கறிவேப்பிலை பருப்பு குழம்பு

தேதி: March 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

துவரம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு
அரைக்க:
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய் வற்றல் - 5
தனியா - அரை மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒன்றரை தேக்கரண்டி
தேங்காய் பொடியாக நறுக்கியது - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

வெங்காயம், பூண்டை தோலுரித்து வைக்கவும். துவரம் பருப்பை நீர் விட்டு வேக வைத்து நீரோடு கரண்டியால் மசித்து வைக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காயந்ததும் உளுந்து, தனியா, மிளகாய் வற்றல், மிளகு சேர்த்து வறுக்கவும்.
சிவந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, கடைசியாக தேங்காய் சேர்த்து பிரட்டி ஆற விடவும்.
ஆறியதும் சிறிது நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். இதில் அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
பின் வேக வைத்த பருப்பு, புளி கரைசல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.
சுவையான கறிவேப்பிலை பருப்பு குழம்பு தயார். சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்

கறிவேப்பிலை பருப்பு குழம்பு ஈஸி அண்ட் டேஸ்டி குறிப்பு சூப்பர்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல ருசியான,வாசமான குழம்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி, நான் இது மாதிரி செய்வேன். ஆனா பருப்பு சேர்க்க மாட்டேன். அதனால் தானோ என்னவோ புளிப்பு ரொம்ப தூக்கலா இருக்கும். அதிலிருந்து செய்வதையே விட்டுட்டேன், இனி இது மாதிரி செய்து பார்க்கிறேன்.

வனி, எல்லா இடத்திலும் கலக்கறீங்க வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்
பவித்ரா

வனிதா இந்த குழம்ப பார்க்கவே சாப்பிடனும்னு தோணுது, பசிய தூண்டுது. கறிவேப்பிலை நல்லதும் கூட

சூடா சாதம் போட்டு இந்த குழம்போட கூட்டு வச்சு சாப்பிட்டா எப்படி இருக்கு நாளைக்கே செய்துட்டு சொல்றேன். நன்றி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ட்ரை பண்ணி பாருங்க, என் பிள்ளைகளுக்கு பிடிச்சது :) அதுசரி.... எங்க அடிக்கடி காணாம போறீங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கறிவேப்பிலை குழம்பு பார்க்க சூப்பர் வனி,உடம்புக்கும் நல்லது.சீக்கிரம் செஞ்சிட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்ரேம் பா.வித்யாசமான குறிப்புகள் தரிங்க.தாங்க்யூ.வாழ்த்துக்கள்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

கறிவேப்பிலை பருப்பு கொழம்பு சூப்பர் தெளிவான விளக்கம்.காயத்ரி http://samayal.share2others.com

மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

* அறுசுவையில் யாரும் வேறு தளங்களின் லின்க் கொடுக்க அனுமதி இல்லை. நான் பதிலளி தட்டல, நீக்கிடுங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா