தேதி: March 25, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஆல் பர்பஸ் ஃப்ளார் - 200 கிராம்
அரைத்து மாவாக்கிய சீனி - 120 கிராம்
பட்டர் - 200 கிராம்
வெனிலா எஸன்ஸ் - ஒரு மேசைக்கரண்டி
வறுத்து நறுக்கிய முந்திரிப்பருப்பு - ஒரு கப்
உப்பு - அரை பின்ச்
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

பட்டரையும், சீனியையும் நுரைக்க அடிக்கவும்.

எஸன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

அதனுடன் உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக மாவைச் சேர்த்து பிசையவும்.

பின் முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும்.

நன்கு பிசைந்து உருட்டி பேக்கிங் ஷீட்டில் வைக்கவும்.

அப்படியே சுருட்டி, குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்.

ஒரு மணி நேரத்திற்கு பின் உருட்டி வைத்த மாவில் குக்கீஸை கால் இன்ச் அளவில் வெட்டிக் கொள்ளவும்.

அவனை 175' ல் முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் ஷீட்டை வைக்கவும். அதில் குக்கீஸை இடைவெளி விட்டு அடுக்கி, அவனில் வைத்து 150' ல் 15 நிமிடம் வரை பேக் செய்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

குட்டீஸ்களுக்கு ஏற்ற சத்துமிக்க முந்திரிப்பருப்பு குக்கீஸ் ரெடி. இதுபோல நாம் விரும்பிய நட்ஸ் சேர்த்து செய்யலாம்.

Comments
all purpose flour mean wat
all purpose flour mean wat kind of flour
சனாஷ்
முட்டை சேர்க்காமல்,பார்க்கவே நல்லா இருக்கு,செய்து பார்க்கிறேன்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
சுலபமாக செய்து விட்டேன்.
சுலபமாக செய்து விட்டேன். அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்..
GOOD LUCK !!!
Anitha
முந்திரி குக்கீஸ்
முட்டை சேர்க்காமல் குக்கீஸா நல்லா இருக்கு. அந்த கடைசி படம் எடுத்துக்க சொல்லுது. செய்ய முயற்சிக்கிறேன் நன்றி
முந்திரி குக்கீஸ்
osama fathima ஆல் பர்பஸ் பளோர் என்றால் இலங்கையில் கிடைக்கும் ரிபைன்ட்
செய்த கோதுமை மா.
முந்திரி குக்கீஸ்
musi சீனியை அளவாக சேர்த்து செய்து பாருங்கள். சொப்டான குககீஸ் கிடைக்கும்.
Anitha
Anitha vinoth..வாழ்த்தியமைக்கு நன்றி.
முந்திரி குக்கீஸ்
Devi...எல்லாம் arusuvai teamக்கும் உங்களுக்கும் தான் தாராளமாக எடுத்துக் கொள்ளவும்.
looking super
all purpose floor kidaikala na, instead of that what we can use..
Keep Smiling
முந்திரி குக்கீஸ்
குக்கீஸ் அருமையா, ஈசியா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ