பட்டி - 85 "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?"

தோழிகளுக்கு வணக்கங்கள் பல, பட்டிமன்றம - 85 ஆரம்பமாகிவிட்டது.இதோ தலைப்பு
*** "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?" ***
இது நம் பாபு அண்ணா கொடுத்தது,கொஞ்சம் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தலைப்பை பற்றிய விளக்கம் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்.வாங்க தோழீஸ் வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே எனர்ஜி தேவைப்படும். ஸ்பீடா வாங்க வாதங்களோட,சூடா பதிவிடுங்க,நடுவருக்கு பாய்ட்ஸ் கொடுங்க ஒரு முடிவுக்கு வர....
வந்து கலக்குங்க...அனைவரும் கலந்து கருத்துகளை பதிவிடுங்க, தோழிகள் தம் அணியை முகப்பில் குறித்து பதிவிட்டால் தோழிகளின் வாதங்கள் எந்த அணிக்கு என்பதுபற்றிய குழப்பம் தவிர்கப்படும்.பட்டி விதிமுறை அனைவருக்கும் தெரிந்ததே.ஆனாலும் தலைப்பை நினைவில் வைத்து விதிமுறைகளை இங்கே கொடுக்கிறேன்.....

* பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

*. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

*. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

*. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

*. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.

*. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக, அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

ரேணு

பட்டிமன்றம்னு தலைப்பு பார்த்து நேற்று சாயங்காலம் ஓடோடி வந்தேன், அதுவும் அட்மின் அண்ணா <அவர்கள்> கொடுத்த தலைப்பு என்றதும் பதிவு போட்டே ஆகணும்னு நினைச்சேன், அதுக்குள்ள நீங்க தலைப்புன்னு போட்டதும் கம்முன்னு போய்ட்டேன், அதனால பட்டிமன்றம் தப்பித்தது:) ஹி ஹி.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்