வெண்டை வேர்க்கடலை பொரியல்

தேதி: March 22, 2013

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

பிஞ்சு வெண்டைக்காய் -20
வேகவைத்த வேர்க்கடலை -1/4 கப்
வெங்காயம்-1
சாம்பார்த்தூள்-1டீஸ்பூன்
பூண்டுத்தூள்-1டீஸ்பூன்
உப்பு தேவைக்கு

தாளிக்க
கடுகு-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது


 

பச்சை வேர்க்கடலை கொதிக்கும் நீரில் போட்டு வெந்து ஆனால் குழைவதற்குமுன் எடுக்கவும்
வெண்டைக்காயை விரல்நீள துண்டுகளாக நறுக்கவும்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்

வாணலியில் எண்ணைவிட்டு கடுகு,சீரகம்,கறிவேப்பிலை,காய்ந்தமிளகாய் போட்டு வதக்கவும்

பின் வெண்டைக்காய் போட்டுவழவழப்பு போகும்வரை வதக்கவும்..
அதனுடன் உப்பு , சாம்பார்த்தூள் மற்றும் பூண்டுத்தூள் தூவி நன்றாக கிளறவும்
அதனுடன் சிறிது நீர் தெளித்து சிம்மில் வைத்து மூடி வேகவைக்கவும்
தேவைப்படும்போது மேலும் சிறிது நீர் தெளித்து அடிப்பிடிக்காமல் கிளறி வேகவிடவும்.
குழையாமல் வெந்துவரும்போது வேகவைத்த வேர்க்கடலை சேர்த்து கிளறி மேலும் சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும்
சுவையான வெண்டை வேர்க்கடலை பொரியல் தயார்


வெண்டைக்கு பதில் கத்தரிக்காயிலும் இதுபோல் செய்யலாம்.
பூண்டுத்தூளுக்கு பதில் 1டீஸ்பூன் பூண்டு விழுதை வெங்காயம் வதக்கியபின் சேர்க்கலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

வெண்டைக்காய் வேர்க்கடலை பொரியல் செய்தேன் இளா...மிகவும் அருமையாகவும்,வித்தியாசமாகவும் இருந்தது.இந்த அருமையான ரெசிபி சொல்லி கொடுத்ததற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

Expectation lead to Disappointment

இளா வெண்டை வேர்க்கடலை பொரியல் செய்தேன். வித்யாசமாக சுவையாக இருந்தது. நன்றி இளா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரசி... கவிசிவா சொல்றதை ஒத்துக்காதீங்க ;) ஸ்டெப் ஸ்டெப்பா ஏன் படமெடுக்கலைன்னு பென்ச் மேல ஏத்துங்க :P இன்னைக்கு ஒரு நாள் பென்ச் மேல ஏத்த நான் உங்களுக்கு அனுமதி தரேன் ;) ஹிஹிஹி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனீ.... வொய் திஸ் கொலை வெறி???? கர்ர்ர்ர்ர்ர்ர். கவி பாவம் விட்டுடுங்க. ஏற்கெனவே பெஞ்சு மேல நிற்கற மாதிரிதான் இருப்பேன். இதுல நிஜம்மாவே பெஞ்சு மேல ஏத்தினா பார்க்கறவங்களுக்கு கொடுமை ஆயிடும் :). அடுத்தவாட்டி செய்யும் போது ஸ்டெப் பை ஸ்டெப் எடுத்து போடறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றிங்க :)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

செய்து படம் போட்டு காட்டி,பின்னூட்டமும் போட்டதற்கு மிக்க நன்றி :)

//பெஞ்சு மேல நிற்கற மாதிரிதான் இருப்பேன். இதுல நிஜம்மாவே பெஞ்சு மேல ஏத்தினா பார்க்கறவங்களுக்கு கொடுமை ஆயிடும் :). //

சரி விடுங்க கவி.....பெஞ்சுமேல உங்கள மிக்கவைக்காம பெஞ்ச உங்க மேல நிக்க வச்சுட்டா போச்சு :)(என்ன வனி நான் சொல்றது ஓகேதானே?..:))

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

Nice