தேதி: March 30, 2013
விரும்பிய நிறங்களில் கார்ட் ஸ்டாக் பேப்பர்
க்ளூ
க்வில்லிங் டூல்
வார்னிஷ்
கார்ட் ஸ்டாக் பேப்பரை அரை அங்குல துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். நீளம் அதிகமாக தேவைப்படும். எனவே, தேவையான நீளத்திற்கு ஒவ்வொரு நிற ஸ்ட்ரிப்பையும் மாற்றி மாற்றி ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டி வைக்கவும்.

க்வில்லிங் டூலில் ஸ்ட்ரிப்பை வைத்து சுற்ற ஆரம்பிக்கவும். ஒரு முறை சுற்ற ஆரம்பித்தால் பேப்பர் முடியும் வரை விடாமல் இறுக்காமல் சுற்றவும். இடையில் விட்டால் தளர்ந்துவிடும்.

பேப்பர் முடியும் வரை சுற்றி முடிக்கவும். ஒன்று பெரிய அளவிலும். அந்த அளவை விட சிறிய அளவில் ஒன்றும், அதற்கும் சிறிய அளவில் ஒன்றும் இதேபோல் சுற்றி வைத்துக் கொள்ளவும்.

சுற்றி வைத்துள்ள பேப்பர் ரோல்களில் பெரிய அளவு ரோலை எடுத்து சிமிழ் வடிவில் வரும் வரை நடுவில் விரலால் அழுத்தவும். அதேபோல் நடுத்தர அளவு ரோலை மூடி வடிவில் வரும் வரை லேசாக அழுத்தவும். மிகச் சிறிய ரோலை செய்த மூடியின் மேல் ஒட்டி விடவும். எல்லா ரோல்களிலும் உள்ளேயும், வெளியேயும் க்ளூ தடவி காய்ந்ததும், ஒரு கோட் வார்னிஷ் கொடுக்கவும்.

இதே போல் ரிப்பன் ஸ்ட்ரீமரிலும் செய்யலாம். கொஞ்சம் பெரிய அளவில் செய்து சாக்லெட்ஸ் வைத்து பார்ட்டி ஃபேவர்ஸாக கொடுக்கலாம். அழகான க்வில்டு சிமிழ் தயார்.

Comments
கலை
அழகு... கலர் காம்பினேஷன், க்ரியேட்டிவிட்டி எல்லாமே அருமை :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கலைச்சிமிழ்
;)) அழகோ அழகு.
- இமா க்றிஸ்
கலா மேடம்,
ரொம்ப அருமை, அழகா இருக்குங்க, வாழ்த்துக்கள் :-)
நட்புடன்
குணா
கலா
அருமையாக செய்து இருக்கீங்க,நிறங்கள் அழகு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
கலா
கலா ரொம்ப அழகா இருக்கு. பார்க்க பம்பரம் மாதிரி இருக்கு.
கலா,
கலா,
சூப்பர் ஐடியா
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
சிமிழ்
குறிப்பை வெளியிட்ட டீமிற்கு நன்றி :)
Kalai
சிமிழ்
மிக்க நன்றி வனிக்கா :)
Kalai
சிமிழ்
மிக்க நன்றி ஆன்டி :)
Kalai
குணா
வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)
Kalai
முசி
மிக்க நன்றிங்க :)
Kalai
சிமிழ்
பம்பரம் மாதிரி இருக்கா ;) நன்றி நிகி :)
Kalai
கவி
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவி :)
Kalai