உதவுங்கள் தோழிகளே

எனது இனிய பயணத்தில் நான் தற்போது 36வது வாரத்தில் உள்ளேன்... அடுத்த வாரத்தில் இருந்து எப்போனாலும் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள்... என் கணவர் சிங்கப்பூரில் உள்ளார்... எனது சந்தேகம் நான் எந்த மாதத்தில் குழந்தையை அங்கு அழைத்து செல்லலாம்???...
நாங்கள் ஒரு மாதத்தில் அழைத்து செல்லலாம் என நினைக்குறோம் இது சரியான முடிவா??? (னான் செல்லும் போது என் அம்மா கூட வருவார்கள்)...

நான் இவ்வளவு யோசிக்க காரணம் என் மாமியார் தான்... அம்மா வீடும் மாமியார் வீடும் பக்கத்தில் உள்ளதால் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் நான் மாமியார் வீடில் தான் இருக்க வேண்டுமாம்.. அங்கு சென்றால் என் மாமியார் குழந்தையை பார்த்து கொள்ள மாட்டார்கள்.. ஊரில் உள்ள அனைவரிடமும் என் மருமகள் என் வீட்டில் தான் உள்ளால் என்று கூறி பெருமை பட்டுக்கொள்ள வேண்டும் அதற்கு தான் இப்போ பல பிரச்சனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்...

என் கணவருக்கும் அவர் அம்மா பேசுவதில் உடன்பாடு இல்லை... அதனால் எங்களை ஒரு மாத்த்தில் அழைத்து செல்ல வேண்டும் என நினைக்கிறார்...

* குழந்தையை ஒரு மாதத்தில் பிளைட்டில் அழைத்து செல்லாமா???
* குழந்தைக்கு கிளைமேட் நால எதும் பிரசனை வருமா???
எனக்கு முதல் குழந்தை என்பதால் ஒரெ குழப்பமாக உள்ளது உதவுங்கள் தோழிகளே

முதல் குழந்தை என்பதால் குழப்பமாக உள்ளது உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்

மேலும் சில பதிவுகள்