ஆட்டீரல் சூப்

தேதி: October 7, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஈரல் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
தனியா - அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - இரண்டு
காய்ந்த மிளகாய் - இரண்டு
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி


 

ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு, மிளகு சீரகம், தனியா ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயை காய வைத்து காய்ந்தமிளகாய், வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும். பிறகு அரைத்த விழுதைப் போட்டு மஞ்சள்தூளையும் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள ஈரலை கொட்டி உப்பை தூவி நன்கு வதக்கவும்.
பிறகு இரண்டு கோப்பை வெது வெதுப்பான நீரை ஊற்றி குக்கரை மூடி வேகவைக்கவும்.
நன்கு வெந்தவுடன் கொத்தமல்லியை தூவி சூடாக பரிமாறவும்.


இந்த ஈரல் சூப்பை, அரவை இயந்திரத்தில் போதுமான அளவு ஊற்றி ஒரு சுற்று சுற்றி சோற்றில் கலந்து ஒரு சிட்டிகை உப்புத்தூள், மிளகுத்தூளை தூவி நன்கு பிசைந்து சின்ன குழந்தைகளுக்கு ஊட்டிவிடலாம்.

மேலும் சில குறிப்புகள்