக்கள் ரேணு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//சமூகப்பொறுப்பு அதிகமுள்ள நடிகர் யார்? ரஜினியா? கமலான்னு கேட்டிருக்கீங்க.// - :o இவங்களுக்கு துறை கொடுத்து மாற்றியது சின்ன மாற்றமா!!! ரேணு... ம்ம்.... நடத்துங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாவம்பா நீங்க..வேற யாராவதா இருந்தா யாரையும் காணோம் நானும் போறேன்னு போயிடுவாங்க..நீங்க பிறகும் வந்து விள்க்கமும் தந்து தீர்ப்பும் தந்து உண்மையும் சொல்லிட்டீங்க..ஒரு காமடி என்னன்னா என்ன தலைப்புன்னே தெரியாம பேசியிருக்கேன் இன்னைக்கு பொறுப்பு யாருக்கும் அதிகம் வேணும் அப்படின்னு நெனச்சு சொல்லியிருக்கேன்..இவ்வளவு சிரமப்பட்டு பொறுப்பா நடந்துகிட்ட உங்களுக்கு பக்கத்தில் இருந்தா ஒரு சந்தன மாலை போட்டிருப்பேன்

அன்பு நடுவரே,

சில பல வேலைகளால் ,தொடர்ந்து வர இயலாமல் போயிற்று. மன்னிக்க வேண்டுகிறேன். தீர்ப்பை படித்த பின்பு, கிடைத்த சிறிது நேரத்தில் பதிவிட எண்ணி , வந்தேன். உண்மையிலேயே உங்கள் பொறுப்பு உணர்ச்சி பாராட்டுதலுக்கு உரியது. நடுவராக மிக அழகாக குறை நிறைகளை சொல்லிய விதம் சூப்பர்.இதில் குறிப்பிட்ட துறையில் நாம் இருந்தால் கண்டிப்பாக உரிய கடமையை செய்வோம் என்ற எண்ணம் வருமாறு கூறியுள்ளீர்கள் .

வாழ்த்துக்கள்

வனி அண்ணாவின் தலைப்பு விவாதிக்க வேண்டியிருந்தது,இருந்தபோதும் இரு தனிமனிதருக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கான்னு பார்க்கப்போனா அப்படி இல்லைன்னு தோணுச்சு.தலைப்பின் வேரை எடுத்துக்கொண்டு துறைகள் கொடுத்தேன்...........நீண்ட மனப்போராட்டத்திற்கு பிறகே இதை தேர்வு செய்தேன்.
இருந்தும் நீங்கள் சொன்னதுபோல முடிந்துவிட்ட ஒன்றைற்கு சமாதானம் தேவையில்லைதான்.ஆனாலும் கூட விளக்கப்படுத்தும் கடமை இருக்குன்னு நினைத்து சொல்லிட்டேன் வனி.இனி இது பொல பெரிய மாற்றம் வராதவாறு கவனமாக இருக்கிறேன் சரியா?:-)
ஓகே இன்னும் முழுசா படிக்கலையா?

கவி,
பரவாயில்லை கவி,தோழீஸ் ஒருநாள் கூட வரமுடியலைன்னா,அவர்களின் கமிட்மெட்ஸ் மற்றும் இயலாமையை புரிந்து கொள்ள முடிகிறது.அடுத்த பட்டியில் கலக்குவோம் சரியா..:-)பதிவிற்கு நன்றிகள்.....

தளிகா பட்டியில் கலந்துகொண்டதற்கு நன்றிகள்.வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.சந்தன மாலையை அப்படியே வையுங்கள் பத்திரப்படுத்தி நல்ல குடிமகனை(மகளை)காணும்போது அணிவிப்போம்.......:-) அடுத்த பட்டியிலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்.......

உஷா,
வாங்க உஷா நல்லா இருக்கீங்களா......வாழ்த்துக்களுக்கும் பதிவிற்கும் நன்றிகள்பா......தொடர்ந்து பட்டியில் கலந்துக்கங்க.......

மேலும் சில பதிவுகள்