கோவக்காய் எக் கிரேவி

தேதி: March 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

முட்டை - 4
கோவக்காய் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மல்லி சீரக தூள் - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 (விருப்பத்திற்கேற்ப)
எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு


 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுதினை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

தூள் வகைகள் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் நறுக்கிய கோவக்காயைப் போட்டு நன்கு கிளறி, உப்பு சேர்த்து லேசாக நீர் தெளித்து சிறு தீயில் வைத்து கிளறவும்.

அதனுடன் வேக வைத்த முட்டையை போட்டு உடையாமல் கிளறி 5 நிமிடம் மூடி வைத்து இறக்கவும்.

சப்பாத்திக்கு ஏற்ற சுவையான கோவக்காய் எக் கிரேவி ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

hi arutselvi,
this recipe would surely suit people who would like to give children vegetable which they usually do not like. so nice...