பட்டிமன்றம் 86: இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை மேம்படுத்துகிறதா அல்லது சீரழிக்கிறதா?

பேரன்பிற்குரிய பெரு மக்களே, பெரு மதிப்பிற்குரிய அறுசுவை உறுப்பினர்களே அன்பார்ந்த சகோதரிகளே சகோதரர்களே அனைவருக்கும் இந்த சிறியோனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னையும் இந்த பட்டி மன்றத்தில் ஒரு நடுவராக அனுமதி தந்தமைக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறேன். (உனது அறுவை போதும் முதலில் பட்டி மன்றத்தின் தலைப்பு என்னவென்று சொல்லுடா நாங்கள் வாதங்களை முன்வைக்க என்று யாரோ முணுமுணுப்பது காதில் கேட்கிறது)
இதோ பட்டி மன்ற தலைப்பு :சகோதரி தளிகா அவர்களின் " இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை மேம்படுத்துகிறதா அல்லது சீரழிக்கிறதா?" நல்லதொரு தலைப்பை தந்த சகோதரி தளிகா அவர்களுக்கு ரொம்ப நன்றி.
பட்டி மன்றத்திற்கான பொதுவான் விதிகள் எல்லோரும் தெரிந்ததே.ஆனாலும் தலைப்பை நினைவில் வைத்து விதிமுறைகளை இங்கே கொடுக்கிறேன்.....

* பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
*. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
*. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.
*. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
*. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.
*. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
இறுதியாக, அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

தயவுடன் அவற்றை கடைப்பிடிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை ஆவலுடன் எதிபார்க்கிறேன். எங்கே எல்லோரும் பங்காளறாகி உங்கள் வாதங்களை வந்து கொட்டுங்கள். நன்றி, வணக்கம்

நடுவருக்கும் தோழர்தோழிகளுக்கும் அன்பான வணக்கங்கள். தலைப்பை கொடுத்த தோழி தளிகாவுக்கு வாழ்த்துக்கள்.

இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை மேம்படுத்துகிறது என்பதே என் வாதம். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லைன்னா இன்னமும் நாம் குண்டுசட்டிக்குள்தான் குதிரை ஓட்டிக் கொண்டு இருந்திருப்போம். உலகின் பலமூலைகளில் இருந்தும் இங்கே ஒன்றாக கூடி பட்டிமன்றத்தில் பங்கு பெறக் காரணமே தொழில்நுட்ப வளர்ச்சிதானே!

நேற்று என் அண்ணன் மகனின் முதல் பிறந்தநாள் விழா. நடைபெற்றதோ அமெரிக்காவில். நான் இருப்பதோ இந்தோனேஷியாவில். போக முடியாத சூழல். ஆனாலும் என்ன? மொத்த நிகழ்வையும் சுடச்சுட நேரடியாக இணையத்தின் உதவியால் கண்டு களித்தேன். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாமல் இது நடந்திருக்குமா?

வேலைக்கு போகும் பெண்களுக்கு மிக்சியும் கேஸ் அடுப்பும் இன்டக்‌ஷன் ஸ்டவும் இல்லைன்னா நேரத்துக்கு வேலைக்கு போக முடியுமா? யோசிச்சு பாருங்க காலையில் எழும்பி ஊது குழலால் ஊதி ஊதி அடுப்பில் நெருப்பு மூட்டி அம்மியில் அரையோ அரைன்னு மசாலா அரைச்சு சமைச்சு ஆஃபீஸ் போகணும்னா நடக்கும்ங்கறீங்க? இவ்வளவும் இருந்துட்டே காலை நேர பரபரப்பு எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் நடுவரே!

எதிரணியினர் தொழில்நுட்ப வளர்ச்சி சீரழிக்கிறது என்று லிஸ்ட் போட்டு கொடிபிடிச்சுட்டு வருவாங்க :). அவங்களுக்காக முன்கூட்டியே ஒரு சுருக்கமான பதில் சொல்லிடறேன். தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கத்தி போன்றது. அழகா பழம் வெட்டியும் சாப்பிடலாம் அடுத்தவன் தலையையும் வெட்டலாம். இது கத்தியின் தவறல்ல. அந்த கத்தியை பிடித்திருப்பவனின் தவறு.

இன்னும் விரிவான வாதங்களுடன் விரைவில் வருகிறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாருங்கள் கவிசிவா அவர்களே வணக்கம்.
ஆகா அருமை முதல் வாதத்திலே நல்ல கருத்துக்களை வைத்து மேம்படுத்தும் அணியினை துவங்கி உள்ளீர்கள். இனி சீரழிக்கும் அணியினர் வந்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஈஸ்வரன்

புது முக நடுவருக்கு வணக்கம் & வாழ்த்துக்கள். அணி முடிவாயிடுச்சு... இனி நேரம் கிடைக்கும் போது வாதத்தோட வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thani ilai il en kealvihalai kepathu epdi

neenga ipa type panuna.......page la up la paarunga puthiya kelvi searka nu irukum atha click panuna new page varum

keep smiling;);)

apdi illaye. neega anupura msg paakura pirahu athuke pathi alikkura

தோழிகளே இது பட்டிமன்ற இழை. தயவு செய்து இங்கே வேறு விஷயங்கள் பேச வேண்டாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

puthiya ilai epdi uruvaakura

வாருங்கள் வனிதா அவர்களே வணக்கம். உங்கள் வாழ்த்துகளுக்கும் வணக்கத்திற்கும் ரொம்ப நன்றி.
நீங்களும் மேம்படுத்துகிற அணியா? எங்கே உங்கள் வாதங்களை எடுத்து விடுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறார் நடுவர்.

ஈஸ்வரன்

புடுமுக நடுவர் அவர்களுக்கும் , நல்லதொரு தலைப்பை தந்த தோழி தளிகா அவர்களுக்கும், அனைத்து அறுசுவை தோழிகளுக்கும், முதற்கண் வணக்கம்.

இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை மேம்படுத்துகிறது ..

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும் , தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே..

அதனால, நம்ம தலைவர்(சுபெர்ச்டர்) சொல்ர மாதிரி ,உன் வாழ்க்கை உன் கையில்

இப்ப ஒரு குடும்பத்துல ஒருத்தரு , வெளிநாட்டுல இருக்கார். அவர்,குடும்பம் , அவரொட தினமும், இன்டெர்னெட் ல சாட்டிங் முலமா பேசிக்கறாங்க..இந்த தொழில் நுட்ப வளர்ச்சி மட்டும் இல்லைனா, பாவம் ஒரு குடும்பத்துல ஒருதர ஒருதர் பாத்துக கூட முடியாது..
இப்படி ஒரு குடும்பத்த சேத்து , வாழ்கைய சிறப்பாக்கற , தொழில் நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை நிச்சயம் மேம்படுத்துகிறது என்று கூறி விடை பெறுகிறேன்.

மேலும் வாதங்களோடு மீண்டும் வருகிறேன்.

நன்றி
காயத்ரி

idhuvum kadanthu pogum

மேலும் சில பதிவுகள்