தேதி: March 19, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முள்ளங்கி - ஒன்று
கோதுமை மாவு - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு
மல்லித்தழை - சிறிது
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

முள்ளங்கியை தோல் சீவி துருவி, அதை அப்படியே ஒரு நிமிடம் வைக்கவும்.

பிறகு முள்ளங்கியை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்

கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய், முள்ளங்கி சாறு, சிறிது தண்ணீர் கலந்து மாவை பிசையவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பிழிந்த முள்ளங்கி, கரம் மசாலா, சீரகத் தூள், உப்பு, மிளகாய் தூள், மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அதை தனியே எடுத்து வைக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை சற்று மொத்தமான சப்பாத்தியாக போட்டு, அதனுள் முள்ளங்கி மசாலாவை வைக்கவும்.

அதை அப்படியே மூடி உருட்டவும்.

உருட்டியதை மீண்டும் சப்பாத்தி போல போட்டுக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி அதில் சப்பாத்தியை போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான முள்ளங்கி சப்பாத்தி தயார். முள்ளங்கி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல கொடுக்கலாம்.

முள்ளங்கி சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பசியைத் தூண்டும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும்.
Comments
சங்கீதா
ஹெல்தி சப்பாத்தி.வாழ்த்துக்கள் :)
Kalai
சங்கீதா
வித்தியாசமான குறிப்பு.சூப்பர்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
சங்கீதா
ஆரோக்கியமான குறிப்பு வாழ்த்துக்கள் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சங்கீதா
நல்ல சத்தான குறிப்பு. சூப்பர். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
nice
nice
எனது குறிப்பை வெளியிட்ட
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி ..
கருத்துக்களை பகிர்ந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த் நன்றிகள் ...
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"