தக்காளி கிரேவி

தேதி: April 3, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

தக்காளி - கால் கிலோ
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 8 பல்
பெரிய வெங்காயம் - கால் கிலோ
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - 2 கொத்து
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை மேசைக்கரண்டி
அரிசி மாவு / சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி


 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேக வைக்கவும். ஆறியதும் தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு 2 நிமிடத்திற்கு நன்கு வதக்கவும்.
2 நிமிடம் கழித்து இஞ்சி, பூண்டு விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு தக்காளி விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும்.
அதன் பின் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து கொதிக்கும் தக்காளி கிரேவியில் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான தக்காளி கிரேவி தயார்.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு. சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hai,
படங்களும், செய்முறை விளக்கமும் சூப்பர். இதில் அரிசிமாவிற்க்கு பதில், பொரிகடலைமாவை கரைத்து ஊற்றினால் கூடுதல் சுவை கிடைக்கும்.

இன்று இரவு இட்லிக்கு உங்கள் தக்காளி கிரேவி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.ஒரு நல்ல ரெசிபி சொல்லி கொடுத்ததற்கு நன்றி.

Expectation lead to Disappointment

This arusuvai samayal network is very useful for me to cook and doing hand works
Life is short; Make it sweet