கொண்டைக்கடலை குழம்பு

தேதி: March 18, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.9 (10 votes)

 

கொண்டைக்கடலை - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று (அ) சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
வறுத்து பொடிக்க:
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைத்து எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி நீர் விட்டு தூள் வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, பின் தேங்காய் துருவல் சேர்த்து வாசம் வரும் வரை பிரட்டி எடுக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
தூள் வாசம் போக குழம்பு கொதித்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து கொதித்ததும், புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியாக பொடித்து வைத்த பருப்பு தூளை சேர்க்கவும். சற்று கெட்டியாகும். தேவையான அளவு நீர் சேர்க்கவும். நன்றாக எண்ணெய் பிரிய கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான கொண்டைக்கடலை குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கடலை குழம்பு,பார்க்கும் போதே மனசு அல்லுது பா.நாளைக்கு எங்க வீட்டில் இந்த குழம்பு தான்.சூப்பர்,புது புதுசா ரெசிபீஸ் கொடுக்குறீங்க.வாழ்த்துக்கள் வனி.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

oru santheham akka

'ஒரு சந்தேகம்' என்றால் வனி எப்படிப் பதில் சொல்வார்! :-)
உங்கள் சந்தேகத்தைப் பதிவிட்டு வையுங்கள். வந்ததும் பதில் சொல்வார்கள்.

‍- இமா க்றிஸ்

வனி கொண்டைக்கடலை குழம்பு அருமை:) வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனிதா பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு..அதிலேயே தெரிகிறது அதன் ருசியும்.கண்டிப்பாக நான் நாளை செய்வேன்.இதனை இட்லி,சாதம் இரண்டுக்கும் போட்டுக்கொள்ளளாமா தோழி..

வனி,
எனக்கு இந்த வகை குழம்பென்றால் கொள்ளை இஷ்டம்..
அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வணக்கம் நான் ஆதி
நான் அழகு கலை நிபுணர் ஆக விரும்புகிறேன் எங்கு படிப்பது ஆலோசனை தேவை

வனிதா எப்படி இருக்கீங்க?இப்போதெல்லாம் வித்தியாசம் தெரிகிரது படம் எடுப்பதில்.பார்த்தவுடன் நீங்கதான் என்பது தெரிகிறது நன்றாக இருக்கு .வாழ்த்துக்கள்.

வனி கொண்டைகடலை குழம்பு செம சூப்பரா இருக்கு :) வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனிதா ௨ங்களுக்கு 20வருடம் சமையல் அனுபவம் என்று நினைத்தேன் . நிங்க கொடுத்த ரெஸிப்பி பார்த்து கலக்கீறங்க வனிதா. 

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழிவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்தீங்களா? எப்படி இருந்தது?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்புலையா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்தீங்களா? எப்படி இருந்துதுன்னு சொல்லுங்க. இட்லி, சாதம், தோசை எல்லாத்துக்கும் நல்லா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதை குறிப்பில் கேட்டால் யாரும் பார்க்க மாட்டாங்க... மன்றத்தில் கேளுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ஊர் மாறினதும் படங்கள் மாறும் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) 20 வருஷமா!!!! எனக்கு அம்புட்டு வயசாகல :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா உங்க கொண்டைக்கடலை குழம்பு செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது என் கணவருக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு ரொம்ப நன்றி

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழி குழம்பில் மிளகாய்த்தூள் சேர்க்கவே இல்லையே? காரம் எப்படி பா வரும்

ஏமாறாதே|ஏமாற்றாதே