பனானா ஓட்ஸ் பர்பி

தேதி: March 23, 2013

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

வாழைப்பழக்கூழ்- 1 கப்
வறுத்து பொடித்த ஓட்ஸ் -1கப்
பால்பவுடர் -1டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள்-1டீஸ்பூன்
சர்க்கரைத்தூள்-1 1/2 கப்
பாதாம் சீவல்-1/4கப்
நெய்-2டேபிள்ஸ்பூன்


 

மைக்ரோவேவ் ஓவனில் 1டேபிள்ஸ்பூன் நெய்விட்டு மைக்ரோ மீடியமில் 15 செகண்ட்ஸ் வைக்கவும்

நெய் உருகியதும் எடுத்து வாழைப்பழக்கூழையும் ஓட்ஸையும் கொட்டி கிளறி அதை ஓவனில் 5 நிமிடங்கள் வைக்கவும்.

நடுவில் ஒருமுறை எடுத்து கிளறவும்

பிறகு அதில் பால்பவுடர்,சர்க்கரைத்தூள்,ஏலக்காய்,பாதாம் சீவல் ,மீதமுள்ள நெய் விட்டு கிளறி மேலும் 5 நிமிடங்கள் மைக்ரோமீடியமில் வைக்கவும்
நடுவில் ஓரிருமுறை எடுத்து நன்றாக கிளறவும்

கடைசியில் எடுத்து கிளறும்போது ஒட்டாமல் சுருண்டு வந்தால் அதை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடலாம்


அல்வாவாக சாப்பிட விரும்பினால் ஓரிரு நிமிடங்கள் முன்பே எடுக்கவும்
அல்வாவாக சாப்பிட்டாலும் பர்பியாக சாப்பிட்டாலும் சுவை நன்றாக இருக்கும்
இதில் பாதாம் சீவலுக்கு பதில் பிஸ்தாசீவலும் சேர்க்கலாம்..அல்லது வறுத்து பொடித்த முந்திரி கடைசியில் சேர்க்கலாம்

ஓவனுக்கு ஓவன் நேரமும் வெப்பநிலையும் மாறுபடுவதால் இடையிடையே கவனித்து சரியான நேரத்தில் எடுக்கவும் அடிக்கடி வெளியில் எடுத்து கிளறவும்
ஓவனில் அதிகம் செய்து பழக்கமில்லையென்றால் அடுப்பிலேயே மிதமான தீயில் இதே முறையில் செய்யலாம் ..அப்போது இன்னும் ஓரிரு டேபிள்ஸ்பூன் நெய் தேவைப்படலாம்..அடுப்பில் செய்வதென்றால் செய்து முடிந்து பக்குவம் வரும்வரை விடாமல் கிளறவேண்டும்....

மேலும் சில குறிப்புகள்